Monday, 3 October 2011

இந்து மதம் -11

                                                     
இறைவன் நம்மை எதற்காக படைத்தான் ?

            இந்து மதம் இறைவன் நம்மை படைத்ததன் காரணம் என்ன என்ற கேள்விக்கு  என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதாவது இந்த பூமி மற்று எண்ணற்ற ஆண்ட சராசரங்களை படைத்து  அதில்  மனித , தாவர மற்றும் விலங்கினங்களை படைத்ததின்  நோக்கம் தான் என்ன ? நம்மை (படைப்பினங்கள்) வைத்து அவன் பெறுவது தான் என்ன ?என்று எழும்  கேள்வி பொதுவானதே, ஆனால் இதற்க்கு பதில் ஒவ்வொரு மதத்திலும் வேறுபடிகிறது. நம் இது மதம் கூறும் பதிலோ இறைவன் என்பவன் எதையும் எதிர்பாராதவன் எதையும் சார்ந்திராதவன் பிறர் இடத்தில் இருந்து எந்த தேவைகளும் எதிர்பாராதவன்  என்கிறது . அப்படி இருக்கையில் நம்மை ஏன் படைக்க  வேண்டும் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே . அதாவது இந்த பிரபஞ்ச மற்றும் உயிர்களின்  படைப்பிற்கு முன் இறைவன் தனித்து இருந்தார் எனவும் அவர் தனியாக இன்புற விரும்பவில்லை எனவும் தன் இன்பத்திற்காக படைக்க பட்டவையே இந்த படைப்புகள்  என விளக்கம் தருகிறது. இங்கே இன்பம் என்பது தன் சுய லாபத்திற்காக மனிதர்கள் பெரும் இன்பம் இல்லை அதாவது தானும் இன்பம் அடைவேண்டும் மற்றும் தன்னை சார்ந்தவர்களும் தன்னோடு சேர்ந்து இன்பம் அடையவேண்டும் என்ற நோக்கில் படைக்க பட்டவையே இந்த பிரபஞ்சத்தின் படைப்புகள்  என்று கூறுகிறது. அதாவது ஒரு குழந்தை கடற்கரையில் விளையாடும்பொழுது மணலில் வீடு கட்டும் அதை தன் விருப்பதிர்ற்கு ஏற்றவாறு அமைக்கும் அந்த குழந்தையிடம் சென்று ஏன் இவ்வளவு கஷ்ட்ட பட்டு கேட்டுகிறாய் அதால் உனக்கு ஒன்றும் ஆகபோவதில்லை பிறகு ஏன் கெட்டுகிறாய் என்று கேட்டால் அது சொல்லும் சும்மா ஏன் சந்தோசதிர்க்காக விளையாட்டாக கெட்டினேன் என்று பதில் வரும் பின் வீட்டிற்கு செல்லும்போது அதை இடித்துவிடும் ஏன் இடித்தாய் என்று கேட்டால் சும்மா விளையாட்டாக கெட்டினேன்  இப்பொழுது இடிக்கிறேன் என்று பதில்வரும்.
                          அந்த குழந்தையின் காரணத்தை போலத்தான் இந்த பிரபஞ்ச படைப்புகள் மற்றும் பிரபஞ்ச அழிவுகளுக்கான காரணம்  என்கிறது இந்து மதம். அனால் மற்ற மதங்களோ இறைவனை வணங்குவதற்காகத்தான் நாம் படைக்க பட்டோம் என்கிறது. நாம் ஒன்றை மனதில் கொள்ளவேண்டும் நாம் இறைவனை வணங்குவதால் அதில் அவன் அடைய போகும் பயன்த்தான் என்ன ? அதாவது இறைவன் என்ன பேரும்  புகழுக்கும் அழைகிற சாதாரண மனிதனா ?  மனிதன் தான் தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்ற அகங்காரத்தோடு அழைகிறான் அப்படி இருக்கையில் நம்முடைய வணக்கத்தை இறைவன் எதிர் நோக்கி இருந்தால் சாதாரண மனிதனுக்கும் அவனுக்கும் உள்ள வித்யாசம் என்ன ?. பின் ஏன் நாம் அனைவரும் இறைவனை வணங்குகிறோம் ? சற்று சிந்தித்து பாருங்கள் நாம் இறைவனை எதற்காக வணங்குகிறோம் ? நம்முடைய தேவைகளுக்குதானே எனக்கு அதை கொடு இதை கொடு என்றுதானே வணங்குகிறோம் இந்த வணக்கத்தில் இறைவன் பெறும் பயந்தான் என்ன ? . பிறகு எதற்கான இறைவனை வணங்க சொல்லுகிறார்கள் நம் முன்னோர்கள் ? என்ற கேள்வி நமக்கு எழும்.
அதற்க்கு  ஒரு சிறிய வார்த்தை மூலம் பதில் சொல்லிவிடலாம்  அது என்னவென்றால் " நீருக்கு மீன் தேவை இல்லை ஆனால் மீனுக்கு நீர் தேவை ". எனவே வழிபடுதல் என்பது நமக்குதான் தேவையோலிய அதனால்  இறைவனுக்கு ஒன்றும் ஆக போவதில்லை என்பதுதான் உண்மை .
                         நாம் வாழ  இந்த உலகில் நமக்காக நம்மை படைத்த  இறைவன் பலவற்றை படைத்துள்ளான் ஆனால் அவன் நமக்கு தந்த பொருளை அப்படியே அனுபவிப்பது திருட்டுக்கு சமன் . அதற்காகத்தான் அவன் தந்த பொருளை அவன் முன் சமர்பித்து இறைவா நான் வாழ எனக்காக இந்த பொருளை இன்று தந்ததிற்கு உமக்கு நன்றி. இந்த பக்தியை நாம் இறைவனுக்கு செலுத்த வேண்டும் . இது நாம் இறைவனுக்கு கூறும்  நன்றியே ஆகும். இந்த  பக்தியும் நாம் நன்றாக வாழத்தானே தவிர இறைவன் வாழ அல்ல .
                         நம்முடைய படைப்பு என்பது இறைவனோடு நாம் மகிழ்ச்சியாய்  இருப்பதுகாவே தவிர வேற எந்த ஒரு சுயநல காரணமும் அல்ல. இப்ப ஒரு கேள்வி எல்லாம் அது என்ன வென்றால் பிறகு ஏன் இந்த உலகில் அனைவரும் துயரம் அடைகிறார்கள் என்று ? நாம் சற்று ஆழமாக சித்தித்தால் மனிதன் படும் ஒவ்வொரு துயரங்களிர்க்கும் காரணகர்த்தா மனிதனே இருப்பான். அதற்க்கு இறைவன் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. இறைவன் நினைத்தால் எல்லோரும் சந்தோசமாய் இருப்பார்களே ஏன் இறைவன் நினைப்பதில்லை  என்றும் கேட்கலாம். அனைவரும் சந்தோசமாய் இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் எந்த ஒரு ஒரு சுவாரசியம் இல்லாமல் நாம் அனைவரும் இயங்கி கொண்டிருப்போம். கிரிகெட் விளையாட்டில் கூட ஒரு நபரிடம் மட்டையும் இன்னொருவரிடம் பந்தும் இருந்தால்தான்  சுவாரசியமாக இருக்கும் அதை  விடுத்து விளையாட்டில் பங்குபெறும் அனைவரிடமும் பந்தும் மட்டையும் இருந்தால் அந்த விளயாட்டில் எந்த ஒரு சுவாரசியமும் இருக்காது . இதுதான் இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் வாழும்  உயிர்களின் வாழ்கையின் இரகசியமும் கூட ....

தொடரும் ,