இறைவன் நம்மை எதற்காக படைத்தான் ?
இந்து மதம் இறைவன் நம்மை படைத்ததன் காரணம் என்ன என்ற கேள்விக்கு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதாவது இந்த பூமி மற்று எண்ணற்ற ஆண்ட சராசரங்களை படைத்து அதில் மனித , தாவர மற்றும் விலங்கினங்களை படைத்ததின் நோக்கம் தான் என்ன ? நம்மை (படைப்பினங்கள்) வைத்து அவன் பெறுவது தான் என்ன ?என்று எழும் கேள்வி பொதுவானதே, ஆனால் இதற்க்கு பதில் ஒவ்வொரு மதத்திலும் வேறுபடிகிறது. நம் இது மதம் கூறும் பதிலோ இறைவன் என்பவன் எதையும் எதிர்பாராதவன் எதையும் சார்ந்திராதவன் பிறர் இடத்தில் இருந்து எந்த தேவைகளும் எதிர்பாராதவன் என்கிறது . அப்படி இருக்கையில் நம்மை ஏன் படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே . அதாவது இந்த பிரபஞ்ச மற்றும் உயிர்களின் படைப்பிற்கு முன் இறைவன் தனித்து இருந்தார் எனவும் அவர் தனியாக இன்புற விரும்பவில்லை எனவும் தன் இன்பத்திற்காக படைக்க பட்டவையே இந்த படைப்புகள் என விளக்கம் தருகிறது. இங்கே இன்பம் என்பது தன் சுய லாபத்திற்காக மனிதர்கள் பெரும் இன்பம் இல்லை அதாவது தானும் இன்பம் அடைவேண்டும் மற்றும் தன்னை சார்ந்தவர்களும் தன்னோடு சேர்ந்து இன்பம் அடையவேண்டும் என்ற நோக்கில் படைக்க பட்டவையே இந்த பிரபஞ்சத்தின் படைப்புகள் என்று கூறுகிறது. அதாவது ஒரு குழந்தை கடற்கரையில் விளையாடும்பொழுது மணலில் வீடு கட்டும் அதை தன் விருப்பதிர்ற்கு ஏற்றவாறு அமைக்கும் அந்த குழந்தையிடம் சென்று ஏன் இவ்வளவு கஷ்ட்ட பட்டு கேட்டுகிறாய் அதால் உனக்கு ஒன்றும் ஆகபோவதில்லை பிறகு ஏன் கெட்டுகிறாய் என்று கேட்டால் அது சொல்லும் சும்மா ஏன் சந்தோசதிர்க்காக விளையாட்டாக கெட்டினேன் என்று பதில் வரும் பின் வீட்டிற்கு செல்லும்போது அதை இடித்துவிடும் ஏன் இடித்தாய் என்று கேட்டால் சும்மா விளையாட்டாக கெட்டினேன் இப்பொழுது இடிக்கிறேன் என்று பதில்வரும்.
அந்த குழந்தையின் காரணத்தை போலத்தான் இந்த பிரபஞ்ச படைப்புகள் மற்றும் பிரபஞ்ச அழிவுகளுக்கான காரணம் என்கிறது இந்து மதம். அனால் மற்ற மதங்களோ இறைவனை வணங்குவதற்காகத்தான் நாம் படைக்க பட்டோம் என்கிறது. நாம் ஒன்றை மனதில் கொள்ளவேண்டும் நாம் இறைவனை வணங்குவதால் அதில் அவன் அடைய போகும் பயன்த்தான் என்ன ? அதாவது இறைவன் என்ன பேரும் புகழுக்கும் அழைகிற சாதாரண மனிதனா ? மனிதன் தான் தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்ற அகங்காரத்தோடு அழைகிறான் அப்படி இருக்கையில் நம்முடைய வணக்கத்தை இறைவன் எதிர் நோக்கி இருந்தால் சாதாரண மனிதனுக்கும் அவனுக்கும் உள்ள வித்யாசம் என்ன ?. பின் ஏன் நாம் அனைவரும் இறைவனை வணங்குகிறோம் ? சற்று சிந்தித்து பாருங்கள் நாம் இறைவனை எதற்காக வணங்குகிறோம் ? நம்முடைய தேவைகளுக்குதானே எனக்கு அதை கொடு இதை கொடு என்றுதானே வணங்குகிறோம் இந்த வணக்கத்தில் இறைவன் பெறும் பயந்தான் என்ன ? . பிறகு எதற்கான இறைவனை வணங்க சொல்லுகிறார்கள் நம் முன்னோர்கள் ? என்ற கேள்வி நமக்கு எழும்.
அதற்க்கு ஒரு சிறிய வார்த்தை மூலம் பதில் சொல்லிவிடலாம் அது என்னவென்றால் " நீருக்கு மீன் தேவை இல்லை ஆனால் மீனுக்கு நீர் தேவை ". எனவே வழிபடுதல் என்பது நமக்குதான் தேவையோலிய அதனால் இறைவனுக்கு ஒன்றும் ஆக போவதில்லை என்பதுதான் உண்மை .
நாம் வாழ இந்த உலகில் நமக்காக நம்மை படைத்த இறைவன் பலவற்றை படைத்துள்ளான் ஆனால் அவன் நமக்கு தந்த பொருளை அப்படியே அனுபவிப்பது திருட்டுக்கு சமன் . அதற்காகத்தான் அவன் தந்த பொருளை அவன் முன் சமர்பித்து இறைவா நான் வாழ எனக்காக இந்த பொருளை இன்று தந்ததிற்கு உமக்கு நன்றி. இந்த பக்தியை நாம் இறைவனுக்கு செலுத்த வேண்டும் . இது நாம் இறைவனுக்கு கூறும் நன்றியே ஆகும். இந்த பக்தியும் நாம் நன்றாக வாழத்தானே தவிர இறைவன் வாழ அல்ல .
நம்முடைய படைப்பு என்பது இறைவனோடு நாம் மகிழ்ச்சியாய் இருப்பதுகாவே தவிர வேற எந்த ஒரு சுயநல காரணமும் அல்ல. இப்ப ஒரு கேள்வி எல்லாம் அது என்ன வென்றால் பிறகு ஏன் இந்த உலகில் அனைவரும் துயரம் அடைகிறார்கள் என்று ? நாம் சற்று ஆழமாக சித்தித்தால் மனிதன் படும் ஒவ்வொரு துயரங்களிர்க்கும் காரணகர்த்தா மனிதனே இருப்பான். அதற்க்கு இறைவன் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. இறைவன் நினைத்தால் எல்லோரும் சந்தோசமாய் இருப்பார்களே ஏன் இறைவன் நினைப்பதில்லை என்றும் கேட்கலாம். அனைவரும் சந்தோசமாய் இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் எந்த ஒரு ஒரு சுவாரசியம் இல்லாமல் நாம் அனைவரும் இயங்கி கொண்டிருப்போம். கிரிகெட் விளையாட்டில் கூட ஒரு நபரிடம் மட்டையும் இன்னொருவரிடம் பந்தும் இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும் அதை விடுத்து விளையாட்டில் பங்குபெறும் அனைவரிடமும் பந்தும் மட்டையும் இருந்தால் அந்த விளயாட்டில் எந்த ஒரு சுவாரசியமும் இருக்காது . இதுதான் இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களின் வாழ்கையின் இரகசியமும் கூட ....
தொடரும் ,
@சங்கர்,
ReplyDeleteஅதெல்லாம் சரி நண்பரே, நான் கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். மனிதனுன்ன்கு ஒரு ஆரம்பம் இருந்ததை ஒப்புக்கொண்டீர்கள். அது எப்படி ஆரம்பம் ஆனது எனும் கேள்விக்கு இந்து மதம் என்ன பதில் சொல்லுகிறது ? அதையும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.
@ ஷங்கர்
ReplyDeleteநல்ல பதிவு வாழ்த்துக்கள்.குறையாக எண்ண வேண்டாம் ஒரு நண்பனின் கருத்தாக எடுத்துகொள்ளுங்கள். இன்னும் இந்த தலைப்பை இந்த பதிவை செம்மையாக ஆழமாக எழுதி இருக்கலாம்.
@ arafath
உண்மைகள் தெரிந்து கொள்ளும் ஆவலில் உங்கள் கேள்வி எனில் மிக்க மகிழ்ச்சி. இல்லை சும்மா வார்த்தை விவாதம்(time pass) என்றால் நேரத்தை வீண் அடிக்க விரும்பவில்லை. முன்பு நான் இட்ட மறுமொழிக்கு இன்னும் பதில் இல்லை ஒரு வேலை உங்கள் விவாதம் அடுத்தவரை விட நான் புத்திசாலி நான் சொல்வது மட்டும் தான் சரியாக இருக்க வேண்டும், எனக்கு எது தெரிமோ அது மட்டும் தான் சரி எனில் நீங்களே புத்திசாலியாக இருந்து விட்டு போங்கள். திறந்த மனதுடன் உங்கள் கேள்வி எனில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் - " நிரம்பிய கோப்பையில் மேலும் நிரப்ப முடியாது" .
@Mr .shanker & Mr .Arafath என் கருத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றிகளுடன்
பிரபு
பிரபு அவர்களே ,
ReplyDeleteநீங்கள் கேட்ட கேள்வி சரித்தான் அதாவது நண்பர் அராபாத் நாம் கூறும் எதையும் சிந்தித்து பார்ப்பதில்லை .அவருடைய எண்ணமெல்லாம் இந்திய நாட்டில் உள்ள எல்லரையும் இஸ்லாதிர்ற்கு மாற்றவேண்டும் என்ற ஒன்றே ..மற்ற படி நாம் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் இஸ்லாம் ஒன்றே சிறந்த மார்க்கம் ஒன்றே குரான் சிறந்த வேதம் என்ற ஒன்றதான் அவருடைய எண்ணம் ..அவர் உஜிலா தேவி தளத்தில் இட்ட பின்னோட்டத்தை கீழே பார்க்கவும் ...
\\http://ujiladevi.blogspot.com/2011/05/blog-post_02.html?commentPage=3 \\\
//Arafath said... 14
டேய் இலவச விளம்பரமே.....!!!
உங்க அல்லக்கை ஆர்.எஸ்.எஸ். , பீ ( சீய்....!!! நாத்தம் ) ஜெ . பீ ( உவ..!!! ) எல்லாத்தையும் நேபாளத்துக்கு வெரட்டி வுட்டுட்டு. 2050 குள்ள இந்தியாவ வட்டி இல்லாத, வரதட்சனை இல்லாத, பெண்ணடிமைத்தனம் இல்லாத, மூடநம்பிக்கைகள் இல்லாத, கோவில்கள் இல்லாத, கட்டுக்கதைகள் இல்லாத, அநீதி இல்லாத, சிலைகள் இல்லாத, இன்னும் குறிப்பாக உன்னமாதிரி முட்டாள்கள் இல்லாத இஸ்லாமிய நாடா மாத்தி காட்டுறோம். அன்னகி நீ உயிரோட இருந்தா பாரு. இல்லன்னா பாவம் நீ நரகத்துல இருப்ப. இப்போவே அதுக்காக உனக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துறேன்.//
\\நல்ல பதிவு வாழ்த்துக்கள்.குறையாக எண்ண வேண்டாம் ஒரு நண்பனின் கருத்தாக எடுத்துகொள்ளுங்கள். இன்னும் இந்த தலைப்பை இந்த பதிவை செம்மையாக ஆழமாக எழுதி இருக்கலாம். \\
ReplyDeleteநண்பர் பிரபு அவர்களே ,
மன்னிக்கவும் நேர பற்றாக்குறை காரணமாக என்னால் இன்னும் செம்மையாக எழுத முடியவில்லை . நீங்கள் இந்த பதிவை பற்றி இன்னும் விளக்க வேண்டுமானால் தயவு செய்து உங்கள் கருத்தை வெளிவிடவும். நானும் மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.
நன்றி,
சங்கர்
நண்பர் shanker அவர்களுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteதிரு arafath போல எத்தனயோ பேர்களை பார்த்த தர்மம் நம் சனாதன தர்மம் நேற்று இன்று அல்ல. இதன் மகத்துவம் புரியாததனால் அப்படி ஒரு ஒரு உணர்ச்சி வேகம் அவருக்கு. கண்டிப்பாக ஒரு நாள் அவருக்கு உண்மை விளங்கும். இது ஒன்றும் அவர்கள் மதத்தை பின்பற்றுவதனால் இறந்த பின் எல்லாம் முடியும் விஷயம் அல்ல.
மாணிக்கவாசகர் திருவாசக வரிகளை போல்
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்..
அவருக்கே இத்தனை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.
ஆதாம் ஏவாள் எப்படி வந்தாங்கன்னு அவுங்க புத்தகத்துல யாரோ சொன்னாங்க சரி இவர் எப்படி வந்தார்? யாராவது சொன்னாங்களா இல்லை சொல்லுவாங்களா? இல்லை இவர் யார்? அதுவாவது யோசிக்க முடியும்மா ?அவர்கள் அறிவு அவர்கள் புத்தகம் மட்டுமே. அதுல என்ன சொல்லிருக்கோ அது மட்டும் தான் உண்மை.அது முதலில் உண்மையா பொய்யா கூட யோசிக்க கூடாது அப்பறம் பத்வா குடுத்துருவாங்க அவர் என்ன பண்ணுவார் விடுங்க.
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி .................
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே ....
உங்கள் அலுவலுக்கு இடையில் அருமையான பதிவு இடுவதற்கு பாராட்டுகள் பல பல
நீங்கள் பதிந்த பதிவு ஒரு பதிவுடன் முடியும் தலைப்பு இல்லை இன்னும் நிறைய விளக்க வேண்டி உளது. ஆகையால் இன்னும் உங்கள் பதிவை நன்றாக செம்மையாக பதியுங்கள். படிப்பவர்கள் அனைவரும் பயன்பெறட்டும். உங்கள் ஆய்விற்கு பதிவிற்கு என்னால் முடிந்த விளக்கங்களை கருத்துகளை உதவிகளை கண்டிப்பாக உங்களுடன் பகிர்வேன். திருவாசக வரிகள் உங்கள் பதிவை இந்த தலைப்பை மேலும் திறம்பட பதிவிட செய்யவே சிறிய குறிப்பாய் நான் இங்கு பகிர்ந்தேன். உங்கள் வரிகளில் மேலும் விளக்கங்களை காண ஆவலுடன்.....
உங்கள் நண்பன்
பிரபு .
@ சிவம்ஜோதி,
ReplyDeleteநீங்கள் இட்ட மறுமொழி இணைப்பை பார்த்தேன். நன்றி. இருந்தும் நான் சொல்வது எல்லாம் எதையும் உங்கள் அனுபவத்தில் இல்லாததை முழுதாய் நம்பாதீர்கள் . நல்லா விசயங்களை கேளுங்கள் மிக நல்லது அதற்காக அது அப்படியே சரி என ஒத்துகொண்டீர்கலனால் உங்கள் வளர்ச்சி அவ்வளவே. எதுவாக இருந்தாலும் சரி. உங்களுள் தேடல்! உங்கள் அனுபவம், உங்கள் உணர்வு, அன்றி மற்றவை பயனற்றது.
நமது சனாதன தர்மம் நமக்கு தந்த மிகபெரிய விஷயம் சுதந்திரம். (சிந்திக்க கூட உரிமை இல்லாத மதங்கள் மத்தியில்)
நீங்கள் பழனிக்கு போகவேண்டும் என்றால் நீங்கள் சென்றால் மட்டுமே அவ்வழி அந்த அனுபவம் உங்களுக்கு தெரியும் அதை விடுத்து அடுத்தவர் சொல்வதை கேட்டு பழனி தரிசனம் அற்புதம் என்றால் ஏதேனும் பயன் உண்டா? அப்படி கேட்க எண்ணினால் யானையும் நன்கு குருடர்கள் கதை போலதான்.
நன்றி
"என்னுள் என்னை தேடி "
பிரபு
@பிரபு :
ReplyDelete///***உண்மைகள் தெரிந்து கொள்ளும் ஆவலில் உங்கள் கேள்வி எனில் மிக்க மகிழ்ச்சி. இல்லை சும்மா வார்த்தை விவாதம்(time pass) என்றால் நேரத்தை வீண் அடிக்க விரும்பவில்லை. முன்பு நான் இட்ட மறுமொழிக்கு இன்னும் பதில் இல்லை ஒரு வேலை உங்கள் விவாதம் அடுத்தவரை விட நான் புத்திசாலி நான் சொல்வது மட்டும் தான் சரியாக இருக்க வேண்டும், எனக்கு எது தெரிமோ அது மட்டும் தான் சரி எனில் நீங்களே புத்திசாலியாக இருந்து விட்டு போங்கள். திறந்த மனதுடன் உங்கள் கேள்வி எனில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் - " நிரம்பிய கோப்பையில் மேலும் நிரப்ப முடியாது" .
***///
நண்பரே, எனது கேள்விகள் முழுக்க முழுக்க மற்ற மதங்களை பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்வதர்காகவும், அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்வதற்காகவும். குறைகளே இல்லாத இஸ்லாம் மார்க்கத்தை பற்றிய மாற்று மதத்தினரின் தவறான கண்ணோட்டங்களை போக்குவதற்காகவும் தான். நேரப்போக்கு அல்ல.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த தளத்தை பார்வையிடுகிறேன். நீங்கள் முன்னர் இட்ட மறுமொழி என் நியாபகத்தில் இல்லை. ஆதலால் மீண்டும் எனக்கு அந்த மறுமொழியை இட்டால், அதற்கு பதிலளிக்க நான் தயாராகவே உள்ளேன்.
@சங்கர் :
ReplyDelete///***நீங்கள் கேட்ட கேள்வி சரித்தான் அதாவது நண்பர் அராபாத் நாம் கூறும் எதையும் சிந்தித்து பார்ப்பதில்லை.***///
ஆரம்பத்திலிருந்தே நான் சொள்ளவேண்டியவற்றைஎல்லாம் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் நண்பரே....!!!, சிந்திக்காமல் முன்னோர்களை பின்பற்றுவது நானா ??? அல்லது நீங்களா ???
@சங்கர் :
ReplyDelete///***அவருடைய எண்ணமெல்லாம் இந்திய நாட்டில் உள்ள எல்லரையும் இஸ்லாதிர்ற்கு மாற்றவேண்டும் என்ற ஒன்றே ..மற்ற படி நாம் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் இஸ்லாம் ஒன்றே சிறந்த மார்க்கம் ஒன்றே குரான் சிறந்த வேதம் என்ற ஒன்றதான் அவருடைய எண்ணம் ..அவர் உஜிலா தேவி தளத்தில் இட்ட பின்னோட்டத்தை கீழே பார்க்கவும் ...***///
\\http://ujiladevi.blogspot.com/2011/05/blog-post_02.html?commentPage=3 \\\
//Arafath said... 14
டேய் இலவச விளம்பரமே.....!!!
உங்க அல்லக்கை ஆர்.எஸ்.எஸ். , பீ ( சீய்....!!! நாத்தம் ) ஜெ . பீ ( உவ..!!! ) எல்லாத்தையும் நேபாளத்துக்கு வெரட்டி வுட்டுட்டு. 2050 குள்ள இந்தியாவ வட்டி இல்லாத, வரதட்சனை இல்லாத, பெண்ணடிமைத்தனம் இல்லாத, மூடநம்பிக்கைகள் இல்லாத, கோவில்கள் இல்லாத, கட்டுக்கதைகள் இல்லாத, அநீதி இல்லாத, சிலைகள் இல்லாத, இன்னும் குறிப்பாக உன்னமாதிரி முட்டாள்கள் இல்லாத இஸ்லாமிய நாடா மாத்தி காட்டுறோம். அன்னகி நீ உயிரோட இருந்தா பாரு. இல்லன்னா பாவம் நீ நரகத்துல இருப்ப. இப்போவே அதுக்காக உனக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துறேன்.//***///
என் பின்னூட்டத்தில் "இஸ்லாமிய நாடாக மாற்றிக்காட்டுவோம்" என்கிற ஒன்றே ஒன்று தான் உங்கள் கண்ணை உறுத்துகிறது. அதற்கு முன்னால் குறிப்பிட்டவைகளைஎல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை, ஏனென்றால் அவைகளை உங்களால் மறுக்க முடியாதே....!!! நான் குறிப்பிட்ட அவை அனைத்தும் எந்த நாட்டில் இல்லையோ அந்த நாடு நிச்சயமாக ஒரு இஸ்லாமிய நாடாக மட்டுமே இருக்க முடியும். அதனால் தான் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்கிறேன். என்னுடைய பின்னூட்டத்தில் சிறிதளவும் மாற்றமில்லை.
@பிரபு :
ReplyDelete///***ஆதாம் ஏவாள் எப்படி வந்தாங்கன்னு அவுங்க புத்தகத்துல யாரோ சொன்னாங்க சரி இவர் எப்படி வந்தார்? யாராவது சொன்னாங்களா இல்லை சொல்லுவாங்களா? இல்லை இவர் யார்? அதுவாவது யோசிக்க முடியும்மா ?அவர்கள் அறிவு அவர்கள் புத்தகம் மட்டுமே. அதுல என்ன சொல்லிருக்கோ அது மட்டும் தான் உண்மை.அது முதலில் உண்மையா பொய்யா கூட யோசிக்க கூடாது அப்பறம் பத்வா குடுத்துருவாங்க அவர் என்ன பண்ணுவார் விடுங்க.***///
இது என்ன கேள்வி ? நீங்கள் எப்படி வந்தீர்களோ அதே போல தான் நானும் வந்தேன். நான் ஒரு மனிதன். இதை நான் யார் சொல்லி தெரிய வேண்டும் ? யோசிப்பதற்கு இஸ்லாம் தடை போடவில்லையே நண்பரே....!!! எங்கள் வேதத்தில் உள்ளவைகள் உண்மை அல்ல பொய் என்பதை நிரூபித்து காட்டுங்கள் பார்க்கலாம். நாங்கள் உங்களைப்போல சிந்திக்காமல் முன்னோர்களை பின்பற்றுபவர்கள் அல்ல. மாறாக எங்கள் வேதத்தில் உள்ளவைகளை படித்து ஆராய்ந்து அது உண்மை வழி என்று தெரிந்துகொண்ட பிறகே அதனை பின்பற்றுகிறோம். குர்ஆனில் இருந்து ஏதேனும் ஒரு பொய்யான வாசகத்தை எடுத்து காண்பியுங்கள் பார்க்கலாம்.
@அரபாத்
ReplyDeleteநேரம் கிடைக்கும் பொது எனது பதிவிற்கும் சென்று பார்க்கலாமே உங்களுக்கு சில பதில்கள் அங்கும் கிடைக்கலாம் அல்லது இன்னும் உங்கள் நம்பிகையை இன்னும் உறுதி படுத்தலாம் நன்றி..
http://ennulennaithedi.blogspot.com/2011/11/blog-post.html .
@arafath
ReplyDeleteநீங்கள் மேலே இட்ட சில மறுமொழிகளை கவனிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தனித்தனியாக பதில் கூறுவதற்கு பதில் @சிவம் ஜோதிக்கு இட்ட மறுமொழியை உங்களுக்காக மீண்டும் ஒருமுறை சில வரிகள் நீங்கலாக .
நான் சொல்வது எல்லாம் எதையும் உங்கள் அனுபவத்தில் இல்லாததை முழுதாய் நம்பாதீர்கள் . நல்லா விசயங்களை கேளுங்கள் மிக நல்லது அதற்காக அது அப்படியே சரி என ஒத்துகொண்டீர்கலனால் உங்கள் வளர்ச்சி அவ்வளவே. எதுவாக இருந்தாலும் சரி. உங்களுள் தேடல்! உங்கள் அனுபவம், உங்கள் உணர்வு, அன்றி மற்றவை பயனற்றது.
நீங்கள் பழனிக்கு போகவேண்டும் என்றால் நீங்கள் சென்றால் மட்டுமே அவ்வழி அந்த அனுபவம் உங்களுக்கு தெரியும் அதை விடுத்து அடுத்தவர் சொல்வதை கேட்டு பழனி தரிசனம் அற்புதம் என்றால் ஏதேனும் பயன் உண்டா? அப்படி கேட்க எண்ணினால் யானையும் நன்கு குருடர்கள் கதை போலதான்.
நன்றி