Wednesday, 9 November 2011

இந்து மதம் -12

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் !!!!!!

  
                இந்த தலைப்பை படித்த உடனே எம் ஜி யாருடைய  பாட்டு ஒன்று எல்லோருக்கும் நினைவில் வரும் . அது என்ன பாட்டு என்றால் " கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ..ஒருத்தனுக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ". இந்த தலைப்பை நான் எடுத்ததன் காரணம் இருக்கிறது அதாவது ஒரு வறுமையில் வாடும் குடும்பத்தின் நிலைமையை  பார்த்தோ அல்லது நோயினால் அவதி படுபவர்களை  பார்த்து  அனைவரும் கூறும்  ஒரு வார்த்தை " அந்த கடவுளுக்கு  கண்  இல்லையா " என்று... இவ்வாறு சொல்லும்போது நானும் சில வேளை கடவுள் ஏன் இப்படி ஒரு சாராருக்கு அதிகமாய் கொடுத்து ஒரு சாராரை வறுமையில் வாட வைத்து வேடிக்கை பார்கிறார் என்று நினைத்ததுண்டு .
              ஒரு பல மொழி கேள்வி பட்டுருபீர்கள் அது " நல்லவருக்கு பெய்யும் மழை கேட்டவருக்கும் பொய் சேரும் " என்று ...இந்த உலகத்தில் நல்லவர் இருந்தாலும் சரி கெட்டவர் இருந்தாலும் சரி மழை என்பது இருவருக்கும் சேர்ந்து தான் பொழிகிறது இப்படியாக இறைவன் படைத்த  இந்த இயற்கையானது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பொது  இறைவனுடைய கருணை என்பது எப்படி ஒருசாராருக்கு மட்டும் போகிறது என்று கூறமுடியும் ?. இதற்க்கு நம் இந்து மதம் என்ன விளக்கம் தருகிறது என்று பார்ப்போம்.
             அதாவது இந்த உலகில் ஒருவன் நன்மை அனுபவிப்பதும் தீமை அனுபவிப்பதும் அவன் செய்த கர்ம பலனாலே என்கிறது. கர்மம் என்றால் என்ன ? " கர்மம் " வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால் " உழைப்பு " . நீ இன்று நன்றாக உழைத்தாயானால் நாளை அந்த உழைப்புக்கேற்ற ஊதியம்  கிடைப்பது  உறுதி. சொல்லப்போனால்  நம்முடைய   ஒருவேளை சாப்பாட்டை  கூட அந்த உழைப்புதான் தீர்மானிகிறது அல்லவா. நாம் அதிகமாக சம்பாதிப்பது அல்லது குறைவாகவும் சம்பாதிக்க காரணம் நம்முடைய உழைப்புதான். இதில் வேறொருவருடைய சூழ்ச்சியோ அல்லது தந்திரமோ இல்லை .அதைப்போலத்தான் நம்முடைய அடுத்தடுத்த பிறவியில் படும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் நம்முடைய  கர்ம பலனே. மறு பிறவியில் நம்முடைய உடலமைப்பு கூட நாம் செய்த  கர்ம பலன் படியே அமைகிறது. ஜனனமும் மரணமும் நாம் செய்த கர்ம பலனை பொறுத்தே. இவ்வாறு இருக்கும் பொழுது என்னுடைய இந்த நிலைமைக்கு கடவுள்தான் காரணம் என்று நாம் பிதற்றுவது ஏன் ?. காரணம் நாம் நம்மை பற்றி அறியாததின் விளைவே. இதற்குதான் எல்லாம் அறிந்த ஞானிகள் நமக்குள் இருக்கும் ஆன்மாவை தேடு என்கின்றனர். நாம் நம் ஆன்மாவை அறிந்தால் மட்டுமே அதன் பல்வேறு நிலைகளை அறிய முடியும். ஒருவன் தன் ஆன்மாவை அறிந்துகொண்டால் இப்பிறவியில் பெரும் இன்பம் மற்றும் துன்பத்திற்கான காரணம் புரியும். அதை விடுத்து அடுத்தவர் மீது பழியை போடுவது சிறுபிள்ளை தனமானது .
            ஒரு சின்ன கதை ஒன்றை கூற விரும்புகிறேன் ..ஒரு ஊரில் மழை இல்லாமல் குளங்களெல்லாம்  வற்றிவிட்டது .குடிக்க நீர் கிடைக்கவே பெரும் திண்டாட்டம்தான். அந்த ஊரில் ஒரு கிழவியும் அவளுடய பேத்தியும் வசித்து வந்தனர் . ஒருநாள் திடிரென்று மழை பெய்தது அப்போது ஊரில் உள்ள அனைவரும் தங்களிடம் உள்ள பாத்திரத்தில் மழை தண்ணீரை பிடித்து வைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்த கிழவி தன் பேத்தியிடம் மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடிக்குமாறு கேட்டால். ஆனால் பேத்தியோ விளையாட்டு ஆர்வத்தில் நான் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு ஓட முயன்றாள் ..உடனே கிழவி நீ ஒன்றும் செய்யவேண்டாம் அடுப்படியில் நான் கழுவி  வைத்த பாத்திரத்தை அப்படியே வெளியே வைத்துவிட்டு மட்டும் செல் என்றால் . பேத்தியும் கிழவி சொன்ன படியே வைத்து விட்டு சென்று விட்டால். பிறகு சிறிது நேரத்தில் மலையும் ஓய்ந்தது . பாத்திரத்தில் நிரம்பிய நீரை எடுக்க சென்ற கிழவிக்கு ஒரே அதிர்ச்சி ..ஏன் என்றால் பாத்திரமானது தலை கீழாக கவிழ்த்து வைக்க பட்டிருந்தது . இதை பார்த்த கிழவிக்கு ஆத்திரம் பீரிட்டு வந்தது உடனே பேத்தியை நோக்கி " அடியே பாதகத்தி என்ன முட்டாள் தனம் செய்தாய் .!!!! இப்படி பாத்திரத்தை கவிழ்த்து வைத்து மழை நீரை பிடிக்க முடியாமல் செய்து விட்டாயே என்று அடிக்க சென்றால் " உடனே பேத்தி சொன்னால் " நீ தானே அடுப்படியில் இருக்கும் பாத்திரத்தை எடுத்து வந்து அப்படியே வைக்க சொன்னாய் நானும் அப்படியேதானே செய்தேன் பிறகு ஏன் என்னை அடிக்க வருகிறாய் என்று கூறினாள். பிறகுத்தான் கிழவிக்கு புரிந்தது முந்திய நாள் பாத்திரத்தை கழுவி கவிழ்த்து வைத்தது.

      பார்த்திர்களா மழை என்னவோ அனைவருக்கும் பொதுவாய்தான் பெய்தது ஆனால் அந்த கிழவிக்கு மட்டும் நீர் கிடைக்க வில்லை ஏன் ? இது அந்த பேத்தியின் குற்றமா அல்லது கிழவியின் குற்றமா ? ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது இது அந்த மழையின் குற்றம் இல்லை . இந்த கதையை  போலத்தான் நமது பிறவி வாழ்க்கையும் ..அதாவது அந்த கதையில் வரும் கிழவி தான் நாம் அந்த கிழவியின் பேத்தித்தான் நம்முடைய கர்மா மற்றும் அந்த மழை தான் இறைவனுடைய அருள். ஒவ்வொரு பிறவியின் போதும் இன்பம் மற்றும் துன்பம் என்பது  நாமும் நாம் செய்த கர்மபலனை பொறுத்தே..!!  இதில் கடவுளின் குற்றம் என்பது சிறிதும் இல்லை எனவே  நாம் செய்த கர்மம் எப்படியோ அதன் படியே நம்முடைய பிறவியும் அமைகிறது. சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள் நெல்லை போட்டு திணையை அறுக்க முடியாது என்று . சில பேர் கேள்வி கேட்பார்கள் நாம் முற்பிறவியில் செய்த பலனை இந்த பிறவியில் ஏன் அனுபவிக்க வேண்டும் என்று  அவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன் அதாவது முற்பிறவி , இப்பிறவி என்ற கணக்கெல்லாம் நமக்குதான் ஆனால் இறைவனுடைய  பார்வையில் நம்முடைய ஒவ்வொரு மரணம் மற்றும் ஜனனம் என்பது நாம் இரவு தூங்கி பகலில் எழுவது போல..சுருங்க சொல்லப்போனால் கிழிந்த ஆடையை மாற்றி புதிய ஆடையை அணிவது போல... ஒருவன் பகலில்  பலபேரை கொன்று  விட்டு  மறுநாள்  தூங்கி  எழுந்ததும் நான் நல்லவன் நான் யாரயும் கொலை செய்ய வில்லை பிறகு ஏன் காவல் துறை எனக்கு தண்டனை தருகிறது என்று கேட்டால் எப்படி இருக்குமோ அதை போலத்தான் இருக்கும் இவ்வாறு நாம் கேட்கும் கேள்வியும்... நாம் நாளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக இன்றே உழைப்பது போல நம்முடைய  பிறவிகள் நன்றாக அமைய இன்றே நல்ல கர்மங்களை செய்ய வேண்டும் என்று நம் இந்து மதம் வழியுறுத்துகிறது .....

 ( தொடரும் )