Tuesday, 6 December 2011

இந்துமதம் -13

                                                        


எத்தனை எத்தனை நாமங்கள் ?

   நண்பர்களே இன்று நாம் இந்த தலைபிற்க்கு போகும் முன் ஒரு நல்ல அரசியல்வாதி மற்றும் சிறந்த மனிதர் என்று எல்லோராலும் போற்ற பட்ட ஒருவர் கூறிய கறுத்த முதலில் கூற விரும்புகிறேன் அந்த கருத்து இதோ ...

"பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது? "
   
        இதை யார் கூறியிருக்க வேண்டும் என்று சிந்திக்கின்றீர்களா ? சிரமம் வேண்டாம் நானே கூறுகிறேன் இதை சொன்னவர் வேற யாரும் இல்லை கல்விக்கு கண் திறந்தவர் என்று எல்லோராலும் போற்ற பட்ட பெருந்தலைவர் காமராஜர் தான் . இதில யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் போலியாக பக்திவேசம் போடுபவர்களை மட்டுமே விமர்சிக்கிறார். சரி எது எப்படி போனாலும் எனக்கு உறுத்தியது அவர் கூறிய ஒரு வார்த்தைத்தான் அது என்ன வென்றால் " எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது? " என்ற ஒன்றுத்தான். சரி இதை ஏன் ஒரு தலைப்பாக எடுக்ககூடாது என்ற எண்ணம் தோன்றியது எனக்கு .சரி இனி தலைப்பிற்கு போவோம்.

             பொதுவாக நமது இந்துமதத்தில் கடவுளுக்கு பல பெயர் இருக்கின்றது .அந்த பெயர் அனைத்தும் நாம் சூட்டியதா அல்லது காமராஜர் கேட்டது போல் கடவுளே தனக்கு இதுதான் பெயர் என்று சூட்டியதா என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் மனிதனை தவிர எந்த ஒரு பொருளாவது தனக்கு இதுதான் பெயர் என்று நம்மிடம் என்றாவது கூறியது உண்டா ? பிறகு அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தது யார் ?  நாம் தானே ? எதற்காக பெயர் வைத்தோம் நம்மை மற்றவைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டத்தானே ? இப்படி எல்லாவற்றுக்கும் பெயர் வைத்த நாம் தான் இறைவனுக்கும் பல பெயர்களை வைத்தோம். சரி ஒரே இறைவனுக்க இத்தனை பெயர்களை வைத்தோம் என்றால் இல்லை ஒவ்வொரு கடவுளுக்கும் ஆயிரம் ஆயிரம் பெயர்களை வைத்தோம். இப்போது பலருக்கும் ஒரு கேள்வி எழும் எல்லாம் மதமும் ஒரே கடவுள் என்று கூறும்பொழுது இந்து மதம் மட்டும் ஏன் பல கடவுள்  மற்றும் பல பெயர்களை  கொண்டுள்ளது என்று . இதற்க்கு நான் ஏன் ஏற்கனவை தனி பதிவு போட்டுள்ளேன் இருந்தும் இங்கும் நான் அதை விளக்க விரும்புகிறேன். ஓடும் ஆற்றில் இருந்து ஒரு டம்ளரில் தண்ணீரை பிடித்து இதான் தண்ணீரின் வடிவம் என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதை போலத்தான் இதுதான் கடவுளின் வடிவம் மற்றும் பெயர் என்று கூறுவது. ஏன் என்றால் ஆற்று தண்ணீரை வட்ட பாத்திரத்தில் பிடித்தால் அது வட்ட வடிவம் பெரும் அதை போல் ஒரு சதுர பாத்திரத்தில் பிடித்தால் சதுரம் வடிவம் பெரும் பிறகு எப்படி  இதுதான் தண்ணீரின் வடிவம் என்று நாம் ஆணித்தரமாக கூற முடியும்?.  நாம் பிடிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற போல் வடிவம் தரும் தண்ணிரை போலத்தான் இறைவனும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான வடிவம்  இப்படியாக தோன்றியதுதான் பல கடவுள். நாம் எந்த பாத்திரத்தில் பிடித்தாலும் அந்த தண்ணீரின் வடிவம்தான் வேறே தவிர அதல் இருக்கும் தண்ணீர் ஒன்றுதான். நாம் இறைவனை எந்த வடிவில் வழிபட்டாலும் அந்த இறைவன் ஒருவனே என்பதுதான் உண்மை.

                                  சரி இனி பல பெயர்களுக்கு வருவோம். இதற்கும் ஒரு உதாரணத்தை எடுத்துகொள்வோம் ....தங்க கட்டியை  எடுத்துகொள்வோம்  மனிதன் தன் காது ,கை , கழுத்து மற்றும் மூக்கில் அணிகலன்களாக அணிய தங்கத்தை உருக்கி விருப்பதிர்க்கேற்றாற்போல் வடிவமைக்கிறான். பிறகு அவை அனைத்திற்கும் கம்மல் , வளையல் , மூக்குத்தி என பெயர்களை வைக்கிறான் எதற்காக ? , ஒவ்வொன்றையும் தனி தனியாக அடியாள படுத்திகொள்வதர்காக. இதே பெயர்கள் ஒவ்வொரு மொழிக்கும் வேறுபடுகிறது அல்லவா, இப்படியாக தங்கம் என்ற ஒன்றில் இருந்து வேறுவடிவம் பெற்று பலமொழிகளில் பல பெயர்களை பெறுவது போலத்தான் ஒரே கடவுளின் தோற்றம் வேறுபட்டு பல வடிவம் கொண்டு ஒவ்வொருவரின் விருப்பதிர்க்கேற்ற பல பெயர்களை பெறுகிறது. அதைபோல் எப்படி தோடு , வளையல் ,மூக்குத்தியை உருக்கினால் மீண்டும் தங்க கட்டியாக மாறுகிறதோ அதை போல் ஒரே பரமாத்மாவினுள் எல்லா வடிவங்கள் மற்றும் பெயர்களும் அடங்கிவிடுகிறது.

                         இப்போதும் சிலபேர் ஒரு கேள்வி கேட்பார்கள் அது என்ன கேள்வி என்றால் எல்லா பெயர்களும் ஒரே கடவுளை குறிக்கிறது என்றால் ராமர் கோவிலுக்கு சென்று பிள்ளையாரப்பா என்னை காப்பாற்று என்று கும்பிட்டால் ஏன் முட்டாள் என்கிறீர்கள் என்று ...அவர்களிடம் ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் ராமரை பார்த்து பிள்ளயார் என்று கூறினால் உங்களை முட்டாள் என்று கூறுவது மனிதனா அல்லது ராமனா ? ...கருவறையில் இருக்கும் கடவுள் உங்களை அப்படி கூறவில்லையே ..மாறாக மனிதன் தானே கூறுகிறான்.ஏன் என்றால் இவ்வாறு  பெயர்கள் வைத்தது அவன்தானே . வளையலை பார்த்து மூக்குத்தி என்றால் முட்டாள் என்று தானே கூறுவான் ஏன் என்றால் இரண்டிற்கும் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது அல்லவா ?.எனவே மனிதன்தான் பெயர் மற்றும் வடிவங்களை கொண்டு வேறுபடுத்தி கொள்கிறானே தவிர இறைவன் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.
                            உதரணாமாக நீங்கள்  நாயை பார்த்து பன்றி என்று கூறினால் கோப படுவது  நாயா அல்லது மனிதனா ?...நாய்க்கு கூட தெரியாது தன் பெயர் நாய் என்று பிறகு ஏன் அது கோப பட வேண்டும். ஒருமுறை ஒரு நாத்திகனும் ஒரு ஆத்திகனும் விவாதித்து கொண்டிருந்தார்கள் ..விவாதம் உச்சத்தை தாண்டி அந்த நாத்திகன் கடவுளை பார்த்து நாய் என்றும் கழுதை என்றும் திட்ட தொடங்கினான்...இதை கேட்டு வருத்தம் அடைந்த அந்த ஆத்திகன் இறைவனிடம் " இறைவா இவன் உங்களை இப்படியெல்லாம் தூற்றுகிரானே உங்களுக்கு கோபம் வர வில்லையா என்று " அதற்க்கு இறைவன் கூறினார் " பக்தா உயிரினங்களில் இது மேல் இனம் இது தாழ்ந்த இனம் என்று வேறுபடுத்தி பார்ப்பது மனிதன் மட்டுமே ...இதற்க்கு இந்த பெயர் என்று கூறுவதும் மனிதனே...!!! நாயை பார்த்து நாய் என்று கூப்பிட்டால் நாயே கண்டுகொள்ளமால் இருக்கும் பொழுது எல்லா உயிர்களையும் சம நோக்குடன் பார்க்கும் நான் ஏன் அவன் கூறியதை கண்டு கொள்ள வேண்டும். மனிதா ! உயிரினங்களின் வடிவம் மற்றும் பெயரை  கொண்டு நீ வேறுபடுத்தி பார்க்கிறாய் நான் அதனுள் இருக்கும் ஆன்மாவை மட்டும் பார்கிறேன். எனவே எனக்கு அவன் கூறுவதை கண்டு கோபம் வருவதில்லை...வடிவம் மற்றும் பெயர்களை கொண்டு நீ வேறுபடுத்தி பார்பதினால் உனக்கு கோபம் வருகிறது " என்று கூறினார்.
                      
                           நண்பர்களே  எங்கும் பறந்து விரிந்து இருக்கும் பரமாத்மாவை இதுதான் பெயர் இதுதான் வடிவம் என்று நாம் நினைத்து சண்டை இட்டுகொல்லாமல் நமக்கு எது எளிதான வடிவமோ அல்லது எளிதான பெயரோ அதை கொண்டு இறைவனிடம்  நம் ஆத்மாவை லயிக்க செய்ய வேண்டும் என்கிறது இந்துமதம்...! இதைதான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் ,

யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்த யார்சிதுமிச்சதி|
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் ||7-21|| இதற்க்கு தமிழ் விளக்கம் ,

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

(தொடரும்)

48 comments:

  1. அருமை நண்பரே , நல்ல தலைப்பு, நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  2. @சங்கர் :

    நண்பரே, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களுடன் விவாதிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன், தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிறிது இடைவெளி ஏற்பட்டுவிட்டது. உங்கள் கட்டுரையை படித்தேன். எதிலும் யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி நீங்களே கேள்வியும் கேட்டு நீங்களே பதிலும் எழுதியுள்ளீர்கள். இருப்பினும் என் மனதிற்குள் சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    ஒரே இறைவனை பல வடிவங்களில், பல பெயர்களில் வழிபடுவதற்கு ஏதுவாக தங்கம் நீர் என்றெல்லாம் உதாரணம் சொன்னீர்கள். இப்போது எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது, அதற்கு பதில் தாருங்கள்.

    இந்தக்கட்டுரையில் நீங்கள் ஒன்றை தெளிவாக குறிப்பிட்டுவிட்டீர்கள். அதாவது இறைவன் ஒருவன் தான் ஆனால் அவனை மனிதர்கள் தான் அவர்களது விருப்பத்திற்கேற்றவாறு பெயர் வைத்து உருவகப்படுத்தி வணங்குகிறார்கள் என்பது தான் அது. ஆக இந்து மதம் கூறும் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவையே, கடவுள் கூறியது அல்ல, என்பதற்கு நீங்களே இந்த கட்டுரையில் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் கீதையும் வேதங்களும் இறைவனின் வார்த்தைகள் தான் என்னும் உங்களின் வாதத்தை நீங்களே முறித்துவிட்டீர்கள். அல்லது உங்களின் இந்தக்கட்டுரைக்கு அந்த வாதங்கள் முரண்படுகின்றது. இதற்கு விளக்கம் தரவும்.

    ReplyDelete
  3. அரபாத் ,

    நீங்கள் இன்னும் மனிதன் வார்த்தை கடவுள் வார்த்தை என்ற கொள்கையை தூக்கி போடவில்லை என்பது எனக்கு தெளிவாகே தெரிகிறது. இந்துமதத்தை பற்றி அறிய வேண்டுமானால் முதலில் தாங்க ஒரு இஸ்லாமியர் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். ஏன் என்றால் நான் இஸ்லாமியன் என்ற எண்ணம் இருந்தால் "குரான் ஒன்றே இறைவனின் வேதம் இஸ்லாம் ஒன்றே சிறந்த மார்க்கம் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும் . நான் ஏற்கனவே கூறிவிட்டேன் கிணற்று தவளைக்கு சமுத்திரத்தை காண வேண்டும் என்றால் முதலில் கிணற்றை விட்டு வெளியே வரவேண்டும், அதைவிடுத்து அது எப்படி இது எப்படி என்று கிணற்றுக்குள்ளே இருந்து கொண்டு கேட்டால் எந்த ஒரு விளக்கமும் பயன் தராது.
    குரான்தான் இறைவன் வேதம் என்று நிருபிப்பதற்கு நீங்கள் கூறுவது குரானில் விஞ்ஞானத்தை பற்றியெல்லாம் கொடுத்துள்ளது என்று ...நான் உங்களிடம் கேட்கிறேன் எந்த ஒரு விஞ்ஞானியும் குரானை படித்து நான் இதை வைத்துதான் கண்டு பிடித்தேன் என்று இதுவரை கூறினார்களா (அப்படி இருந்தால் இன்று உலகத்தையே ஆட்டி படைப்பது கணினி அதை பற்றி அல்லா என்ன கூறியுள்ளார் ?) ...சரி விஷயத்திற்கு வருவோம் முதலில் இறைவன் ஏன் விஞ்ஞானத்தை பற்றி விளக்க வேண்டும் ?....அவர் விளக்க விட்டாலும் இன்றைய விஞ்ஞானிகள் தானாகவே கண்டு பிடித்துருப்பார்கள் அல்லவா ( இறைவன் கூறாத விஷயத்தையும் இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் )...அப்ப இறைவனின் அறிவும் சாதாரண மனிதனின் அறிவும் ஒன்றா என்ன ? மனிதனால் தானகவே கூற முடிய விஷயத்தை இறைவன் ஏற்கனவே கூறிவிட்டான் என்று நீங்கள் கூறினால் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வித்யாசம் என்ன ?

    ReplyDelete
  4. @ shankar :

    ///***நீங்கள் இன்னும் மனிதன் வார்த்தை கடவுள் வார்த்தை என்ற கொள்கையை தூக்கி போடவில்லை என்பது எனக்கு தெளிவாகே தெரிகிறது.***///

    அது எப்படி ஐயா அவ்வளவு சுலபமாக தூக்கி போட்டுவிட முடியும் ? மனிதனும் கடவுளும் ஒன்றா ?? மனிதனை விடவும் இறைவன் வல்லமை மிக்கவன் அல்லவா ?? இறைவனின் வார்த்தைகளுக்கும் மனிதனின் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்காதா என்ன ??? அந்த வித்தியாசத்தை தான் உங்களுக்கு புரிய வைக்க நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. அரபாத் அவர்களே,

    சிந்திக்காமல் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று நீங்கள் அடிக்கடி எங்களை பார்த்து கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை ..ஏன் என்றால் நீங்களே நபி என்ற ஒரு முன்னோரைத்தான் பின்பற்றுகிறீர்கள். நான் உங்களை ஒன்றை கேட்க விரும்புகிறேன் , நீங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் குரானை பின்பற்றுகிறீர்களா நான் கேட்பது முழுக்க முழுக்க உங்கள் சுய ஆராய்ச்சியை பற்றி ...இல்லை தானே ?. உதாரணமாக ஒன்றை எடுத்துகொள்வோம் தேனீ எப்படி தேனை சேகரிக்கிறது என்று உங்கள் குரான் கூறகிறது அல்லவா (உண்மையா / பொய்யா யாருக்கு தெரியும் ) அதை நீங்கள் (உங்க சுய ஆராய்ச்சி ) ஆராய்ந்து பார்த்ததுண்டா ? இல்லைதானே ?. அப்படி என்றால் அது விஞ்ஞானம் என்று எப்படி கூறுகிறீர்கள் ? ஒரு விஞ்ஞானி ஆராய்து கூறிவிட்டார் என்றுதானே..இப்போது நீங்கள் ஒரு விஞ்ஞானியை பின்பற்றுகிறீர்கள் ... இதில் உங்களுடைய சுய ஆராய்ச்சி என்பது எங்கே உள்ளது ?. நபி கூறியது உண்மையா என்று தெரிந்து கொள்வதற்கு கூட நீங்கள் அறிவியலைத்தான் பின்பற்றுகிறீர்களே தவிர நீங்கள் சுயமாக சோதித்து பார்ப்பதில்லை. ஆகமொத்தம் நீங்களும் யாரவது ஒருவரைத்தான்( மனிதன் ) பின்பற்றி வருகிறீர்கள். பிறகு அடுத்தவர்களை ஏன் குறை கூற வேண்டும் ?.

    மனிதன் கூறியது இறைவன் கூறியது என்ற பாகுபாடு ஏன் வேண்டாம் என்று கூறியதற்கு காரணம் இருக்கிறது . இந்து மதத்தை பொறுத்தவரை நல்லவைகளை இறைவன் மட்டும்தான் கூறவேண்டும் என்றில்லை ஏன் என்றால் அப்படி நாங்கள் நினைத்திருந்தால் திருக்குறள் போன்ற எத்தனையோ நல்ல பிற நூல்கள் என்றோ தீக்கு இரையாகிருக்கும். ஏன் அவ்வாறு நடக்க வில்லை அதுத்தான் எங்களுடய பண்பாடு. ஒருவன் வாழ்வில் திருக்குறளை பின்பற்றி வாழ்ந்தாலே போதும் அவன் இந்த உலக மக்களின் போற்றுதளுக்குரியவனாகிவிடுவான் என்பது எங்களுடய கருத்து. நண்பரே நாங்கள் காணும் இறைவன் வேறு நீங்கள் காணும் இறைவன் வேறு ...நாங்கள் காணும் இறைவன் மனிதர்களிடம் போட்டி போடுவதில்லை நீ பெரிவனா அல்லது நான் பெரியவனா என்று .நாங்கள் காணும் இறைவன் நான் கூறுவதை அப்படியே செய்ய வேண்டும் என்றும் அடம்பிடிப்பதில்லை..நாங்கள் காணும் இறைவன் நல்லவைகளை நான் மட்டுமே கூறுவேன் என்று மனிதர்களிடம் சண்ணடை போடுவதில்லை.

    நல்லவைகளை யார் கூறினாலும் அது நாராயணனின் சொல் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் , தவறை இறைவனே செய்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும் என்றுத்தான் எங்கள் முன்னோர் கூறியுள்ளார்கள். இறைவன் நேரில்வந்து தவறாக கூறியபோதும் நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.!!!! என்று வாதித்த நக்கீரர் போன்ற முன்னோர்களை கொண்டவர்கள் நாங்கள். நாங்களா சிந்திக்காமல் நடக்கின்றோம் ?. பிறர் பிழைகளை மன்னிக்க பழகு என்று கூறிய எங்கள் முன்னோர்கள் சிறந்தவர்களா அல்லது திருடியவன் கையை வெட்டு , அல்லாவை ஏற்காதவனின் பிடரியை வெட்டு என்று கூறிய அல்லா ( நீங்கள் காணும் இறைவன் ) சிறந்தவரா ?

    ReplyDelete
  6. @ arafath
    //மனிதனும் கடவுளும் ஒன்றா ?? மனிதனை விடவும் இறைவன் வல்லமை மிக்கவன் அல்லவா ?? இறைவனின் வார்த்தைகளுக்கும் மனிதனின் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்காதா என்ன ??? அந்த வித்தியாசத்தை தான் உங்களுக்கு புரிய வைக்க நினைக்கிறேன்.//றேன்.

    அது என்ன வித்தியாசம் ? கொஞ்சம் சொல்லுங்களேன். கடவுள் அரபி(வார்தைகள்) மொழியில் மட்டும் தான் பேசுவார்.மனிதர்கள் நிறைய மொழிகள் பேசுவார்கள். அதுவா? கடவுள் இதுவரை ஒருவரிடம் மட்டும் தான் பேசி இருக்கார் வேற யார்கிட்டையும் பேசமாட்டார் அதுவா? அதுக்கு ஆதாரமா புத்தகம்(குரான்) எல்லாம் இருக்கு அது அவரே சொல்லி எழுத சொன்னார். அதுவா? அவர் எது பேசினாலும் புத்தகமா போடணும் அதை மட்டும் தான் நம்பனும் அதுவா ?

    ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. உங்க அல்லா மேல உட்காந்து பார்த்துகிட்டு இருக்கார் அப்படின்னு சொல்றீங்க. அந்த மேல எப்படின்னு சொல்லுங்க. பூமி பந்துக்கு நேர் மேலையா? இல்ல நம்ம தலைக்கு நேர் மேலையா? இரண்டும் வேற வேற 'மேல' அதுவாவது யோசிக்க முடியும்மா ? யோசிச்சு பதில் சொல்லுங்க.

    மீண்டும் ஒருமுறை - உண்மை(யான) தேடலுடன் உங்கள் கேள்வி எனில் நிச்சயம் பதில் அளிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். அதை விடுத்து என் நம்பிக்கை என் புத்தகம் மட்டும் தான் உண்மை என்ற நினைப்பில் உங்கள் கேள்வி எனில் உங்களுடன் விவாதம் நேர விரையம்.

    நன்றி நண்பர் ஷன்கர் அவர்களே.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. @ பிரபு :

    ///***அது என்ன வித்தியாசம் ? கொஞ்சம் சொல்லுங்களேன். கடவுள் அரபி(வார்தைகள்) மொழியில் மட்டும் தான் பேசுவார்.மனிதர்கள் நிறைய மொழிகள் பேசுவார்கள். அதுவா? கடவுள் இதுவரை ஒருவரிடம் மட்டும் தான் பேசி இருக்கார் வேற யார்கிட்டையும் பேசமாட்டார் அதுவா? அதுக்கு ஆதாரமா புத்தகம்(குரான்) எல்லாம் இருக்கு அது அவரே சொல்லி எழுத சொன்னார். அதுவா? அவர் எது பேசினாலும் புத்தகமா போடணும் அதை மட்டும் தான் நம்பனும் அதுவா ? ***///

    நீங்கள் அறியாமையில் கேட்கிறீர்களா இல்லை தெரிந்தே தான் கேட்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. எனினும் உங்களின் கேள்விக்கு விடையளிப்பது என் கடமை. மனிதன் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளுக்கும் இறைவனின் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் கண்டிப்பாக உண்டு. அது என்னவென்றால்......

    1) முரண்பாடு - மனிதனின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்கும், இறைவனின் வார்த்தைகளில் அது இருக்காது. மனிதன் பல்வேறு தருணங்களில் தான் பேசிய வார்த்தைகளுக்கு தானே முரண்பட்டு பேசுபவன், ஏன் என்றால் மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன் வார்த்தைகளை மாற்றி பேசக்கூடியவன், மற்றொரு காரணம் மறதி. சில வருடங்களுக்கு முன் ஒரு விஷயத்தை சொல்லியிருப்பான் இப்போது மறதியின் காரணமாக அதையே மாற்றி கூறுவான். இது மனிதனின் வார்த்தைகளில் இருக்கும் இயல்பு. ஆனால் இறைவனுக்கு மறதியோ சந்தர்ப்ப சூழ்நிலைகளோ கிடையவே கிடையாது. ஆதலால் இறைவனின் வார்த்தைகளில் ஒருபோதும் முரண்பாடு ஏற்படாது. முரண்பாடு இருந்தால் அது இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை அறியலாம்.

    2) எதிர்காலத்தில் நிகழப்போகும் விஷயங்களை முன்னறிவிப்பு செய்வது.

    இறைவனால் மட்டுமே அது முடியும், சாதாரண மனிதனால் அது முடியவே முடியாது.

    3) அறிவியல் உண்மைகளை மனிதன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே முன்னறிவிப்பு செய்வது.

    மனிதன் தன்னுடைய அறிவாற்றலைக்கொண்டு, சிந்தித்து, சோதித்து, அனுபவித்து, கண்ணால் பார்த்து கண்டு அறியக்கூடிய அறிவியல் உண்மையை அவன் இந்த உலகத்திற்கு சொல்லும் முன்னரே அதனை முன்னறிவிப்பு செய்வதென்பது நிச்சயமாக இறைவனால் மட்டுமே முடியும்.

    மனிதனின் வார்த்தைகளுக்கும் இறைவனின் வார்த்தைகளுக்கும் வித்தியாசங்கள் இன்னும் ஏராளம். அதை தெரிந்துகொள்ள ஒரு பக்க விளக்கம் தேவை இல்லை கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றலும் பொது அறிவும் இருந்தாலே போதும்.

    குறிப்பு : இந்த வித்தியாசங்கள் அனைத்தும் குர்ஆனில் உள்ளது. குர்ஆனில் மட்டுமே உள்ளது. அதனால் தான் நாங்கள் குரானை இறைவனின் வார்த்தைகள் என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்கிறோம்.

    ReplyDelete
  9. @arafath

    மிக்க மகிழ்ச்சி என் கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு. உங்கள் பதிலில் இருந்து சில கேள்விகளை கேட்பதற்கு முன்பு உங்களிடம் இரண்டு விசயங்களை உறுதி செய்ய வேண்டி உள்ளது ஆகையால். நீங்கள் இந்த இரண்டையும் உறுதி செய்யுங்கள் பிறகு என் சந்தேகங்களை கேட்கிறேன்.

    நீங்கள் சொல்லும் குரான் கடவுள் வார்த்தையா அல்லது நபிகளின் வார்த்தையா ?

    அது கடவுளின் வார்த்தைகள் எனில் உங்கள் முந்தைய மறுமொழியில் இருந்து மார்மாட்டீர்கள் தானே ? என்னெனில் அது அரபாத் என்ற மனிதனின் வார்த்தை அதனால் தான் உங்களிடம் உறுதி கேட்கிறேன்.

    அதேபோல என் முந்தய மறுமொழியில் ஒரு கேள்விக்கு பதில் இல்லை அதையும் மறக்காமல் பதில் அளிக்கவும்.

    நன்றி அரபாத் மற்றும் ஷன்கர்

    ReplyDelete
  10. ///***ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. உங்க அல்லா மேல உட்காந்து பார்த்துகிட்டு இருக்கார் அப்படின்னு சொல்றீங்க. அந்த மேல எப்படின்னு சொல்லுங்க. பூமி பந்துக்கு நேர் மேலையா? இல்ல நம்ம தலைக்கு நேர் மேலையா? இரண்டும் வேற வேற 'மேல' அதுவாவது யோசிக்க முடியும்மா ? யோசிச்சு பதில் சொல்லுங்க.***///

    மிக அருமையான கேள்வி.....!!!

    இந்த கேள்விக்கு இஸ்லாம் என்ன பதில் சொல்லுகிறது என்பதை விளக்குவதற்கு முன்பாக. இதே கேள்வியை நானும் உங்களிடம் முன்வைக்கிறேன். முதலில் உங்கள் பதில் என்ன என்பதை கூறுங்கள், பிறகு இஸ்லாம் கூறும் பதிலை நான் கூறுகிறேன். ஏன் என்றால் இறைவன் மேலே இருக்கிறான் என்று இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய உலகின் அனைத்து மக்களுமே இதை தான் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  11. ///***நீங்கள் சொல்லும் குரான் கடவுள் வார்த்தையா அல்லது நபிகளின் வார்த்தையா ?

    அது கடவுளின் வார்த்தைகள் எனில் உங்கள் முந்தைய மறுமொழியில் இருந்து மார்மாட்டீர்கள் தானே ? என்னெனில் அது அரபாத் என்ற மனிதனின் வார்த்தை அதனால் தான் உங்களிடம் உறுதி கேட்கிறேன்.***///

    நிச்சயமாக குரான் இறைவனின் வார்த்தைகள் தான். அதில் சிறிதளவும் மாற்றமில்லை. மேலே நான் கூறிய மறுமொழியிலிருந்தும் மாற்றமில்லை.

    ReplyDelete
  12. @அரபாத்
    இப்பொழுது நேரமின்மை காரணமாக உங்கள் கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கிறேன்.

    //முதலில் உங்கள் பதில் என்ன என்பதை கூறுங்கள், பிறகு இஸ்லாம் கூறும் பதிலை நான் கூறுகிறேன். ஏன் என்றால் இறைவன் மேலே இருக்கிறான் என்று இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய உலகின் அனைத்து மக்களுமே இதை தான் சொல்கிறார்கள்.//

    நண்பர் ஷன்கர் பதிவு ஆதலால் அவரின் தலைப்பு படி - ஹிந்து மதம். கடவுள் - "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்". மற்ற மதங்கள் அரேபியா மதங்களை தவிர வேற எந்தெந்த மதங்கள் நீங்கள் சொல்வது போல் மேலே இருக்கிறான் என்று சொல்கிறது அதையும் முடிந்தால் சொல்லுங்கள்.

    நன்றி

    ReplyDelete
  13. @ பிரபு :

    ///***நண்பர் ஷன்கர் பதிவு ஆதலால் அவரின் தலைப்பு படி - ஹிந்து மதம். கடவுள் - "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்". மற்ற மதங்கள் அரேபியா மதங்களை தவிர வேற எந்தெந்த மதங்கள் நீங்கள் சொல்வது போல் மேலே இருக்கிறான் என்று சொல்கிறது அதையும் முடிந்தால் சொல்லுங்கள்.***///

    கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இந்து மதம் சொல்கிறது என்பது எனக்கு தெரியும், அதே போல மேலே இருக்கிறார் என்றும் அனேக இந்துக்கள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு இந்திரலோகம் என்று ஒன்றை சொல்வார்கள். அங்கே கடவுள்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதை உங்களால் மறுக்க முடியுமா ?. ஆக இதிலும் இந்துக்கள் முரண்படுகிறார்கள்.

    இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறித்தவர்களும் தங்கள் கடவுள் மேலே இருப்பதாகவே சொல்கிறார்கள்.

    நன்றி.

    ReplyDelete
  14. @ arafath,

    //கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இந்து மதம் சொல்கிறது என்பது எனக்கு தெரியும், அதே போல மேலே இருக்கிறார் என்றும் அனேக இந்துக்கள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு இந்திரலோகம் என்று ஒன்றை சொல்வார்கள். அங்கே கடவுள்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதை உங்களால் மறுக்க முடியுமா ?. ஆக இதிலும் இந்துக்கள் முரண்படுகிறார்கள். //

    நண்பரே! நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்கள் நேரான பதில் சொல்லவில்லை. பரவாயில்லை. நீங்கள் கேட்ட கேள்விக்கும் உதாரணத்திற்கும் முரண் இருப்பதாய் தெரியவில்லை. 'தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் ' - இதில் எல்லாம் அடக்கம் மேலையும் இருப்பார் கீழையும் இருப்பார் எங்கும் இருப்பார். உங்கள் உள்ளும் இருப்பார் என்னுள்ளும் இருப்பார் எதனுள்ளும் இருப்பார். இது தான் அதன் அர்த்தம். இதில் என்ன முரண்? தூணிலும் துரும்பிலும் என்றால் அங்கு மட்டும் தான் இருப்பார் என்று அர்த்தபடுத்த தேவை இல்லை முரணும் இல்லை. உங்கள் பதிலுக்காக காத்திருகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  15. @ prabhu :

    ///***நண்பரே! நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்கள் நேரான பதில் சொல்லவில்லை. பரவாயில்லை. நீங்கள் கேட்ட கேள்விக்கும் உதாரணத்திற்கும் முரண் இருப்பதாய் தெரியவில்லை. 'தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் ' - இதில் எல்லாம் அடக்கம் மேலையும் இருப்பார் கீழையும் இருப்பார் எங்கும் இருப்பார். உங்கள் உள்ளும் இருப்பார் என்னுள்ளும் இருப்பார் எதனுள்ளும் இருப்பார். இது தான் அதன் அர்த்தம். இதில் என்ன முரண்? தூணிலும் துரும்பிலும் என்றால் அங்கு மட்டும் தான் இருப்பார் என்று அர்த்தபடுத்த தேவை இல்லை முரணும் இல்லை. உங்கள் பதிலுக்காக காத்திருகிறேன்.***///

    கண்டிப்பாக உங்களுடைய கேள்விக்கு என்னிடம் நேரான பதில் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு என்னுடைய கேள்விக்கு தக்க பதிலை உங்களிடமிருந்து நான் எதிர்பார்கிறேன். உங்களுக்கு என்னுடைய கேள்வி புரியவில்லை என்றே நினைக்கிறேன். கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதிலேயே மேலும் கீழும் அடங்கிவிடும் என்பது சரி தான். ஆனால் நான் கேட்பது என்னவென்றால், இந்திரலோகம் என்று ஒன்றை குறிப்பிடுகிறீர்களே அது எங்கே உள்ளது ??? இது தான் என்னுடைய கேள்வி. இதற்கு நேரான பதிலை தந்தால் நானும் எனது நேரான பதிலை தருகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  16. @அரபாத்!

    என் கேள்விக்கும் இந்திரலோகதிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு தெரியல இருந்தும் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கு அது மேலே தான் இருக்கு. அங்க ரம்பை ஊர்வசி எல்லாம் டான்ஸ் ஆடுவாங்க அப்படின்னு கற்பனை பண்ண வேண்டியது இல்லை. அதன் முழு விளக்கத்தையும் தெளிவாக அதன் அர்த்தத்தையும் என் பதிவில் நிச்சயம் உங்களுக்கு நன்றிகளுடன் பதிவிடுவேன். இங்கு மறுமொழியில் அத்தனையும் விளக்கிசொல்ல நேரமின்மை மற்றும் மற்றவர்களுக்கும் அதன் முழு தெளிவு கிடைக்க தனியான பதிவாய் இருந்தால் மிகவும் பயன்படும். ஆகையால் அதை என் பதிவில் தருகிறேன்.
    நன்றி

    ReplyDelete
  17. @ prabhu :

    ///***என் கேள்விக்கும் இந்திரலோகதிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு தெரியல இருந்தும் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கு அது மேலே தான் இருக்கு. அங்க ரம்பை ஊர்வசி எல்லாம் டான்ஸ் ஆடுவாங்க அப்படின்னு கற்பனை பண்ண வேண்டியது இல்லை. அதன் முழு விளக்கத்தையும் தெளிவாக அதன் அர்த்தத்தையும் என் பதிவில் நிச்சயம் உங்களுக்கு நன்றிகளுடன் பதிவிடுவேன். இங்கு மறுமொழியில் அத்தனையும் விளக்கிசொல்ல நேரமின்மை மற்றும் மற்றவர்களுக்கும் அதன் முழு தெளிவு கிடைக்க தனியான பதிவாய் இருந்தால் மிகவும் பயன்படும். ஆகையால் அதை என் பதிவில் தருகிறேன். ***///

    நிச்சயமாக உங்களின் கேள்விக்கும் இந்திரலோகத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது நண்பரே. அங்கே யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது இப்போதைய விவாதம் அல்ல. அது எங்கே இருக்கிறது என்பது தான் இப்போதைய விவாதம்.

    இப்போது நீங்கள் என்னிடம் கேட்ட அதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன். அதற்கு நேரடியான பதில் வந்த பிறகு நான் என்னுடைய பதிலை உங்களுக்கு சொல்கிறேன்.

    இந்திரலோகம் மேல இருக்கிறது அப்படின்னு சொல்றீங்க. அந்த மேல எப்படின்னு சொல்லுங்க. பூமி பந்துக்கு நேர் மேலையா? இல்ல நம்ம தலைக்கு நேர் மேலையா? இரண்டும் வேற வேற 'மேல' அதுவாவது யோசிக்க முடியும்மா ? யோசிச்சு பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  18. @PRABHU :

    ///***என் கேள்விக்கும் இந்திரலோகதிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு தெரியல இருந்தும் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கு அது மேலே தான் இருக்கு. அங்க ரம்பை ஊர்வசி எல்லாம் டான்ஸ் ஆடுவாங்க அப்படின்னு கற்பனை பண்ண வேண்டியது இல்லை. அதன் முழு விளக்கத்தையும் தெளிவாக அதன் அர்த்தத்தையும் என் பதிவில் நிச்சயம் உங்களுக்கு நன்றிகளுடன் பதிவிடுவேன். இங்கு மறுமொழியில் அத்தனையும் விளக்கிசொல்ல நேரமின்மை மற்றும் மற்றவர்களுக்கும் அதன் முழு தெளிவு கிடைக்க தனியான பதிவாய் இருந்தால் மிகவும் பயன்படும். ஆகையால் அதை என் பதிவில் தருகிறேன். ***///

    நிச்சயமாக உங்களின் கேள்விக்கும் இந்திரலோகத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது நண்பரே. அங்கே யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது இப்போதைய விவாதம் அல்ல. அது எங்கே இருக்கிறது என்பது தான் இப்போதைய விவாதம்.

    இப்போது நீங்கள் என்னிடம் கேட்ட அதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன். அதற்கு நேரடியான பதில் வந்த பிறகு நான் என்னுடைய பதிலை உங்களுக்கு சொல்கிறேன்.

    இந்திரலோகம் மேல இருக்கிறது அப்படின்னு சொல்றீங்க. அந்த மேல எப்படின்னு சொல்லுங்க. பூமி பந்துக்கு நேர் மேலையா? இல்ல நம்ம தலைக்கு நேர் மேலையா? இரண்டும் வேற வேற 'மேல' அதுவாவது யோசிக்க முடியும்மா ? யோசிச்சு பதில் சொல்லுங்க.

    நீங்கள் கேட்ட அதே கேள்வியை தான் காபி பேஸ்ட் செய்து அதில் அல்லாவுக்கு பதில் இந்திரலோகம் என்பதை இணைத்துள்ளேன். இப்போது புரிகிறதா ??? இந்திரலோகத்திற்கும் உங்கள் கேள்விக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று.

    ReplyDelete
  19. @arafath

    உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் தெரியாதுன்னு பாருங்க தெரிந்து கொள்ளும் தூரம் அதிகம் இல்லை. அதை விடுத்து நீ சொன்னல அங்கதான் கதை எல்லாம் எதுக்கு. பயமா? யாரோ சொன்னதை அப்படியே உறுதியா சொன்னா எடுக்கு மடக்க மேலும் கேள்விகள் வந்தால் ? சிக்கல்.
    உங்கள் குரான்ல(அல்லாவே சொன்னது?!) தான் எல்லாம் இருக்கே இதுக்கு சரியான பதில் இல்லையா?
    //முதலில் உங்கள் பதில் என்ன என்பதை கூறுங்கள், பிறகு இஸ்லாம் கூறும் பதிலை நான் கூறுகிறேன்.(நீங்கள் இட்ட மறுமொழி)//
    இது தான் உங்கள் இஸ்லாமில் உள்ள பதிலா?
    //அல்லாவுக்கு பதில் இந்திரலோகம் என்பதை இணைத்துள்ளேன். இப்போது புரிகிறதா ??? ///

    நான் சொன்ன 'மேல' மட்டும் தான் உங்களுக்கு வேண்டும் மற்ற வரிகள் உங்களுக்கு புரியவில்லை. அதனால தான் அதை தனி பதிவா போடறேன்னு சொன்னேன். நான் சொன்னா மேல ஆகாயத்திற்கு மேல சிம்மாசனத்தில் இந்திரன் உட்காந்து இருக்கான், அக்னி, வாயு , வர்ணன் ,எல்லாம் அங்க இருக்காங்க அப்படின்னு அர்த்தம் பண்ணிடீங்களா? அக்னி,வாயு, வர்ணன் எல்லாம் இங்கயும் இருக்கு இந்திரன் இங்கயும் இருக்கான்.

    //அது மேலே தான் இருக்கு. அங்க ரம்பை ஊர்வசி எல்லாம் டான்ஸ் ஆடுவாங்க அப்படின்னு கற்பனை பண்ண வேண்டியது இல்லை. அதன் முழு விளக்கத்தையும் தெளிவாக அதன் அர்த்தத்தையும் என் பதிவில் நிச்சயம் உங்களுக்கு நன்றிகளுடன் பதிவிடுவேன்//

    நன்றி!

    ReplyDelete
  20. @ prabhu :

    ///***நான் சொன்ன 'மேல' மட்டும் தான் உங்களுக்கு வேண்டும் மற்ற வரிகள் உங்களுக்கு புரியவில்லை. அதனால தான் அதை தனி பதிவா போடறேன்னு சொன்னேன். நான் சொன்னா மேல ஆகாயத்திற்கு மேல சிம்மாசனத்தில் இந்திரன் உட்காந்து இருக்கான், அக்னி, வாயு , வர்ணன் ,எல்லாம் அங்க இருக்காங்க அப்படின்னு அர்த்தம் பண்ணிடீங்களா? அக்னி,வாயு, வர்ணன் எல்லாம் இங்கயும் இருக்கு இந்திரன் இங்கயும் இருக்கான். ***///

    நான் இட்ட மறுமொழியை நீங்கள் சரியாக படிக்கவில்லையா ??? என் மறுமொழியிலே நான் கூறி இருந்தேன், இந்திரலோகத்தில் யார் இருக்கிறார்கள், அங்கே என்ன நடக்கிறது என்பது நம் விவாதம் அல்ல அது எங்கே இருக்கிறது என்பது மட்டும் தான் நம்முடைய விவாதம் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். உங்கள் பார்வைக்கு அந்த மறுமொழியை மீண்டும் நான் கீழே தருகிறேன்.

    ///***நிச்சயமாக உங்களின் கேள்விக்கும் இந்திரலோகத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது நண்பரே. அங்கே யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது இப்போதைய விவாதம் அல்ல. அது எங்கே இருக்கிறது என்பது தான் இப்போதைய விவாதம்.***///

    இது நான் முன்னர் இட்ட மறுமொழி. இதை நீங்கள் சரியாக படித்திருந்தால் இந்த மறுமொழியை நீங்கள் கொடுத்திருக்க மாட்டீர்கள்.

    ReplyDelete
  21. @ prabhu :

    ///***உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் தெரியாதுன்னு பாருங்க தெரிந்து கொள்ளும் தூரம் அதிகம் இல்லை. அதை விடுத்து நீ சொன்னல அங்கதான் கதை எல்லாம் எதுக்கு. பயமா? யாரோ சொன்னதை அப்படியே உறுதியா சொன்னா எடுக்கு மடக்க மேலும் கேள்விகள் வந்தால் ? சிக்கல்.
    உங்கள் குரான்ல(அல்லாவே சொன்னது?!) தான் எல்லாம் இருக்கே இதுக்கு சரியான பதில் இல்லையா? ***///

    ///***இது தான் உங்கள் இஸ்லாமில் உள்ள பதிலா? ***///

    இது தான் இஸ்லாமில் உள்ள பதில் என்றோ அல்லது எனக்கு பதில் தெரியவில்லை என்றோ நான் உங்களுக்கு சொல்லவே இல்லையே. நீங்களாக எதையும் கற்பனை செய்துகொள்ளாதீர்கள்.

    நான் கேட்ட கேள்விக்கு உங்களிடமிருந்து சரியான முறையில் இன்னும் பதில் வரவில்லை. சுருக்கமான முறையில் இந்திரலோகம் மேலே எங்கே இருக்கிறது என்பதை மட்டும் சொல்லி இருக்கலாம். எனினும் அது பற்றி தனி பதிவு இடுவதாக கூறி இருக்கிறீர்கள். சரி உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன். இப்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு இஸ்லாம் சொல்லும் பதிலை பார்போம்.

    அல்லாஹ் அர்ஷின் மீது இருப்பதாக குரான் சொல்கிறது. அர்ஷ் என்றால் சிம்மாசனம். அந்த அர்ஷ் என்பது வானம் பூமி அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்றும் குரான் சொல்கிறது. அதாவது வானத்தின் எல்லா பகுதியும் அல்லாஹ்வின் அர்ஷ் சுற்றி வளைத்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

    உதாரணத்திற்கு, உருண்டையான ஒரு பெரிய பொருளை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு "அ" என்று பெயர் வைத்துக்கொள்வோம். இந்த பெரிய உருண்டைக்குள் அதை விட சிறிய உருண்டை ஒன்றை வைத்துக்கொள்வோம். இப்போது இந்த சிறிய உருண்டையின் மேற்பரப்பில் எல்லா பகுதியிலும் மனிதர்கள் வாழ்வதாகவும் வைத்துக்கொள்வோம். இப்போது சிறிய உருண்டையின் மேலே உள்ள ஒவ்வொருவரிடமும் "அ" எங்கே இருக்கிறது என்று கேட்டால் அவரவர் தனக்கு மேலே என்று காட்டுவார்கள். ஒவ்வொருவரும் காட்டும் திசை வேறு வேறாக இருந்தாலும் அனைவர் கூறுவதும் சரிதான்.

    அனைவருக்கு மேலேயும் "அ" என்னும் பெரிய உருண்டை இருக்கத்தான் செய்கிறது. இதில் யாரும் தவறாக சொல்லவில்லை, இந்த பெரிய உருண்டை போல தான் அர்ஷ் முழு உலகையும் சுற்றி உள்ளது.

    உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  22. @ arafath

    உங்கள் பதிலுக்கு நன்றி, இதை முன்பே சொல்லி இருக்கலாமே?. நான் எதையும் கற்பனை செய்யவில்லை நீங்கள் சொன்னதை தான் திரும்ப சொன்னேன்.நான் கற்பனை செய்வதாய் இருந்தால் உங்களிடம் திரும்பவும் கேட்டிருக்கவே மாட்டேன்.

    நான் தனி பதிவாக எழுதுகிறேன் என்று கூறியது எதற்காக என்றால் உங்களுக்கு சரியாக விளக்கத்தான் நீங்கள் என் மறுமொழியை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தும் நான் ஒருமுறை முயற்சிகிறேன்.
    முதல் மறுமொழியில் நான் கூறியது ஹிந்து மதம் கூறும்
    கடவுள் - 'தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்'

    // கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதிலேயே மேலும் கீழும் அடங்கிவிடும் என்பது சரி தான். ஆனால் நான் கேட்பது என்னவென்றால், இந்திரலோகம் என்று ஒன்றை குறிப்பிடுகிறீர்களே அது எங்கே உள்ளது ??? இது தான் என்னுடைய கேள்வி. இதற்கு நேரான பதிலை தந்தால் நானும் எனது நேரான பதிலை தருகிறேன். //

    திரும்பவும் நீங்கள் கேட்டது இந்திரலோகம் எங்கு இருக்கிறது (ஏன் இந்திரன் வாயு, அக்னி போன்றவர்கள் எல்லாம் கடவுளாக நாங்கள் வணங்குவது இல்லையா?)- நான் ஒரு வரியில் பதில் தந்தும்(தூணிலும் துரும்பிலும் ) நீங்கள் திரும்ப திரும்ப (specific -அ) கேட்டதால் உங்களிடம் இருந்து பதில் பெற என்ன செய்வது ? அதனால் தான்// என் கேள்விக்கும் இந்திரலோகதிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு தெரியல இருந்தும் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கு அது மேலே தான் இருக்கு அங்க ரம்பை ஊர்வசி எல்லாம் டான்ஸ் ஆடுவாங்க அப்படின்னு கற்பனை பண்ண வேண்டியது இல்லை.அதன் முழு விளக்கத்தையும் தெளிவாக அதன் அர்த்தத்தையும் என் பதிவில் நிச்சயம் உங்களுக்கு நன்றிகளுடன் பதிவிடுவேன்.// என்று சொன்னேன். (பின் குறிப்பு - மேலே மட்டும் தான் இருக்கு என்று நான் கூறவில்லை-கூடவே கற்பனை பண்ணவேண்டியது இல்லை என்றும் கூறியிருந்தேன் ).

    திரும்பவும் அதை உறுதி படுத்த .// அக்னி,வாயு, வர்ணன் எல்லாம் இங்கயும் இருக்கு இந்திரன் இங்கயும் இருக்கான். //- அவர்கள் எல்லாம் இருந்தால் அது இந்திரலோகம் தான்.

    நான் கேட்டதுக்கு ('மேலே') நீங்கள் என்ன சொல்லவேண்டுமோ அதை நேராக சொல்லி இருக்கலாம்.

    அதை விடுத்து.முதலில் முரண் என்றீர்கள்
    //கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இந்து மதம் சொல்கிறது என்பது எனக்கு தெரியும், அதே போல மேலே இருக்கிறார் என்றும் அனேக இந்துக்கள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு இந்திரலோகம் என்று ஒன்றை சொல்வார்கள். அங்கே கடவுள்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதை உங்களால் மறுக்க முடியுமா ?. ஆக இதிலும் இந்துக்கள் முரண்படுகிறார்கள்.//

    பிறகு எனக்கு கேள்வி புரியவில்லை என்றீர்கள். இப்பொழுது நான் கற்பனை செய்வதாய் சொல்கிறீர்கள். சரி இருக்கட்டும்.

    //சுருக்கமான முறையில் இந்திரலோகம் மேலே எங்கே இருக்கிறது என்பதை மட்டும் சொல்லி இருக்கலாம்.// ' கடவுள் - தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்.' இதை விட சுருக்கமாய் எப்படி சொல்வது? எல்லா இடத்திலும் இருப்பார் அவர் இருக்கற இடம் தான் இந்திரலோகம் அப்படின்னா. சிவலோகம், வைகுண்டம், இருக்கறது எல்லாம் எங்க, ஏன் கல்லை கும்பிடறீங்க ? உடனே முரண் அப்படிங்கறீங்க. என்னத்த சொல்ல ?

    இதுக்கு தான் நான் தனிபதிவா எழுதரேன்னு சொன்னேன்.

    உங்கள் நோக்கம் குரான் மட்டும் தான் உண்மை மற்றது எல்லாம் பொய், கற்பனை என்ற முழு நம்பிக்கையுடன் முடிவுடன் உங்கள் விவாதம். என்ன பயன்? எங்களுக்கு குரானை புரிய வைக்கவா? அல்லா மட்டும் தான் கடவுள் மற்றவை எல்லாம் சாத்தன் படைப்பு என்று சொல்லவா? ஏற்கனவே நீங்கள் முடிவுடன் விவாதம் செய்வதால் எந்த பயனும் இல்லை. விவாதம் என்பது தேடலை தரவேண்டும் அதை விடுத்து உங்கள் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிப்பது அல்ல.

    எடுத்துகாட்டு வேண்டும்மா ?இதோ உங்கள் மறுமொழியில் இருந்தே.

    //அனைவருக்கு மேலேயும் "அ" என்னும் பெரிய உருண்டை இருக்கத்தான் செய்கிறது. இதில் யாரும் தவறாக சொல்லவில்லை, இந்த பெரிய உருண்டை போல தான் அர்ஷ் முழு உலகையும் சுற்றி உள்ளது.//

    ஆர்ஸ் என்றால் எல்லாவற்றையும் பிரபஞ்சம், அண்டவெளி , சூரியமண்டலம் அனைத்தையும் முழுவதுமாக சுற்றி இருப்பதுவோ ? - இது தேடல்.

    ஆர்ஸ் என்றால் முழு உலகையும் சுற்றி இருபது என்றால் சூரியன் நிலா எல்லாம் உங்கள் அல்லாவுக்கு தெரியாதா ? இப்படி தான் குரானில் உள்ளதா? இது தான் அல்லா இறக்கியதா இப்படி முன்னுக்கு பின் முரணாக? இப்படியே ஒரு வார்த்தையை வைத்து கொண்டு பேசிகொண்டே இருக்கலாம் - இது வீண் தேவைற்ற விவாதம். இதை தான் நேரம் வீண் என்று ஏற்கனவே சொன்னேன்.

    இதற்கு செலவழித்த நேரத்திற்கு ஒரு பதிவு எழுதி இருக்கலாம்.
    நண்பர் ஷன்கர் அவர்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அரபாத் அவர்களே உங்களுக்கும் நன்றிகள்.. உண்மையான தேடல் உங்களிடம் இருந்தால் மீண்டும் விவாதிப்போம்.

    ReplyDelete
  23. @ arafath
    ///***நீங்கள் சொல்லும் குரான் கடவுள் வார்த்தையா அல்லது நபிகளின் வார்த்தையா ?

    அது கடவுளின் வார்த்தைகள் எனில் உங்கள் முந்தைய மறுமொழியில் இருந்து மார்மாட்டீர்கள் தானே ? என்னெனில் அது அரபாத் என்ற மனிதனின் வார்த்தை அதனால் தான் உங்களிடம் உறுதி கேட்கிறேன்.***///

    நிச்சயமாக குரான் இறைவனின் வார்த்தைகள் தான். அதில் சிறிதளவும் மாற்றமில்லை. மேலே நான் கூறிய மறுமொழியிலிருந்தும் மாற்றமில்லை.//

    இரண்டு முறை உறுதி கேட்டுவிட்டு தான் இந்த மறுமொழியை இடுகிறேன்.

    கிழே உள்ள வரிகளை எனக்காக மொழி மாற்றம் செய்யுங்கள். (உள்ள படியே). - அல்லாவின் கட்டளைகள் தானே கிழே உள்ளது ?.

    16:68 وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ

    16:69 ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

    முடிந்தால் ஆங்கிலத்திலும்.

    பின் குறிப்பு:-

    தயவு செய்து இதுக்கு நேராக பதில் சொல்லுங்க அதை விடுத்து இதுக்கு பதில் சொல்லுங்க நான் அதுக்கு பதில் சொல்றேன் எல்லாம் வேண்டாம்.
    உங்களுக்கு எங்களிடம் என்ன கேட்க வேண்டுமோ அதை நேராக கேளுங்கள்.தேவையற்ற விவாதம் நேர விரயம்.

    நன்றி

    ReplyDelete
  24. 16:68 And your Lord inspired to the bee, "Take for yourself among the mountains, houses, and among the trees and [in] that which they construct.

    16:69 Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. Indeed in that is a sign for a people who give thought.

    ReplyDelete
  25. உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்-குர்ஆன்-16:68)



    "பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்-குர்ஆன்-16:69)

    ReplyDelete
  26. @ prabhu :

    ///***திரும்பவும் நீங்கள் கேட்டது இந்திரலோகம் எங்கு இருக்கிறது (ஏன் இந்திரன் வாயு, அக்னி போன்றவர்கள் எல்லாம் கடவுளாக நாங்கள் வணங்குவது இல்லையா?)- நான் ஒரு வரியில் பதில் தந்தும்(தூணிலும் துரும்பிலும் ) நீங்கள் திரும்ப திரும்ப (specific -அ) கேட்டதால் உங்களிடம் இருந்து பதில் பெற என்ன செய்வது ? ***///

    அடைப்புக்குறிக்குள் நீங்கள் இட்ட கேள்வியை நான் கேட்கவே இல்லை. மாறாக இந்திரலோகத்தில் யார் இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதெல்லாம் நம் விவாதம் அல்ல என்றே நான் குறிப்பிட்டிருந்தேன். (மீண்டும் ஒரு முறை என் மறுமொழியை படித்துப்பார்க்கவும் ) ஆனால் என் கேள்வியை நீங்கள் திரித்து கூறுகிறீர்கள். இவ்வாறு பொய்யான விவாதம் செய்வதாக இருந்தால் உங்களோடு விவாதம் செய்து பலன் இல்லை. உண்மையான முறையில் விவாதம் மேற்கொள்ள தயாரென்றால் தொடர்வோம். அல்லது முடித்துக்கொள்ளலாம். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  27. @ prabhu :

    ///***ஆர்ஸ் என்றால் எல்லாவற்றையும் பிரபஞ்சம், அண்டவெளி , சூரியமண்டலம் அனைத்தையும் முழுவதுமாக சுற்றி இருப்பதுவோ ? - இது தேடல்.***///

    ஆம். அர்ஷ் என்பது வானம், பூமி, அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.

    ReplyDelete
  28. உங்கள் நேரான பதிலுக்கு மிக்க நன்றி திரு அரபாத்,

    நீங்கள் முதலில் இட்ட மறுமொழி
    //1) முரண்பாடு - மனிதனின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்கும், இறைவனின் வார்த்தைகளில் அது இருக்காது. மனிதன் பல்வேறு தருணங்களில் தான் பேசிய வார்த்தைகளுக்கு தானே முரண்பட்டு பேசுபவன், ஏன் என்றால் மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன் வார்த்தைகளை மாற்றி பேசக்கூடியவன் மற்றொரு காரணம் மறதி. சில வருடங்களுக்கு முன் ஒரு விஷயத்தை சொல்லியிருப்பான் இப்போது மறதியின் காரணமாக அதையே மாற்றி கூறுவான். இது மனிதனின் வார்த்தைகளில் இருக்கும் இயல்பு. ஆனால் இறைவனுக்கு மறதியோ சந்தர்ப்ப சூழ்நிலைகளோ கிடையவே கிடையாது. ஆதலால் இறைவனின் வார்த்தைகளில் ஒருபோதும் முரண்பாடு ஏற்படாது. முரண்பாடு இருந்தால் அது இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை அறியலாம். //

    இதற்க்கு முன்பு ஆர்ஸ் பற்றி எழுதி இருந்தீர்கள் அதில் ஆர்ஸ் உலகம் முழுவது சுற்றி இருக்கிறது என்று கூறினீர்கள். அப்படி தான் குரானில் உள்ளதா ? எனக்கு தெரியாது. கண்டிப்பாக தர்க்கம் செய்வதற்காக நேரத்தை வீண் அடிக்க அதை பற்றி பேசவில்லை. கிழே உள்ளவற்றை விவாதிக்கும் போது இதுவும் ஒரு எடுத்துக்காட்டுக்காக அமையும் அதற்காக தான்.

    நான் கேட்ட இந்த வரிகளுக்கு

    16:68 وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
    16:69 ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ (இந்த வரிகள் என்ன என்று எனக்கு தெரியாது - அரபியும் தெரியாது ).

    நீங்கள் தந்த விளக்கங்கள் மட்டும் எடுத்து பேசுவோம்

    //16:68 And your Lord inspired to the bee, "Take for yourself among the mountains, houses, and among the trees and [in] that which they construct.
    16:69 Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. Indeed in that is a sign for a people who give thought.

    ....continue

    ReplyDelete
  29. உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்-குர்ஆன்-16:68)
    "பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்-குர்ஆன்-16:69)//

    நீங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கியது இரண்டும் ஒன்று போல் உள்ளதா ? அல்லது மாறுபாடுகள் உள்ளதா ? கண்டிப்பாய் இரண்டும் வேறு வேறு விளக்கங்கள் தருகிறது. (looks similer but not exactly same ) .

    அதை பிறகு பார்ப்போம் முதலில் சொன்னா முரண்பாட்டை பார்ப்போம். முதல் கருத்து- தேனிக்கள் அங்கு மட்டும் தான் கூடுகளை அமைகிறதா? தேனீ வளர்ப்பு பற்றி தெரியுமா? சரி அதுவும் மனிதன் கட்டுவது தான் அப்படி வைத்துகொள்வோம்.

    இரண்டாவது வசனம் தமிழில் நீங்கள் கொடுத்தது //பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி // குரான் - இறைவன் இறக்கியது எந்த மாற்றத்திற்கும் உட்பட்டது அல்ல. (உங்கள் நம்பிக்கை) உங்களுக்கு உண்மையில் அரபி தெரியுமானால் அந்த அராபிய வசனத்தின் அர்த்தத்தை பாருங்கள். பிறகு தமிழில் உள்ளதை பாருங்கள். மாற்றப்பட்டு உள்ளதா இல்லையா என்று தெரியும்.

    ஆங்கிலத்தில் உள்ளது தெளிவாக சொல்கிறது // 16:69 Then eat from all the fruits // அனால் தமிழில் அடைப்பு குறிக்குள் எதற்கு இணைப்பு // (களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி //. ?
    1 .இது மாற்றப்பட்டு உள்ளதா இல்லையா ?
    2 . தேனிக்கள் கனிகளை தான் உண்கிறதா ? இப்படி நிறைய எடுத்துகாட்டுகள் தரலாம் நீங்கள் நம்பும் குறையற்ற குரானில் இருந்து. நான் குரான் தவறு என்றோ அது கடவுள் இறக்கியது பொய் என்றோ இங்கு விவாதிக்க வில்லை.
    //ஆனால் இறைவனுக்கு மறதியோ சந்தர்ப்ப சூழ்நிலைகளோ கிடையவே கிடையாது. ஆதலால் இறைவனின் வார்த்தைகளில் ஒருபோதும் முரண்பாடு ஏற்படாது. //

    அடிபடையை பாருங்கள் என் பதிவில் என்னால் முடிந்த வரை தெளிவாக விளக்கி விட்டேன். இந்த ஐம்புலன்களால் ஒப்பிட்டு பார்க்க மட்டுமே முடியும் இது ஒருநாளும் உண்மையை உணர்த்தாது அப்படி இருக்க குரான் படித்து அது உண்மை அதில் உள்ளது எல்லாம் உண்மை. அது உண்மையாய் கடவுள் இறக்கியது என்று கூறுகிறீர்கள். நம்பிக்கை - உங்கள் வளர்ச்சியின் முடிவு.

    இந்த ஐம்புலன்கள்(ளை) புரிந்து கொள்வது எப்படி என்று பாருங்கள். - இது தேடல் அதை விடுத்து வெறும் நம்பிக்கை எதற்கும் உதவாது, பயனும் இல்லை.
    எடுத்து காட்டாக ஒரு சொல் - "படி" உங்களுக்கு நான் என்ன சொன்னேன் புரிகிறதா? இதனுடன் இன்னொரு சொல் இல்லாமல் அதன் உண்மை அர்த்தத்தை நீங்கள் விளங்கி கொள்ள முடியாது.
    அது புத்தகம் படியாகவும் இருக்கலாம், வாயிற் படியாகவும் இருக்கலாம் அல்லது அளக்கும் படியாகவும் இருக்கலாம்.

    இப்படி இருக்க குரான் கடவுள் இறக்கியது அது உண்மை என்று எதனுடன் ஒப்பிட்டு நம்பிக்கை அடைந்தீர்கள்? குரான் கடவுள் இறக்கியதாக இருந்தால் அதை எதனுடனும் ஒப்பிட முடியாது. ஒப்பிடாமல் நம்மால் எதையும் புரிந்துகொள்ள முடியாது.

    தெரியாததை தெரியாது என்று திறந்த மனதுடன் தேடுங்கள் உண்மை தெரிந்து கொள்ளும் தூரம் தொலைவில் இல்லை.

    நன்றி

    ReplyDelete
  30. //அடைப்புக்குறிக்குள் நீங்கள் இட்ட கேள்வியை நான் கேட்கவே இல்லை. மாறாக இந்திரலோகத்தில் யார் இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதெல்லாம் நம் விவாதம் அல்ல என்றே நான் குறிப்பிட்டிருந்தேன். (மீண்டும் ஒரு முறை என் மறுமொழியை படித்துப்பார்க்கவும் ) ஆனால் என் கேள்வியை நீங்கள் திரித்து கூறுகிறீர்கள். இவ்வாறு பொய்யான விவாதம் செய்வதாக இருந்தால் உங்களோடு விவாதம் செய்து பலன் இல்லை. //

    இப்பொழுது நான் கேள்வியை திரித்து பொய்யான விவாதம் வேறு செய்கிறேன்.?! அருமை. மற்றும் நன்றிகள்.

    இந்திரன் இருப்பதால் தான் அது இந்திரலோகம் அவன் இல்லையென்றால் அது வெறும் லோகம் அவ்வளவே. இந்த விஷயம் உங்களுக்கு தெரியாது என்று எனக்கு தெரியாது. ஆகையால் தான் நான் திரும்பவும் இந்திரன் எல்லோரும் இருகிறார்கள் என்று கூறினேன். இதில் திரித்து கூற எதுவும் இல்லை.

    உங்களுக்கு இன்னும் வேறு விதமாக விளக்கமாக சொல்லவேண்டுமானால் .
    நான் அல்லா எங்கிருக்கிறார் என்று தானே கேட்டேன். ஆர்ஸ் ஐ பற்றி யார் கேட்டது?. இப்படி இருக்கிறது உங்கள் கேள்வி.
    அல்லா இல்லாமல் ஆர்ஸ்-ஐ பற்றி சொல்லமுடியும்மா? அல்லது ஆர்ஸ் இல்லாமல் அல்லா எங்கு இருக்கிறார் என்று சொல்ல முடியுமா ?

    என்னோடு விவாதிப்பது பலன் இல்லை நான் பொய்யான விவாதம் செய்கிறேன் என்று நீங்கள் முடிவெடுத்த பிறகு. இனி நீங்கள் எதிர் பார்த்த படி பதில் இல்லை எனில் எனது விவாதம் பொய்யாகிவிடும்.

    அகங்காரத்தை தொட்டால் வலி அதிகமாக தான் இருக்கும். இனி அது எல்லா வகையிலும் தப்பிக்க மட்டும் தான் பார்க்கும்.

    நான் எதையும் முடிவெடுப்பது இல்லை. என் தேடல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் உண்மையை உணரும் வரை.

    நன்றி

    ReplyDelete
  31. @Prabhu : நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த அடைப்புக்குறிகள் மூல மொழியான அரபியில் இருக்கிறதா ? அல்லது மொழிபெயர்ப்பில் இருக்கிறதா ? நீங்கள் சுட்டிக்காட்டிய அடைப்புக்குறிகள் எல்லாம் மொழிபெயர்ப்பில் மட்டுமே இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் மக்கள் எளிதில் புரிந்துகொள்வதற்காக எதையாவது அடைப்புக்குறிக்குள் சொன்னால் உடனே அது குரான் சொன்னதாக ஆகிவிடாது.

    ReplyDelete
  32. @prabhu & shankar : தாமதத்திற்கு வருந்துகிறேன், விடுமுறைக்காக சொந்த ஊர் செல்ல வேண்டியதாக இருந்ததால் என்னால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. இதை சாக்காக வைத்துக்கொண்டு விவாதத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  33. @arafath .

    உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. உங்கள் பதில் எனது இத்தனை நாள் இஸ்லாம் தேடலின் அடிபடையையே தகர்த்து விட்டது. ஏன் என்றால் எனக்கு அரபி தெரியாது. இத்தனை நாள் எனது தேடல் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் தான். அவற்றின் நம்பக தன்மையை கேள்விகுறி ஆக்கிவிட்டீர்கள்.

    // நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த அடைப்புக்குறிகள் மூல மொழியான அரபியில் இருக்கிறதா ? அல்லது மொழிபெயர்ப்பில் இருக்கிறதா ? நீங்கள் சுட்டிக்காட்டிய அடைப்புக்குறிகள் எல்லாம் மொழிபெயர்ப்பில் மட்டுமே இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் மக்கள் எளிதில் புரிந்துகொள்வதற்காக எதையாவது அடைப்புக்குறிக்குள் சொன்னால் உடனே அது குரான் சொன்னதாக ஆகிவிடாது. //

    அப்படியானால்
    1. அரபியில் உள்ளது மட்டும் தான் குரானா ? மற்ற மொழியில் உள்ளது எல்லாம் குரானாக ஏற்கமுடியாது சரியா ?
    2 . மற்ற மொழியில் உள்ளது எல்லாம் குரான் பற்றிய தெளிவுரை உங்கள் கூற்று படி சரியா ?
    3 . அரபியில் உள்ளது மட்டும் தான் புனித குரான் மொழிபெயர்ப்பு எல்லாவற்றிற்கும் அந்த புனிதம் இல்லை சரியா ?
    4 . அரபியில் உள்ளதை தவிர மற்றவற்றில் எதை வேண்டுமானாலும் இடை சொருகலாம். அதன் நம்பக தன்மை எதை வைத்து முடிவு செய்வது?
    4 . குரான் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல அது இறைவன் இறக்கியது ஆனால் மொழிபெயர்ப்பில் மாற்றங்கள் உண்டு சரியா? (மக்கள் புரிதலுக்காக அல்லது வேறு காரணங்களுக்கு)
    5 . அரபியில் குரான் படிபவர்கள் மட்டும் தான் உண்மையான இறைவன் இறக்கியதை படிபவர்கள் மற்றவர்கள் எல்லாம் அதன் தெளிவுரை படிபவர்கள். ஆக அவர்கள் எல்லாம் முழு முகமதியர்கள் அல்ல. அப்படியா ?
    6 .உங்களுக்கு அரபி தெரியுமா?
    உங்கள் மறுமொழி பதிலில் இருந்து இன்னும் நிறைய குழப்பங்கள் மற்றும் கேள்விகள் எழுகிறது. முதலில் இதற்க்கு பதில் கிடைத்தவுடன் அவற்றை கேட்கிறேன்.

    //இதை சாக்காக வைத்துக்கொண்டு விவாதத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டாம்.//

    இதற்க்கு பதில்
    //நான் எதையும் முடிவெடுப்பது இல்லை. என் தேடல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் உண்மையை உணரும் வரை.//

    நன்றி

    ReplyDelete
  34. @prabhu :

    ///1. அரபியில் உள்ளது மட்டும் தான் குரானா ? மற்ற மொழியில் உள்ளது எல்லாம் குரானாக ஏற்கமுடியாது சரியா ?///

    பிரபு அவர்களே.... உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள். அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழில் எழுதப்பட்டதைத்தான் திருக்குறள் என்று சொல்ல முடியும். மற்றவை எல்லாம் அதன் மொழிபெயர்ப்பு என்றே சொல்வோம். ஏனென்று சொன்னால் திருக்குறளின் சிறப்புகளில் ஒன்று என்ன கருத்தை முன்வைத்தாலும் அதை இரண்டு அடியிலேயே முடித்துவிடும். ஆனால் மற்ற மொழிகளில் அவ்வாறு இருக்காது. என்றாலும் அந்த குறளின் அர்த்தம் மாறாமல் மொழிபெயர்த்திருப்பார்கள். அதே போல் தான் அரபு மொழியிலுள்ள குரானும் மற்ற பொழிபெயர்ப்பு குரானும்.

    ReplyDelete
  35. @prabhu : /// 4 . அரபியில் உள்ளதை தவிர மற்றவற்றில் எதை வேண்டுமானாலும் இடை சொருகலாம். அதன் நம்பக தன்மை எதை வைத்து முடிவு செய்வது ? ///

    பிரபு அவர்களே..... இடைச்செருகல் என்றால் என்னவென்றே தெரியாத நீங்கள் எப்படி குரானை ஆராய்ச்சி செய்கிறீர்கள் ??? இது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

    முதலில் இடைச்செருகல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஏதேனும் ஒரு வார்த்தையோ அல்லது வார்த்தைகளின் தொகுப்போ குரானின் மொழிபெயர்ப்பில் சேர்க்கப்பட்டு அது மூல மொழியில் இல்லாத ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்குமாயின் அது தான் இடைச்செருகல். மூல மொழியின் அர்த்தத்தை மாற்றாமல் எந்த வார்த்தைகளை அல்லது எத்தனை வார்த்தைகளை சேர்த்தாலும் அது இடைச்செருகல் ஆகாது.

    ReplyDelete
  36. @prabhu : அப்படியே ஒரு மொழிபெயர்ப்பாளர் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ குரானின் அர்த்தத்தை மாற்றிவிட்டால், அது மூல மொழியில் இல்லாவிட்டாலும் கூட அதனை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது இடைச்செருகல் எனப்படும். அவ்வாறு இல்லையாயின் அது மொழிபெயர்ப்பாளரின் பிழையே அன்றி குரானின் பிழையாகாது. உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லைஎன்றால் முதலில் இடைச்செருகல் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு பிறகு என்னிடம் விவாதம் செய்யுங்கள்.

    ReplyDelete
  37. @arafath .

    ஒரு வேண்டுகோள் தயவு செய்து எதை பற்றி விவாதமோ அதை பற்றி மட்டும் உங்களிடம் இருந்த பதில் எதிர் பார்க்கிறேன். நேரடி பதில். மீண்டும் பழைய தவறை திரும்பவும் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    முதலில் உங்கள் இரண்டாவது பதிலை சொல்லிவிட்டு உங்கள் முதல் பதிலுக்கு வருகிறேன் .

    எனது கேள்வியை மீண்டும் ஒருமுறை முழுவதுமாக படிக்கவும் .
    //4 . அரபியில் உள்ளதை தவிர மற்றவற்றில் எதை வேண்டுமானாலும் இடை சொருகலாம். அதன் நம்பக தன்மை எதை வைத்து முடிவு செய்வது? //.

    அதன் நம்பக தன்மை எதை வைத்து முடிவு செய்வது அதுவே எனது கேள்வி. இடைசெருகல் பற்றி அல்ல.

    //4 . குரான் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல அது இறைவன் இறக்கியது ஆனால் மொழிபெயர்ப்பில் மாற்றங்கள் உண்டு சரியா? (மக்கள் புரிதலுக்காக அல்லது வேறு காரணங்களுக்கு)// ---- இந்த கேள்வி உங்கள் பதிலை உறுதி படுத்த மட்டும் (This question is only for Double confirmation of your answer/reply)

    //பிரபு அவர்களே..... இடைச்செருகல் என்றால் என்னவென்றே தெரியாத நீங்கள் எப்படி குரானை ஆராய்ச்சி செய்கிறீர்கள் ??? இது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது//.

    எனது தமிழ் அறிவு, சொல் அறிவு பற்றி உங்களுக்கு ஏளனம். அதற்க்கு விளக்கம் அளிக்க ஆர்வமாக உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கு படிப்பதில் சிரமம் இல்லை எனில் அடுத்த முறை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து எனது கேள்வியை பதிகிறேன்.(கேள்விக்கு புரியும் படி/சரியான நேரடி பதில் சொல்ல தெரியா/முடியா விட்டால் கேள்வி கேட்டவன் அறிவற்றவன் அல்ல கேள்வியும் அறிவற்றது/ தெளிவற்றது அல்ல). எல்லாம் தெரிந்த அறிவாளியும் இல்லை ஒன்றுமே தெரியாத முட்டாளும் இல்லை.

    நான் கேட்ட எழு (எண்கள் பிழை மன்னிக்கவும்) கேள்விகளில் இரண்டிற்கு மட்டும் தான் உங்களிடம் இருந்து பதில் வந்துள்ளது . அந்த இரண்டு பதில்கள் எல்லா கேளிவிகளுக்கும் பதிலாய் எனக்கு புலப்படவில்லை. தெளிவுபடுத்தவும் .

    திருக்குறளை எடுத்துக்காட்டாக வைத்து விளக்கி உள்ளீர்கள் நன்று. மற்ற மொழியில் உள்ளதும் தமிழில் உள்ளதும் ஒன்று ஆகாது உடன்படுகிறேன். அதற்காக தான் எனது மற்ற கேள்விகளையும் அங்கு பதிந்தேன்.

    // அரபியில் குரான் படிபவர்கள் மட்டும் தான் உண்மையான இறைவன் இறக்கியதை படிபவர்கள் மற்றவர்கள் எல்லாம் அதன் தெளிவுரை படிபவர்கள். ஆக அவர்கள் எல்லாம் முழு முகமதியர்கள் அல்ல. அப்படியா ?//

    //6 .உங்களுக்கு அரபி தெரியுமா? //-- இதை கண்டிப்பாக உங்களை தாழ்த்தி பேசவோ ஏளனம் செய்யவோ கேட்கவில்லை. உங்களுக்கு அரபி தெரிந்தால் சில அரபி வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்கவே அந்த கேள்வி.

    பின்குறிப்பு :
    திருக்குறளுக்கு எத்தனை பேர் விளக்கவுரை எழுதி உள்ளார்கள் தெரியுமா? பெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் விளக்கவுரை தான் உண்மையான திருக்குறள் விளக்கம் என்று எடுத்து கொள்ள முடியுமா?(பரிமேலழகர் , மு. வரதராசனார் அவர்கள் உரை சிறப்பானதாக கருதபடுகிறது). இரண்டடி குறள் , அதுவும் தாய் மொழியில் அதற்கே எல்லோராலும் ஒன்றுபோல் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதுவும் மனிதன் இயற்றியது அப்படி இருக்க . குரான் கடவுள் இறக்கியதை மனிதன் வாங்கி அதை ஒரு மொழியில் எழுதி அதை மொழிபெயர்த்து அதை படிபவர்களுக்கு எப்படி சரியாக கடவுள் இறக்கியது தெளிவாக இதை தான் சொன்னார் என்று புரியும் ? கடவுள் இறக்கியதாக இருந்தாலும் அதை எழுதியது மொழிபெயர்த்தது மனிதன் தானே ?

    அத்தனை குறளும் அப்படியே விளக்கவுரை இன்றி நீங்கள் படித்தால் உங்களுக்கு புரியுமா ?
    திருக்குறளின் தமிழில் உள்ள எல்லா உரைகளுக்கும் வேறுபாடு உண்டு. அவற்றில் சிறப்பானது அந்த இருவர் உரையும் என்று கருதபடுகிறது உறுதியாக சொல்லப்பட்டது இல்லை.

    நன்றி

    ReplyDelete
  38. @Prabhu :

    ///அதன் நம்பக தன்மை எதை வைத்து முடிவு செய்வது அதுவே எனது கேள்வி. இடைசெருகல் பற்றி அல்ல.///

    உங்கள் கேள்வி அதன் நம்பகத்தன்மை பற்றியது மட்டும் தான் என்றால் அதனை மட்டுமே கேட்டிருக்கவேண்டும். இடைச்செருகல் செய்யலாமோ ? என்று ஏன் கேட்டீர்கள் ?

    சரி உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன். உங்கள் கேள்வி உங்களுக்கே மடத்தனமாக தெரியவில்லையா ? எந்த ஒரு மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையையும் அதன் மூல மொழியை வைத்து தெரிந்துகொள்ளலாம். இதுகூடவா உங்களுக்கு தெரியவில்லை ???

    ReplyDelete
  39. @prabhu :

    நீங்கள் விழுந்து விழுந்து ஆராய்ச்சி செய்து எதாவது ஒரு மொழிபெயர்ப்பில் ஒரு சிறிய தவறையோ அல்லது கூட்டல் குறைத்தலையோ கண்டுபிடித்தாலும்கூட அது குர்ஆனில் உள்ள தவறு என்று அறிவுடைய எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். மாறாக அது மொழிபெயர்ப்பிலுள்ள தவறு என்றே சொல்வார்கள். ஏனென்று சொன்னால் குர்ஆனில் தவறு இருக்கிறது என்று நீங்கள் நிரூபிக்கவேண்டுமானால் மூல மொழியில் நிரூபித்தால் மட்டுமே அது குரானின் தவறு என்று எடுத்துக்கொள்ளப்படும். மற்ற மொழிபெயர்ப்புகளில் நீங்கள் என்ன தவறை கண்டுபிடித்தாலும் அது மொழிபெயர்ப்பாளரின் தவறே அன்றி குரானின் தவறு என்று எடுத்துக்கொள்ளப்படாது.

    உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன். ஒரு வேளை குர்ஆனில் எதாவது ஒரு தவறு கண்டுபிடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தி குரானின் மூல மொழியான அரபியை நன்கு படித்து தெரிந்துகொண்டு அதனை ஆராய்ச்சி செய்வீர்களானால். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தால் கூட உங்களால் முடியவே முடியாது. உங்களை போன்றவர்களுக்கு குரானே இந்த சவாலை வெளிப்படையாக முன்வைக்கிறது. முடிந்தால் குர்ஆனில் தவறு கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

    உங்களைப்போன்றே, பல மேற்க்கத்திய அறிஞர்கள் குர்ஆனில் தவறு கண்டுபிடிப்பதர்க்காகவே அரபு மொழியை படித்து தெரிந்துகொண்டு குரானை ஆராய்ச்சி செய்து சவாலில் தோற்று, நிச்சயமாக இது இறை வேதம்தான் என்று ஒப்புக்கொண்டு இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்கள்.

    ஆகவே குர்ஆனில் தவறு கண்டுபிடிக்க நினைக்கும் உங்களின் இந்த விவாதம் நிச்சயமாக தோல்வியில் போய்தான் முடியும்.

    ReplyDelete
  40. @Prabhu :

    ///6 .உங்களுக்கு அரபி தெரியுமா? ///

    எனக்கு அரபி பேசவோ அதன் வார்த்தைகளுக்கு அர்த்தம் கூறவோ தெரியாது. எனினும் உங்கள் சந்தேகங்களை என்னிடம் நீங்கள் கேட்கலாம். அரபு மொழி தெரிந்தவர்களிடம் அதனை கேட்டு உங்களுக்கு நான் சொல்கிறேன்.

    ReplyDelete
  41. @Prabhu :

    ///2 . மற்ற மொழியில் உள்ளது எல்லாம் குரான் பற்றிய தெளிவுரை உங்கள் கூற்று படி சரியா ?///

    பிரபு அவர்களே.... நீங்கள் கேட்கும் கேள்விகளெல்லாம் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. மொழிபெயர்ப்புக்கும் தெளிவுரைக்கும் கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை ? மற்ற மொழிகளில் எழுதப்பட்டவைகள் எல்லாம் மொழிபெயர்ப்பே அன்றி தெளிவுரை அல்ல. ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்களும் அவரவர் புரிந்துகொண்டதை எழுதியுள்ளனர். ஆனால் குரானுக்கு தெளிவுரைகளும் இருக்கின்றன. அதனை தப்சீர் என்று சொல்வார்கள்.

    ReplyDelete
  42. @Prabhu :

    ///3 . அரபியில் உள்ளது மட்டும் தான் புனித குரான் மொழிபெயர்ப்பு எல்லாவற்றிற்கும் அந்த புனிதம் இல்லை சரியா ?///

    குரான் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் மூல மொழியில் சொல்லப்பட்ட அர்த்தம் மாறினால் மட்டுமே அதன் புனிதம் கேள்விக்குறியாகும். மூல மொழியின் அதே அர்த்தத்தை மொழிபெயர்ப்பு குரானும் கொடுக்குமேயானால் அதுவும் புனிதம்தான்.

    ReplyDelete
  43. ///6 . அரபியில் குரான் படிபவர்கள் மட்டும் தான் உண்மையான இறைவன் இறக்கியதை படிபவர்கள் மற்றவர்கள் எல்லாம் அதன் தெளிவுரை படிபவர்கள். ஆக அவர்கள் எல்லாம் முழு முகமதியர்கள் அல்ல. அப்படியா ?///

    நான் அப்படி சொல்லவில்லையே. நீங்களாக எதற்கும் ஒரு அர்த்தம் கற்ப்பிக்க வேண்டாம். மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள பதிலை பார்க்கவும்.

    ReplyDelete
  44. @Prabhu :


    ///5 . குரான் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல அது இறைவன் இறக்கியது ஆனால் மொழிபெயர்ப்பில் மாற்றங்கள் உண்டு சரியா? (மக்கள் புரிதலுக்காக அல்லது வேறு காரணங்களுக்கு)///

    இந்த கேள்விக்கு ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்டுவிட்டது. புரியவில்லைஎன்றால் இடைச்செருகல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு விவாதம் செய்ய வாருங்கள்.

    ReplyDelete
  45. @Prabhu :

    ///இரண்டடி குறள் , அதுவும் தாய் மொழியில் அதற்கே எல்லோராலும் ஒன்றுபோல் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதுவும் மனிதன் இயற்றியது அப்படி இருக்க . குரான் கடவுள் இறக்கியதை மனிதன் வாங்கி அதை ஒரு மொழியில் எழுதி அதை மொழிபெயர்த்து அதை படிபவர்களுக்கு எப்படி சரியாக கடவுள் இறக்கியது தெளிவாக இதை தான் சொன்னார் என்று புரியும் ? கடவுள் இறக்கியதாக இருந்தாலும் அதை எழுதியது மொழிபெயர்த்தது மனிதன் தானே ? ///

    இலக்கிய தரத்தில் திருக்குறளும் திருக்குரானும் ஒன்றல்ல. அது வேறு இது வேறு. இன்னும் சொல்லப்போனால் திருக்குரானின் ஒரு சில வசனங்களுக்கு மட்டும்தான் தெளிவுரை என்பது தேவைப்படுகிறது. பெரும்பாலான வசனங்களை யார் வேண்டுமானாலும் புரிந்துகொள்ளக்கூடிய இலக்கிய தரத்தில் தான் அது வழங்கப்பட்டிருக்கின்றது. கடவுள் கொடுத்தது என்றால் அது புரியாத இலக்கிய தரத்தில்தான் இருக்கவேண்டும் என்பது சட்டமா ? என்ன ???

    ReplyDelete
  46. @Prabhu :

    நீங்கள் இன்னொரு கேள்வியை கேட்கலாம். அதெப்படி, மூல மொழியில்கூட இடைச்செருகல் செய்திருக்க முடியாதா ? அரபு மொழி குரானின் நம்பகத்தன்மையை எப்படி கண்டுபிடிப்பது ? என்று. அதற்கும் பதில் இருக்கிறது.

    மூல மொழியில் கூட எவராலும் இடைச்செருகல் செய்ய முடியாது. முடியவே முடியாது. ஏனென்று சொன்னால் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னால் முஹம்மது நபியவர்களின் தோழர்களில் ஒருவரான உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் மிருகங்களின் தோலிலும் எலும்புகளிலும் எழுதப்பட்ட குரானின் மூலப்பிரதி இப்பொழுதும் எங்களிடம் உள்ளது. உலகிலேயே ஒரு வேதநூலின் மூலப்பிரதி அப்படியே பாதுகாக்கப்படுகிறது என்றால் அது குரான் மட்டுமே. அதனுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் எந்த வார்த்தைகள் இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மிகத்துல்லியமாக கண்டுபிடித்து நீக்கிவிடலாம். ( ஒருவேளை இடைச்செருகல் செய்திருந்தால்)

    ஆனால் எந்த ஒரு அரபி குரானும் மூலப்பிரதிக்கு சிறிதும் மாற்றமில்லாமல்தான் இருக்கும். மூலப்பிரதி பாதுகாக்கப்பட்டிருப்பதன் காரணமாகத்தான் குர்ஆனில் எவரும் எதையும் புதிதாக இடைச்செருகல் செய்ய முடியாது என்று நாங்கள் சொல்கிறோம்.

    இப்போது உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். உங்கள் வேதங்களின் மூலப்பிரதி உங்களிடம் உள்ளதா ? இருந்தாலும், அது முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறதா ?

    ReplyDelete
  47. @Prabhu :

    குர்ஆனில் இறைவன் கூறுகிறான். சத்தியமாக இது இறைவேதம். இதனை உலகம் அழியும் வரை அப்படியே பாதுகாப்போம் என்று. இறைவன் வாக்குறுதியளித்தபடி இன்றைக்கும் பாதுகாக்கப்படுகிறதா இல்லையா ? குரான் இறைவேதம் என்று நாங்கள் நம்புவதற்கு இதுவும் ஒரு சான்று.

    ReplyDelete
  48. @ arafath

    //உங்கள் கேள்வி அதன் நம்பகத்தன்மை பற்றியது மட்டும் தான் என்றால் அதனை மட்டுமே கேட்டிருக்கவேண்டும். இடைச்செருகல் செய்யலாமோ ? என்று ஏன் கேட்டீர்கள் ? //

    ஒரு கேள்வியை எப்படி கேட்க வேண்டும் என்று எனக்கு கற்று தருகிறீர்கள் மிக்க நன்றி .

    எனது கேள்வியில் உள்ளது //இடைச்செருகல் செய்யலாமோ ?//இல்லை ? இடைசெருகல் இருக்க வாய்ப்புக்கள் உள்ளது ஆகையால் அதன் நம்பக தன்மையை எதை வைத்து முடிவு செய்வது என்பது தான்.

    மீண்டும் எனது கேள்வியில் மீண்டும் உள் கேள்விகள் எழகூடாது என்பதற்காக கேட்கப்பட்டது தான் அந்த இடைசெருகல் என்ற வார்த்தை.

    // உங்கள் கேள்வி உங்களுக்கே மடத்தனமாக தெரியவில்லையா ? //

    அறிவாளிகளுக்கு மட்டும் தான் குரான் பற்றி பேச உரிமை இருக்கிறதா என்பதை தெளிவு படுத்தவும். ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள நினைப்பவன் அதை பற்றிய முழு அறிவு இல்லாதவனாக தான் இருக்க முடியும். அதை பற்றி முழுவதுமாக தெரிந்தவன் அதை பற்றி கேட்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக அது மடத்தனம் என்றால் நான் மடையன் தான்.

    //எந்த ஒரு மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையையும் அதன் மூல மொழியை வைத்து தெரிந்துகொள்ளலாம். இதுகூடவா உங்களுக்கு தெரியவில்லை ???//

    அதன் மூலமொழி எனக்கு தெரிந்தால் மொழிபெயர்ப்பு பற்றி அதன் நம்பகத்தன்மை பற்றி பேச அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக அந்த மொழியிலையே படித்து தெரிந்து கொள்ள முடியும் . மூல மொழி தெரியாத பட்சத்தில் அதை தெரிந்தவர் எது சொன்னாலும் ஏற்க முடியுமா ?
    அது போன்ற சூழ்நிலைகளில் அந்த மொழி தெரிந்தவரின் நம்பக தன்மை வைத்து ஓரளவுக்கு ஒத்துகொள்ள முடியும் (எனக்கு தெரிந்த வரை).
    மூல மொழி மற்றும் மொழிபெயர்க்க பட்ட மொழி தெரிந்தவர்கள் பலர் அது சரி என்று சொல்லும் சுழலிலும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளமுடியும்.
    அல்லது அரபி தெரிந்த வேற்று மொழிகாரர்கள் ஒன்று போல் குரானை மொழிபெயர்த்து அந்த இரண்டு வேறு வேறு மொழிகளும் எனக்கு தெரிந்தால் இரண்டும் ஒன்று போல் இருந்தால் ஏற்றுகொள்ள முடியும்.

    அதுபோல் எதுவுமே இல்லாமல் மொழிபெயர்ப்பும் குரானும் ஒன்றயே தான் சொல்லும் என்று முடிவாக சொல்கிறீர்கள். நம்புங்கள் என்கிறீர்கள். வெறும் நம்பிக்கை என்பது வளர்ச்சியின் எல்லை. நம்பமாட்டேன் என்பதும் வளர்ச்சியின் எல்லை. தேடல் வளர்ச்சியின் பயணம்.

    நீங்கள் முதலில் எனக்கு அளித்த குரான் வசனங்களை மேற்கோள் காட்டுகிறேன். ஒரு வாக்கியம் மட்டும். கொஞ்சம் விளக்குங்கள்.

    //"பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்"

    16:69 Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]."//

    ஆங்கிலத்தில் தெளிவாக " all the fruits " என்று பதிவு செய்து விட்டு தமிழில் "எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி)". என்று எழுதினால் இரண்டு வாக்கியங்களும் ஒன்றா ?

    இதை தான் கேட்கிறேன் - அதன் நன்பக தன்மை எதை வைத்து முடிவு செய்வது என்று?

    இன்னும் எளிமையாக கேட்கிறேன்.

    ஐயா எனக்கு அரபி தெரியாது இப்பொழுது நான் குரான் படிக்கவேண்டும் எனக்கு தெரிந்தது எல்லாம் தமிழ், ஆங்கிலம் இரண்டு தான். எதில் வேண்டுமானாலும் படிக்கலாம் இரண்டுமே அரபி குரானின் ஆச்சு அசல் என்றால். மேலே உள்ள வேறுபாடு எதில் சேர்ப்பது? ( எனக்கு தேனியை பற்றியே தெரியாது என்று வைத்து கொள்ளுங்கள்).

    ஒரு சிலர் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுகிறார்கள். அவர்களும் ஒரே குரான் தான் படிகிறார்கள்.
    இஸ்லாம் மதத்தின் பேரால் தீவிரவாதம் செய்பவர்களும் அதே குரானை தான் மேற்கோள் காட்டுகிறார்கள். எது உண்மை? எது பொய்? (தயவு செய்து அது எல்லாம் மற்ற மதத்தவர்கள் செய்து விட்டு இஸ்லாம் மீது பழி போடுகிறார்கள் என்று திசை திருப்ப வேண்டாம்).

    அது தனிப்பட்டவர்கள் வேண்டுமென்றே செய்வது என்றால். அமைதி மார்க்கம் என்று சொல்வதும் அதற்க்கு பொருந்தும் இல்லையா?

    மாற்றமில்லாத வேறுபாடுகள் இல்லாத ஒரு இறைவன் இறக்கிய ஒரே ஒரு நூல் எப்படி இரண்டு அர்த்தம் தரும் படி இருக்க முடியும் ? வேறுபாடுகள் இல்லாமல் இருந்தால் ?

    இனி உங்களிடம் ஒவ்வொன்றாக கேட்கிறேன். மொத்தமாக கேட்டால் நான் கேட்ட கேள்வியின் ஆழம் அல்லது எனது கேள்வி உங்களுக்கு சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete