Sunday 22 May, 2011

இந்து மதம் - I

                                     
" இந்து மதம் "    

  மதம் என்றால் என்ன  ?

ஒரு மதம் பிடித்த யானையை பலத்த சங்கிளிலியால் கேட்டிபோடுவதை போல வாழ்கையில் நெறி கெட்டு  திரியும் மனிதனை நல் வழி படுத்துவதே மதங்கள் ஆகும் .உலகில் எத்தனயோ மதங்கள் உள்ளன அனால் அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே மனிதனை அற நெறியில் செல்ல வைப்பதே. அப்படி பல மதங்களில் ஒன்றே நம் இந்து மதம் ஆகும். பலவற்றில் ஒன்று என்று சொல்லுவதை விட அனைத்திலும் சிறந்தது என்று சொல்லுவதே சிறப்பாகும்.

அப்படி என்ன சிறப்பு இருக்கிறது நம் இந்து மதத்தில் ?

           நம்  மதத்தை இந்து மதம் என்று சொல்லுவதை விட சனாதன தர்மம் என்று  சொல்லுவதே சிறப்பாகும் . இறைவனை அடைய நாம் செல்லும் இந்த வழியை சனாதன தர்மம் என்றே நம் முன்னோர்களால் பின் பற்றப்பட்டது . "இந்து மதம் " என்ற பெயர் அன்னியர்களால் இட பட்டது . அதாவது சிந்து நாகரிக மக்களால் பின் பற்ற பட்ட சனாதன தர்மமே இந்து மதம் என்று அன்னியர்களால் அழைக்கப்பட்டது. இது நமக்கு இடையில் வந்த பெயர் ஆகும்.
இந்து மதம் யாராலும் உருவாக்க பட்டதல்ல ....எப்போது தோன்றியது என்ற யாராலும் கணிக்க முடியவில்லை. உதாரணமாக கிறிஸ்து மதம் ஏசுவுக்கு பின் தோன்றியவை , முஸ்லிம் மதம் முகமது நபியால் உருவாக்க பட்டவை , பௌத்த மதம் புத்தருக்கு பின் தோன்றியவை அனால் நம் இந்து மதமோ இப்படி யாராலும் உருவாக்க பட்டது அல்ல.இது பல யுகங்களை கடந்து நிற்க்கிறது.

யுகங்கள் என்றால் என்ன ?

காலங்களின் அளவே யுகம் என இந்து மதங்களில் அழைக்கபடுகிறது. யுகங்கள் மொத்தம் நான்கு , அவை
1 )  க்ருதயுகம் 
2 ) திரேதாயுகம்
3 ) துவாபரயுகம்
4)  கலியுகம் 

என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.இப்பொழுது நாம் வாழும் இந்த யுகம் கலியுகம் ஆகும்.இப்படி பல யுகங்களை கடந்து வந்துள்ளது நம் இந்து மதம்.

நான்கு வேதங்கள் , உபநிதங்கள் , மற்றும் பல புராணங்கள் , சடங்கு சம்பிரதாயங்களை  கொண்டது நம் இந்து மதமாகும்.ஒவ்வொன்றும் மனிதர்களை நல் வழி படுத்த வியாசர் மற்றும் பல முனிவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த அருள் கொடைகளாகும்.

வேதங்கள் என்றால் என்ன ?

மந்திரங்கள் மற்றும் இறை துதிபாடல்களை உள்ளடக்கியதே வேதங்கள் ஆகும்.வேதங்கள் மொத்தம் நான்கு வகை , அவை 

1 ) ரிக் வேதம்
2 ) யஜுர் வேதம்
3 ) அதர்வண  வேதம்
4 ) சாம வேதம்  என இப்படி நான்கு  வேதங்கள்  ஆகும் .


தொடரும் ........









Friday 13 May, 2011

அறிமுகம்

                                                   
அனைவருக்கும் வணக்கம் , இது நமது ஹிந்து மதத்தின் அருமையும் ,பெருமையும்  பற்றி அறிந்து கொள்ள நான் அமைத்த ஒரு சிறந்த மின்தளமாகும்.இதில் நான் கேட்டு மற்றும் படித்து அறிந்த சில ஆன்மிக தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள சிறந்த வழியாகும் என நான் நம்புகிறேன்.அப்படி இதில் நான் பகிர்ந்து கொள்ளவிருக்கும் அல்லது பகிர்த்துகொண்ட கருத்துகளில் ஏதும் பிழை இருந்தால் தயவு செய்து அதை  மன்னிக்கவும்.

இப்படிக்கு ,
சங்கர் சேட்