Friday 16 December, 2011

இந்துமதம் -14


                                                                  



பரமாத்மாவின் வடிவம் என்ன ? (1)

          நமது இந்துமதத்தில் இறைவனின் வடிவம் ஆன்ம( ஜோதி / ஒளி ) வடிவம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்பதையும் அது எப்படி என்பதையும் நாம் இந்த பதில் காண்போம்.

              பல சித்தர்களும் , ரிஷிகளும் ,ஞானிகளும் , வள்ளலார் மற்றும்  அய்யா வைகுண்டர் போன்றவர்கள் இறைவன் ஜோதி வடிவானவன் என்று கூறியுள்ளார்கள்.சரி முதலில் இறைவனுக்கு வடிவம் உண்டா என்பதை முதலில் பார்போம் . எந்த ஒரு பொருளையும் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் உருவாக்கும் கருவி , உருவாக்கும் நபர் , மூல பொருள் என்ற மூன்றும் முக்கியம். இவைகளில் ஒரு  பொருளை உருவாக்க மூல பொருள் இல்லை என்றால் எந்த ஒரு பொருளும் உருபெற முடியாது , எதையும் உருவாக்கவும் முடியாது. அப்படி இருக்கையில் நமெக்கெல்லாம் உருவம் கொடுக்கும் இறைவனும் அங்கே ஒரு உருவாக்கும் நபராக இருந்தால் தானே நாம் மற்றும் இந்த அண்டங்கள் வடிவம் பெறுவது  சாத்தியம். நமது வேதங்களின்  படி நமக்குள் இருக்கும் ஆன்மா என்பது பரமாத்மாவில் இருந்து தோன்றிய ஒரு சிறிய தீ பொறி போன்றது. இந்த அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் பரமாத்மாவை மூல பொருளாய் கொண்டு தோன்றியவை. எப்படி மண்ணில் இருந்து  பல மண்பாண்டங்கள் உருவாகிறதோ அதே போல்தான் நம்முடைய தோற்றங்களும். சரி அங்கே மண் என்ற மூல பொருள் இல்லை என்றால் மண்பாண்டங்கள் தோன்றுவது எப்படி . அதேபோல் மூல பரம்பொருள் ஒரு வடிவமும்  இல்லாமல் இருந்தால்  நாம் வடிவம் பெறுவது எப்படி ???? . நம் முன்னோர்கள் இறைவன்  மூன்று நிலைகளில் இருப்பதாக கூறுகின்றனர் அவை ரூபம் , அருபம் , அருரூபம் .   

            ரூபம் என்றால் இறைவன் தற்காலிகமாக  ஒரு வடிவத்தை பெறுவது , எடுத்துகாட்டாக இந்த பூமியில் தர்மத்தை காக்க  இறைவன் எத்தனையோ அவத்தாரம் அவ்வபோது எடுத்துள்ளார் அல்லவா ??? அதைத்தான் இறைவனின் ரூபம் நிலை என்கிறோம் . ஆனால் இந்த நிலை நிரந்தரம் அல்ல . பிறகு அருபம் , அருபம் என்றால் எந்த ஒரு வடிவமும் இல்லாமல் இருப்பது இது இறைவன் எந்த ஒரு தொழிலையும் செய்யாமல் இருக்கும் நிலை .இது இந்த உலகம் , அண்டம் மற்றும் உயிரினங்கள் அனைத்தும்  அழிந்து ஒடுங்கி இருக்கும் நிலை. ஆனால் இறைவன் எந்த ஒரு தொழிலையும் செய்யாமல் இருப்பதை விரும்பவில்லை . இதற்க்கு காரணம் நாம் பிரம்ம சூத்திரத்தில் காணலாம். பகவத் கீதையில் கூட கிருஷ்ண பரமாத்மா இதை பற்றி கூறியுள்ளார். எனவே இந்த நிலையும் தற்காலிக நிலையே ஆகும். சரி அப்ப இறைவன் எந்த நிலையில் தான் இருக்கிறார் என்றால் உருவமும் அல்லாமால் , அருபமும் அல்லாமல் இரண்டும் கலந்தே உள்ள நிலையில்த்தான்  படைத்தல் காத்தல் ,அழித்தல் என தன் தொழிலை செய்து  கொண்டிருக்கிறார் என்கின்றது நம் வேதங்கள். சரி இனி அந்த அருரூபம் நிலை எப்படி பட்டது என்று பாப்போம். அதை எப்படி கண்டு  பிடிப்பது ??? ஒன்று நாம் நம் சொந்த முயற்சி மூலம் கண்டு  அறியலாம் அல்லது அதனை கண்டு அறிந்தவர் என்ன கூறியுள்ளார்கள் என்பதை கேட்டு அறிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒன்று சொல் புத்தி இருக்க வேண்டும் அல்லது சுய புத்தி இருக்கவேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நமக்கு இரண்டுமே இல்லை என்பதுத்தான் உண்மை. சரி இனி நம் முன்னோர்கள் பரமாத்மாவின் வடிவம் என்ன என்பதை பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்று ஆராய்வோமா ?.ஏன் என்றால் நம் முன்னோர்களான ஞானிகள் , ரிஷிகள் , மற்றும் சித்தர்கள் இறைவனை கண்டு அறிந்திருகின்றார்கள். அவர்கள் மட்டும் என்வாறு கண்கொண்டு பிடித்தார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் வரும் ?. அவர்கள் ஒன்றும் நம்மை போல் முக்கை சுத்தி தலையை தொடுபவர்கள் அல்லர். நாம் நம் முன்னோர்கள் இறைவனை பற்றி என்ன கூறியுலார்கள் என்று ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் இறைவன் ஒளி (ஜோதி) வடிவானவன் என்று கூறுகிறார்கள். அது எப்படி என்பதையும்  காண்போம்.

              நாம் நமது வேதங்களை புரட்டி பார்த்தால் நாம் என்பது நமது உடல் அல்ல ஆன்மா என்றே கூறகிறது. ஆன்மா என்றால் என்ன ? எளிதாக சொல்ல வேண்டும் என்றால்  உயிர் என்று சொல்லலாம், சரி ஒருவன் நடமாடும் மனிதன் அல்லது பிணம் என்று எதை வைத்து கூறுகிறோம்..உடலை வைத்தா ? அல்லது உயிரை வைத்தா ? . உயிரை வைத்துதானே ..!!! உடலில் உயிர் இருந்தால் அவன் மனிதன்... இல்லை என்றால் அது பிணம் அல்லவா. சரி அந்த ஆன்மாவின் தோற்றம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் ஆன்மாவின் பிறப்பிடம் பரமாத்மா என்கிறார். ஒவ்வொரு  ஆன்மாவும் பரமாத்மாவின் அம்சம் என்கிறார். எத்தனையோ ஆன்மா என்னில்  இருந்து பிரிந்தாலும் நான் எனது இயல்பில் இருந்து சிறிதளவும் குறைவதில்லை என்கிறார். அப்ப நமக்குள் இருக்கும் ஆன்மா என்பது அந்த பரமாத்மாவின் அம்சம் என்பது தெளிவாகிறது அல்லவா இங்கு.  சரி அந்த ஆன்மாவின் நிலையை பற்றி கிருஷ்ண பரமாத்மா என்ன கூறுகிறார் என்றால் அதை நீரால் கழுவ முடியாது, கத்தியால் கிழிக்க முடியாது , தீயால் எரிக்க முடியாது என்கிறார் . அப்படியென்றால் அது என்ன வடிவமாக இருக்கும் என்று குழம்புவது தெரிகிறது !!! ...வருவோம் ஒவ்வொன்றாக  அலசி ஆராய்வோம். நமக்கு ஒருவிஷயம் மட்டும்  தெளிவாகிறது அது .. நம்முடைய ஆத்மா என்பது  பரமாத்மாவின் அம்சம் என்று.  அப்ப நம்முடைய ஆத்மாவை அறிந்தால் நாம் பரமாத்மாவை அறிய முடியும்தானே . பொதுவாக நம் வீட்டில் நம் அம்மா சாதம் வெந்துவிட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பார் ? அனைவருக்கும்  தெரிந்ததுதான்  ஒரு சோற்றை பதம் பார்த்தாலே போதும்தானே . இதைத்தானே நம் முன்னோர்கள் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறியுள்ளார்கள் . அதன் படி நாம் நமது ஆத்மாவை அறிந்துகொண்டாலே அந்த பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியும். இனி நாம் நம் ஆத்மாவின் வடிவம் என்ன என்பதையும் அதை எப்படி அறிவது என்பதயும் அடுத்த பதிவில் ஆராய்வோம் !!!! காத்திருங்கள் !!!!!!


( தொடரும் )

Tuesday 6 December, 2011

இந்துமதம் -13

                                                        


எத்தனை எத்தனை நாமங்கள் ?

   நண்பர்களே இன்று நாம் இந்த தலைபிற்க்கு போகும் முன் ஒரு நல்ல அரசியல்வாதி மற்றும் சிறந்த மனிதர் என்று எல்லோராலும் போற்ற பட்ட ஒருவர் கூறிய கறுத்த முதலில் கூற விரும்புகிறேன் அந்த கருத்து இதோ ...

"பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது? "
   
        இதை யார் கூறியிருக்க வேண்டும் என்று சிந்திக்கின்றீர்களா ? சிரமம் வேண்டாம் நானே கூறுகிறேன் இதை சொன்னவர் வேற யாரும் இல்லை கல்விக்கு கண் திறந்தவர் என்று எல்லோராலும் போற்ற பட்ட பெருந்தலைவர் காமராஜர் தான் . இதில யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் போலியாக பக்திவேசம் போடுபவர்களை மட்டுமே விமர்சிக்கிறார். சரி எது எப்படி போனாலும் எனக்கு உறுத்தியது அவர் கூறிய ஒரு வார்த்தைத்தான் அது என்ன வென்றால் " எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது? " என்ற ஒன்றுத்தான். சரி இதை ஏன் ஒரு தலைப்பாக எடுக்ககூடாது என்ற எண்ணம் தோன்றியது எனக்கு .சரி இனி தலைப்பிற்கு போவோம்.

             பொதுவாக நமது இந்துமதத்தில் கடவுளுக்கு பல பெயர் இருக்கின்றது .அந்த பெயர் அனைத்தும் நாம் சூட்டியதா அல்லது காமராஜர் கேட்டது போல் கடவுளே தனக்கு இதுதான் பெயர் என்று சூட்டியதா என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் மனிதனை தவிர எந்த ஒரு பொருளாவது தனக்கு இதுதான் பெயர் என்று நம்மிடம் என்றாவது கூறியது உண்டா ? பிறகு அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தது யார் ?  நாம் தானே ? எதற்காக பெயர் வைத்தோம் நம்மை மற்றவைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டத்தானே ? இப்படி எல்லாவற்றுக்கும் பெயர் வைத்த நாம் தான் இறைவனுக்கும் பல பெயர்களை வைத்தோம். சரி ஒரே இறைவனுக்க இத்தனை பெயர்களை வைத்தோம் என்றால் இல்லை ஒவ்வொரு கடவுளுக்கும் ஆயிரம் ஆயிரம் பெயர்களை வைத்தோம். இப்போது பலருக்கும் ஒரு கேள்வி எழும் எல்லாம் மதமும் ஒரே கடவுள் என்று கூறும்பொழுது இந்து மதம் மட்டும் ஏன் பல கடவுள்  மற்றும் பல பெயர்களை  கொண்டுள்ளது என்று . இதற்க்கு நான் ஏன் ஏற்கனவை தனி பதிவு போட்டுள்ளேன் இருந்தும் இங்கும் நான் அதை விளக்க விரும்புகிறேன். ஓடும் ஆற்றில் இருந்து ஒரு டம்ளரில் தண்ணீரை பிடித்து இதான் தண்ணீரின் வடிவம் என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதை போலத்தான் இதுதான் கடவுளின் வடிவம் மற்றும் பெயர் என்று கூறுவது. ஏன் என்றால் ஆற்று தண்ணீரை வட்ட பாத்திரத்தில் பிடித்தால் அது வட்ட வடிவம் பெரும் அதை போல் ஒரு சதுர பாத்திரத்தில் பிடித்தால் சதுரம் வடிவம் பெரும் பிறகு எப்படி  இதுதான் தண்ணீரின் வடிவம் என்று நாம் ஆணித்தரமாக கூற முடியும்?.  நாம் பிடிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற போல் வடிவம் தரும் தண்ணிரை போலத்தான் இறைவனும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான வடிவம்  இப்படியாக தோன்றியதுதான் பல கடவுள். நாம் எந்த பாத்திரத்தில் பிடித்தாலும் அந்த தண்ணீரின் வடிவம்தான் வேறே தவிர அதல் இருக்கும் தண்ணீர் ஒன்றுதான். நாம் இறைவனை எந்த வடிவில் வழிபட்டாலும் அந்த இறைவன் ஒருவனே என்பதுதான் உண்மை.

                                  சரி இனி பல பெயர்களுக்கு வருவோம். இதற்கும் ஒரு உதாரணத்தை எடுத்துகொள்வோம் ....தங்க கட்டியை  எடுத்துகொள்வோம்  மனிதன் தன் காது ,கை , கழுத்து மற்றும் மூக்கில் அணிகலன்களாக அணிய தங்கத்தை உருக்கி விருப்பதிர்க்கேற்றாற்போல் வடிவமைக்கிறான். பிறகு அவை அனைத்திற்கும் கம்மல் , வளையல் , மூக்குத்தி என பெயர்களை வைக்கிறான் எதற்காக ? , ஒவ்வொன்றையும் தனி தனியாக அடியாள படுத்திகொள்வதர்காக. இதே பெயர்கள் ஒவ்வொரு மொழிக்கும் வேறுபடுகிறது அல்லவா, இப்படியாக தங்கம் என்ற ஒன்றில் இருந்து வேறுவடிவம் பெற்று பலமொழிகளில் பல பெயர்களை பெறுவது போலத்தான் ஒரே கடவுளின் தோற்றம் வேறுபட்டு பல வடிவம் கொண்டு ஒவ்வொருவரின் விருப்பதிர்க்கேற்ற பல பெயர்களை பெறுகிறது. அதைபோல் எப்படி தோடு , வளையல் ,மூக்குத்தியை உருக்கினால் மீண்டும் தங்க கட்டியாக மாறுகிறதோ அதை போல் ஒரே பரமாத்மாவினுள் எல்லா வடிவங்கள் மற்றும் பெயர்களும் அடங்கிவிடுகிறது.

                         இப்போதும் சிலபேர் ஒரு கேள்வி கேட்பார்கள் அது என்ன கேள்வி என்றால் எல்லா பெயர்களும் ஒரே கடவுளை குறிக்கிறது என்றால் ராமர் கோவிலுக்கு சென்று பிள்ளையாரப்பா என்னை காப்பாற்று என்று கும்பிட்டால் ஏன் முட்டாள் என்கிறீர்கள் என்று ...அவர்களிடம் ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் ராமரை பார்த்து பிள்ளயார் என்று கூறினால் உங்களை முட்டாள் என்று கூறுவது மனிதனா அல்லது ராமனா ? ...கருவறையில் இருக்கும் கடவுள் உங்களை அப்படி கூறவில்லையே ..மாறாக மனிதன் தானே கூறுகிறான்.ஏன் என்றால் இவ்வாறு  பெயர்கள் வைத்தது அவன்தானே . வளையலை பார்த்து மூக்குத்தி என்றால் முட்டாள் என்று தானே கூறுவான் ஏன் என்றால் இரண்டிற்கும் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது அல்லவா ?.எனவே மனிதன்தான் பெயர் மற்றும் வடிவங்களை கொண்டு வேறுபடுத்தி கொள்கிறானே தவிர இறைவன் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.
                            உதரணாமாக நீங்கள்  நாயை பார்த்து பன்றி என்று கூறினால் கோப படுவது  நாயா அல்லது மனிதனா ?...நாய்க்கு கூட தெரியாது தன் பெயர் நாய் என்று பிறகு ஏன் அது கோப பட வேண்டும். ஒருமுறை ஒரு நாத்திகனும் ஒரு ஆத்திகனும் விவாதித்து கொண்டிருந்தார்கள் ..விவாதம் உச்சத்தை தாண்டி அந்த நாத்திகன் கடவுளை பார்த்து நாய் என்றும் கழுதை என்றும் திட்ட தொடங்கினான்...இதை கேட்டு வருத்தம் அடைந்த அந்த ஆத்திகன் இறைவனிடம் " இறைவா இவன் உங்களை இப்படியெல்லாம் தூற்றுகிரானே உங்களுக்கு கோபம் வர வில்லையா என்று " அதற்க்கு இறைவன் கூறினார் " பக்தா உயிரினங்களில் இது மேல் இனம் இது தாழ்ந்த இனம் என்று வேறுபடுத்தி பார்ப்பது மனிதன் மட்டுமே ...இதற்க்கு இந்த பெயர் என்று கூறுவதும் மனிதனே...!!! நாயை பார்த்து நாய் என்று கூப்பிட்டால் நாயே கண்டுகொள்ளமால் இருக்கும் பொழுது எல்லா உயிர்களையும் சம நோக்குடன் பார்க்கும் நான் ஏன் அவன் கூறியதை கண்டு கொள்ள வேண்டும். மனிதா ! உயிரினங்களின் வடிவம் மற்றும் பெயரை  கொண்டு நீ வேறுபடுத்தி பார்க்கிறாய் நான் அதனுள் இருக்கும் ஆன்மாவை மட்டும் பார்கிறேன். எனவே எனக்கு அவன் கூறுவதை கண்டு கோபம் வருவதில்லை...வடிவம் மற்றும் பெயர்களை கொண்டு நீ வேறுபடுத்தி பார்பதினால் உனக்கு கோபம் வருகிறது " என்று கூறினார்.
                      
                           நண்பர்களே  எங்கும் பறந்து விரிந்து இருக்கும் பரமாத்மாவை இதுதான் பெயர் இதுதான் வடிவம் என்று நாம் நினைத்து சண்டை இட்டுகொல்லாமல் நமக்கு எது எளிதான வடிவமோ அல்லது எளிதான பெயரோ அதை கொண்டு இறைவனிடம்  நம் ஆத்மாவை லயிக்க செய்ய வேண்டும் என்கிறது இந்துமதம்...! இதைதான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் ,

யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்த யார்சிதுமிச்சதி|
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் ||7-21|| இதற்க்கு தமிழ் விளக்கம் ,

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

(தொடரும்)