இறைவன் நேரில் வருவானா ?
" பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே " இது இறைவனாகிய கண்ண பெருமான் கீதா உபதேசத்தில் அர்ஜுனனுக்கு கூறியது . அது என்னவென்றால் நல்லவர்களை காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் , தர்மங்களை நிலை நிறுத்துவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவ்வாறு இறைவன் இந்த பூமியில் பத்து அவதாரம் எடுத்தார் என்கிறது இந்து மதம். சில சமயம் நம்மை தர்ம நெறியில் வழிநடத்த பல மகான்களையும் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கிறார் அவசியம் இருந்தால் தானும் வருகிறார்.
ஆனால் மற்ற மதங்களோ இறைவன் எந்தவொரு அவதாரமும் எடுப்பதில்லை அவர் தன் தூதர்களை மட்டும்த்தான் அனுப்புவார் என்கிறது . அதாவது இறைவன் ஒரு அதிகார தோரணை கொண்டவன் போல் சித்தரிகின்றனர். ஆனால் இந்துமதமோ இறைவன் நம்மை அரைவனைப்பதில் தாய் என்றும் , நம்மை வழிநடத்துவதில் ஒரு தந்தை என்றும் தன் நாட்டு மக்களை காக்கும் மன்னனை போலவும் , வெற்றியிலும் தோல்வியிலும் பங்கேற்கும் ஒரு நல்ல நண்பனை போலவும் இறைவனை சித்தரிகின்றது.
நமக்கு ஒரு துன்பம் என்றால் ஓடி வருபவனே இறைவன்..!!! அதைவிடுத்து எந்த ஒரு சூழ்நிலையிலும் என் நிலையில் இருந்து நான் இறங்கி வரமாட்டேன் என்று கூறுபவன் இறைவன் இல்லை . ஆனால் அவன் நம்மை காக்க எந்த ரூபத்திலும் வருவான் நாம் தான் அவனை அறிவதில்லை ..!!!! அறிந்து கொள்ள முயல்வதும் இல்லை...!!!!!
மன்னன் என்பவன் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று சட்டம் உருவாக்கினால் மட்டும் போதாது அதன் படி வாழ்ந்து காட்டி மற்ற மக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும்.அதே போலத்தான் தர்ம நெறியில் நம்மை வாழ சொல்லும் இறைவனும் இந்த பூவுலகில் அவதரித்து அதன் படி வாழ்ந்தும் நமக்கெல்லாம் ஒரு உதாரணமாகவும் இருகின்றார் என்கிறது இந்து மதம்.
ஒரு முறை ஒரு மன்னன் அவருடைய மகன் மற்றும் அவருடைய அமைச்சர் ஆகியோர் ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது அந்த மன்னனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது அந்த சந்தேகத்தை தீர்க்கும்படி தன் அமைச்சரிடம் கேட்டார் ..அது என்ன சந்தேகம் என்றால் மக்களை காப்பாற்ற இறைவன் என் நேரில் வரவேண்டும் அவருக்குதான் சக்தி இருக்கிறதே எனவே எதாவது ஒரு தூதரை அனுப்ப வேண்டியதுத்தானே அவர் நேரில் வரவேண்டியதன் அவசியம் என்ன ? என்று கேட்டார் . அதற்க்கு அந்த அமைச்சர் என்ன விளக்கம் கொடுத்தும் அந்த மன்னன் புரிந்துகொள்ள முயலவில்லை ..பொறுமையை இழந்த அந்த அமைச்சர் திடிரென்று மன்னனின் மகனை ஆற்றில் தள்ளி விட்டார். இதை கண்ட மன்னன் உடனே ஆற்றில் குதித்து தன் மகனை காப்பாற்றினார்...மகனுடன் படகில் ஏறிய மன்னன் அமைச்சரை பார்த்து உமக்கு என்ன புத்தி பேதலித்து போனதா ?.. யாரங்கே ..!!! இந்த அமைச்சரை கைது செய்யுங்கள் என்றார். அதற்க்கு அந்த அமைச்சர் மன்னா !!! சற்று பொறுமையாய் இருங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு இப்ப ஒரு தீர்க்கமான பதில் கிடைத்து விட்டது என்றார்." என்ன உளறுகிறீர் ?" என்றார் மன்னன் ...அதற்க்கு அமைச்சர் மன்னரே உங்களுடைய மகன் நீரில் விழுந்த பொழுது நீங்கள் என் ஆற்றி விழுந்து உங்கள் மகனை காப்பாற்றினீர்கள்..அதற்கு மன்னன் " என்ன மடத்தனமாக பேசுகிறீர் ? என் மகனை நான் காப்பாற்றாமல் வேற யார் காப்பாற்றுவார் "...அதற்க்கு அமைச்சர் மன்னரே எந்த வேலை என்றாலும் அதை செய்ய காவலர்களை ஏவும் நீங்கள் உங்கள் மகன் தண்ணீரில் விழுந்த பொது மட்டும் ஏன் காவலர்களை ஏவாமல் நீங்கள் ஆற்றில் குதித்தீர்கள் என்றார்...அதற்க்கு மன்னன் அமைச்சரே விழுந்து என் மகன் அல்லவா அவன் தண்ணீரில் துடிப்பதை பார்த்து கொண்டு என்னால் இருக்க முடியவில்லை உடனே நானும் விழுந்தேன் என் மகனை காப்பாற்றினேன் இதில் என்ன தவறு என்றார் .
உடனே அமைச்சர் மன்னா இப்போது புரிகிறதா இறைவனும் அப்படிதான் அவன் படைத்த எல்லா உயிருக்கும் அவனேதாயும் , தந்தையும் ஆவான் . நமக்கு ஒரு துன்பம் என்றால் நம்மை காப்பாற்ற அவனும் இந்த பூவுலகில் அவதரிக்கின்றான் என்றார்.
தொடரும் ,
@ஷங்கர்,
ReplyDeleteநீங்கள் கொடுக்கும் விளக்கங்களும் கதைகளும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே தவிர அறிவுக்கு ஒவ்வாது...........!!! எனக்கு சில கேள்விகள் எழுகின்றன அவற்றிற்கு பதிலளியுங்கள் நண்பரே......!!!
1) இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, மற்றும் அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
2) குஜராத்தில் நிலா நடுக்கம் ஏற்பட்டபோது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
3) அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் வேலை இழக்கும் போது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
4) ஜப்பானில் நிலநடுக்கங்களும் சுனாமியும் வரும்போது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
5) கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகள் நெருப்பில் கருகி இறந்தபோது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
6) இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏராளமாக நடந்துள்ளன அப்போதெல்லாம் ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
அரபாத் அவர்களே ,
ReplyDeleteநீங்கள் கேட்பது எனக்கு வேடிக்கையாய் இருக்கிறது ....!!!! நீங்களும் ஒரு இறை நம்பிக்கையாளரே ..அப்படி இருக்கையில் ஒரு நாத்திகரை போல் கேள்வி கேட்பது நகைப்புக்குரியது...
இருந்தாலும் அதற்க்கு ஒரு பதில் தருகிறேன் சற்று வித்தியாசமாக ...!!!!
1 ) கேள்வி : இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, மற்றும் அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
பதில் : உங்கள் அல்லா ஏன் காப்பாற்ற வில்லையோ அதே காரணம் .
2 ) குஜராத்தில் நிலா நடுக்கம் ஏற்பட்டபோது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
பதில் : உங்கள் அல்லா ஏன் காப்பாற்ற வில்லையோ அதே காரணம் .
3 ) அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் வேலை இழக்கும் போது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
பதில் : உங்கள் அல்லா ஏன் காப்பாற்ற வில்லையோ அதே காரணம் .
4 ) ஜப்பானில் நிலநடுக்கங்களும் சுனாமியும் வரும்போது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
பதில் : உங்கள் அல்லா ஏன் காப்பாற்ற வில்லையோ அதே காரணம் .
5) கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகள் நெருப்பில் கருகி இறந்தபோது ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
பதில் : உங்கள் அல்லா ஏன் காப்பாற்ற வில்லையோ அதே காரணம் .
6) இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏராளமாக நடந்துள்ளன அப்போதெல்லாம் ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ???
பதில் : உங்கள் அல்லா ஏன் காப்பாற்ற வில்லையோ அதே காரணம் .
@ ஷங்கர்,
ReplyDelete///***பதில் : உங்கள் அல்லா ஏன் காப்பாற்ற வில்லையோ அதே காரணம் .***///
நண்பரே,
உங்களின் பதில் எனக்குத்தான் வேடிக்கையாய் உள்ளது. மனிதன் துன்பம் அனுபவிக்கும் போது இறைவன் ஓடி வந்து காப்பான் என்று நாங்கள் சொல்லவில்லையே....!!! நீங்கள் தானே அப்படிசொல்லிக்கொண்டிருக்கிரீர்கள்....!!! அப்படி இருக்க எங்களை பார்த்து இந்த கேள்வியை யாரும் கேட்க முடியாது.
நாத்திகர்கள் கேட்கும் கேள்வியும் சரிதானே....!!! அதை எப்படி மறுப்பீர்கள் ???
இதோ நீங்கள் இட்ட பதிவிலிருந்த ஒரு வரி....!!!
///*** நமக்கு ஒரு துன்பம் என்றால் ஓடி வருபவனே இறைவன்..!!! ***///
நண்பர் சங்கர் அவர்களே.....!!!
ReplyDeleteஎன்ன உங்களிடமிருந்து பதிலையும் காணோம் பதிவையும் காணோம் ???
கமெண்ட்ஸ் கவனிக்காமல் விட்டுவிட்டேன், இன்று தான் பார்க்க நேர்ந்தது, முதலில் arafath அவர்களுக்கு.
ReplyDelete1. இறைவன் படைத்த இயற்கையை மனிதன் அழிக்கும் போது ஏன் வரவில்லை இறைவன்?!
2. குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டபோது ஏன் வரவில்லை?! அதே போல வளர்ந்த நாடுகள், புயல், இயற்கை சீற்றம் வரும்போது ஏன் இந்திய, இலங்கை இந்தோனேசியா போல இழப்புக்கள் இல்லை? கடவுள் அங்க காபத்த போய்ட்டாரோ?!
3 மும்பை தாக்குதல், திவிரவாத தாக்குதல் நடக்கும் போது ஏன் வருவதில்லை இந்து கடவுள்? ( ஒருவேளை அல்லா உதவரரோ?)
இதே போல கேட்டுகொண்டே போகலாம். கடவுள் குடுத்த அறிவு உபயோகிக்காட்டி.
சரி நண்பர் சங்கர் இட்ட வரிகளுக்கு வருவோம் ///*** நமக்கு ஒரு துன்பம் என்றால் ஓடி வருபவனே இறைவன்..!!! ***///
எத்தனை பேர் கடவுள் இருக்கான் அவன் பாத்துக்குவான் அப்படின்னு முழுசா உணர்ந்தார்கள்? (இது அல்லாவை தொழு அதே நேரம் ஓட்டகத்தை கட்டி வை கதை இல்ல). எல்லாம் அவன் செயல் அப்படின்னு எது நடந்தாலும் அது அவன் சித்தம் அப்படின்னு இருக்கறது.
எத்தனை வருட பழக்கம் கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும்?ஆனால் ஸ்ரீ மத் பகவத் கீதா எப்பொழுது வழங்கபட்டது தெரியுமா? அர்ஜுனன் முழுதாய் கண்ணனிடம் கண்ணா! எனக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை என்று சரணாகதி (வார்த்தையால், மனதால், அறிவால் மட்டும் அல்ல,முழுவதும் சரண்) அடைந்த பின்னால் தான். அதை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.
இப்போ எல்லாம் கடவுளை கும்பிடறது எப்படி தெரியுமா?அதை குடுப்பா, இதை குடுப்பா, காப்பாத்துப வேற எதுக்கும் கடவுள் இல்லை. இல்லாட்டி இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் போல் பயம் செத்ததுக்கு அப்பறம் நரகம். கடவுளுக்கு பயந்து தினம் தொழுதால் சொர்கத்துக்கு டிக்கெட்.(முடிந்தால் தெரிந்தவர்கள் சொல்லவும். சொர்க்கத்தில் நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும் நினைக்கறது எல்லாம் நடக்கும் சரி என்ன தான் பண்ணுவீங்க அங்க? bore அடிக்காது? வெறுத்து போய்டாது? அதை மாதிரி நரகம் வேற இல்ல). அதுக்கு நரகமே பெஸ்ட்.
arafath கடவுளை உணரவேண்டும் என்றால் அதற்கு வழி தேடுங்கள் அதை விடுத்து யாரோ சொன்னார்கள் என்று அறிவை அடகு வைத்து சொர்க்க டிக்கெட் எல்லாம் வாங்க முடியாது. அது வாவது புரிந்து கொள்ளுங்கள். உண்மையில் உங்கள் தேடல் இருந்தால் திறந்த மனதுடன் கேளுங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் உண்மை தேடல் இருந்தால் எனக்கு தெரிந்தவற்றை உணர்ந்தவற்றை பகிர்வதில் எனது தயக்கமும் எதுவும் இல்லை. என் மின்னஞ்சல் joyfulgp@gmail.கம தொடர்புகொள்ளலாம்.
நன்றி திரு சங்கர் நல்ல பதிவு. தினம் உங்கள் பதிவை எதிர்பார்த்து.
நண்பன் பிரபு
அரபாத் அவர்களே,
ReplyDeleteவெலை பளுவின் காரணமாக என்னால் புதிய பதிவுகள் போட முடியவில்லை மன்னிக்கவும் . நீங்கள் கெட்ட கேள்விக்கு பதில் ... இந்த பூவுலகில் நடப்பது , நடக்க இருப்பது , நடந்து முடிந்தது இவை அனைத்தயும் அறிந்தவன் அவன் ஒருவனே அப்படி இருக்கையில் எந்த ஒரு காரண காரியமும் அவனுடைய விருப்பம் இன்றி அவனுக்கு தெரியாமல் நடந்துவிட முடியாது. இந்த உலகில் நல்லவை மட்டும்த்தான் நடக்க வேண்டும் என்று நாம் நினைப்பது எந்த விதத்தில் சரியாகும் அப்படி நடந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் எந்த ஒரு சுவாரசியம் இல்லாமல் நாம் அனைவரும் இயங்கி கொண்டிருப்போம் . அதாவது உப்பில்லாத பண்டத்தை போல் . இந்த உலக வாழ்க்கை என்பது நன்மை மற்றும் தீமை இரண்டையும் உள்ளடக்கியது அப்படிருக்கையில் தனக்கு நன்மை மட்டும் தான் நடக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் சரியாகும். எந்த ஒரு நிகழ்வும் நன்மைக்கே என்று இறைவன் மீது பாரத்தை போட்டும் நாம் நம் செயலை தொடருவதுதான் சரி. ஒரு கெட்ட காரியம் நடந்தால்தான் நன்மை அல்லது ஒரு கெட்ட காரியத்தை தடுப்பதினால்தான் நன்மை என்று நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா என்ன ?. அப்படி இருக்கையில் இந்த காரியத்தை ஏன் இறைவன் செய்தார் அல்லது செய்யவில்லை என்று ஆறறிவு படைத்த மனிதன் கேள்வி கேட்ப்பது சரி அல்ல . " அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது "
@பிரபு ,
ReplyDeleteஅருமையான பதில் ...மிக்க நன்றி ...
@பிரபு
ReplyDeleteநண்பரே.....!!! நான் கேட்ட கேள்விக்கு பதில் இதுவல்லவே.....!!!! என் கேள்விக்கு உங்கள் பதில் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது. தயவு செய்து கேள்விக்கு சம்மந்தமுள்ள பதிலைத்தரவும்.
மிக்க நன்றி.
@சங்கர்,
ReplyDelete///***இந்த உலகில் நல்லவை மட்டும்த்தான் நடக்க வேண்டும் என்று நாம் நினைப்பது எந்த விதத்தில் சரியாகும் அப்படி நடந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் எந்த ஒரு சுவாரசியம் இல்லாமல் நாம் அனைவரும் இயங்கி கொண்டிருப்போம் . அதாவது உப்பில்லாத பண்டத்தை போல் . இந்த உலக வாழ்க்கை என்பது நன்மை மற்றும் தீமை இரண்டையும் உள்ளடக்கியது அப்படிருக்கையில் தனக்கு நன்மை மட்டும் தான் நடக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் சரியாகும். எந்த ஒரு நிகழ்வும் நன்மைக்கே என்று இறைவன் மீது பாரத்தை போட்டும் நாம் நம் செயலை தொடருவதுதான் சரி. ஒரு கெட்ட காரியம் நடந்தால்தான் நன்மை அல்லது ஒரு கெட்ட காரியத்தை தடுப்பதினால்தான் நன்மை என்று நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா என்ன ?. அப்படி இருக்கையில் இந்த காரியத்தை ஏன் இறைவன் செய்தார் அல்லது செய்யவில்லை என்று ஆறறிவு படைத்த மனிதன் கேள்வி கேட்ப்பது சரி அல்ல . " அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது " ***///
ஹப்பாடா......!!! இப்போதாவது ஒப்புக்கொண்டீர்களே அதுவரை எனக்கு மகிழ்ச்சி. நான் சொல்ல வந்த கருத்தும் இது தான். அதனால் தான் நான் உங்களிடம் கூறினேன் "துன்பம் வரும்போதெல்லாம் ஓடி வந்து நம்மை காப்பவனே இறைவன்" என்று நீங்கள் கூறும் கோட்பாடு தவறானது என்று.
மிக்க நன்றி திரு சங்கர் அவர்களுக்கு.
ReplyDeleteArafath அவர்களே உங்களுக்கு பதில் புரியவில்லை என்பதற்காக சம்மந்தமே இல்லை என்றால் எப்படி? நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் இல்லை அவ்வளவு தான் அதற்காக சம்மந்தமே இல்லை என்றால் என்ன சொல்ல? ஒரு வேலை நீங்கள் எதிர் பார்த்த பதில் கிடைக்கவில்லை என்பதால் சம்மந்தம் இல்லை என்ற முடிவிற்கு வந்து விட்டீர்காளோ? (அடிப்படையில் அடுத்தவர்கள் சொல்வதை கொஞ்சம் கூட ஆராயாமல் நம்பினால் இப்படி தான்) தேடலின்றி பதில் தேடும்.
முடிந்த வரை நேரடி பதில் எழுத முயற்சிக்கிறேன்.
//இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏராளமாக நடந்துள்ளன அப்போதெல்லாம் ஏன் வரவில்லை உங்கள் கடவுள் ??? //
///*** நமக்கு ஒரு துன்பம் என்றால் ஓடி வருபவனே இறைவன்..!!! ***/// - இந்த கோட்பாடு தானே தவறு என்று விவாதம்?
உங்கள் நினைப்பில் அல்லது உங்கள் நம்பிக்கையில் மனிதனை மட்டும் தான் கடவுள் படைத்தானா? மற்றவை எல்லாம்? கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம் தான். மனிதனுக்கு மட்டும் தான் கடவுள் மற்றவைகளுக்கு உயிர் உணர்ச்சி எதுவும் இல்லையோ? மனிதனுக்காக படைக்க பட்டவை தான் மற்ற உயிரினங்கள் என்ற நினைப்பு இருந்தால் இப்படி தான் தோன்றும். மனிதனுக்கு மட்டும் தான் சொர்க்கம் மன்னிக்கவும் அப்ரகமிய மதங்களை பின்பற்றும் மனிதனுக்கு மட்டும் தான் கடவுள் உரிமை கொடுத்துள்ளார். கடவுள் அவனை மட்டும் தான் காப்பற்றவேண்டும். கடவுள் இப்படி தான் இருக்க வேண்டும், இதை மட்டும் தான் செய்வார் என்று மனிதனுக்கு நினைப்பு.
கடவுள்- வரையறைக்குள் வைத்தால் அது கண்டிப்பாய் கடவுள் இல்லை. - உங்களுக்கு பாயிண்ட் கிடச்ச மாத்ரி இருக்கு இல்ல?
நமக்கு ஒரு துன்பம் என்றால் ஓடி........ (அது வடிவேலு உங்கள் சொத்து... காமெடி கருத்து மாதிரி) யார் சொன்னாலும் அவர்களுக்காய் (மனிதர்களுக்கு மட்டும் அல்ல).
"வாடிய பயிரை கண்டபோதேல்லாம் வாடினேன்" - அருட்ப்ரகாச வள்ளலார் - இதை தான் தெய்வீக குணம் என்று சொல்வார்கள்.
(குரங்கை கல்லால் அடித்து கொல்வதை அல்ல).
விடை சம்மந்தம் இருக்கா?
எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒன்று தான். நேராக சொன்னால் மனம்(அகங்காரம்) ஏற்காது.அதனால் தான் இன்னும் வெளிபடையாக விடை சொல்ல வில்லை.
என் முதல் மறுமொழியில் சொன்னதை திரும்பவும் ஒரு முறை திறந்த மனதுடன் உண்மையை தேடுங்கள் உண்மை உணர்வீர்கள்..
கடவுள் எல்லை அற்றவன் - சொன்னாலும் அதுவும் எல்லை தான்.
மனிதத்துடன் சில கேள்விகள் உங்களுக்காக..
என்னை படைத்தவனுக்கு - என் உடல், என் உணர்வு, என் அன்பு, என் நன்றி, எனக்கு தெரிந்த முறை , என்னால் எது முடியுமோ , எது என்னக்கு பிடிக்குமோ , எது எனக்கு முழுமையாய் உணர்கிறானோ அவ்வழி என் வழிபாடு - கடவுள் தண்டிப்பானா? எதாவது பிரச்சனை இருக்கா? (இது தான் சனாதன தர்மம் உங்கள் எண்ணத்தில் ஹிந்து மதம்).
இந்தியாவில் பல தெய்வங்கள்(உங்கள் பார்வையில்) பல வழிபாட்டுமுறை எத்தனை உயிர் இழப்புக்கள் இங்கே கடவுள் பெயரால்?
என்னை படைத்தவனுக்கு - என் உடல், என் உணர்வு, என் அன்பு, என் நன்றி, உங்கள் வரையறை, யாரோ சொன்ன முறை, நீங்கள் நினைக்கும் அவ்வழி மட்டும் தான் வழிபாடு, வேறு வழி நடந்தால் தண்டனை, எப்பொழுதும் கடவுள் பெயரால் மனித பயம்.(செத்தபின் நரகம் அதை விட கொடுர மனித தண்டனைகள்) பிரச்சனை இருக்கா? இல்லையா ? (இது தான் அப்ரகமிய மதங்கள்).
ஒரு கடவுள்-சண்டையில் எத்தனை உயிர் இழப்புக்கள்?
பிரச்சனை கடவுளுக்கு இடையில் இல்லை. பிரச்சனை எல்லாம் மனித நம்பிக்கைக்கு இடையில் ..
உண்மையை தேடுங்கள் திறந்த மனதுடன்..
அன்புடன்
பிரபு
@arafath - dubai , அந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் - கர்மா. பூர்வஜென்ம பலன். இறந்தவர்கள் பல ஆயிரம் கோடி வருடங்களுக்கு பின் வரப்போகும் மறுமை நாளுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை. அந்த இறந்து போன மனிதர்களின் ஆத்மா. இன்னேரம் வேற இடங்களில் மறுபிறவி எடுத்திருக்கும். அதனால் இது ஒன்றும் அவர்களுக்கு தண்டனை அல்ல. இறக்காமல் சொத்து சுகங்களை இழந்தவர்களும் அனுபவிப்பது கர்மாவினால். இது கடவுள் குடுக்கும் தண்டனை அல்ல. கடவுள் ஒன்றும் கொடியவனல்ல.(அல்லா மாதிரி அல்ல)
ReplyDelete@arafath - dubai// ஒருவன் போன பிறவியில் செய்த நன்மைகளுக்கு இந்த பிறவியில் இன்பம் அனுபவிக்கிறான் என்றால் அவன் போன பிறவியில் என்ன நன்மை செய்தான் என்பதை அவனுக்கு தெரியப்படுத்தினால் தானே அவன் மீண்டும் மீண்டும் அதே போல நல்ல கர்ம வினைகள் செய்வான் ??? //
ReplyDeleteபலனை எதிர்பார்காமல் காரியம் செய்ய வேண்டும் என்பது ஹிந்து மத கருத்து. இது இப்படி இருக்க போன பிறவியில் செய்த நல்லது எது , அதே மாதிரி இப்பிறவியிலும் செய்து பலன் அடைவேன் என்பது சுய நலம். எல்லோரும் எப்போதும் நல்லதே செய்யவேண்டும், அனைத்து உயிர்களும் ஒன்றே என்று கூறுவது இந்து மதம்.
//அல்லது ஒருவன் போன பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் துன்பம் அனுபவிக்கிறான் என்றால் அவன் போன பிறவியில் என்ன பாவம் செய்தான் என்பதை அவனுக்கு தெரியப்படுத்துவதுதானே முறை ??? அப்படி தெரியப்படுத்தினால் தானே மீண்டும் அந்த பாவத்தை அவன் செய்ய மாட்டான் ???//
ஓ, போன பிறவியில் நான் கற்பழித்தினால் இந்த பிறவியில் நான் இந்த கஷ்டபடுகிறேன், அதனால் இந்த பிறவியில் நான் கற்பழிக்க மாட்டேன் ஆனால் கொலைசெய்வேன்... அப்படித்தானே.
ஹிந்து மதம் கூறுவது இறைவன் அனைத்து உயிர்களிலும் இருக்கிறான். அப்படி இருக்கும் போது அடுத்தவர்களுக்கு மனதிலும் தீமையை நினைக்காமல் இருக்கும் படி ஹிந்து மதம் சொல்கிறது. அப்படி எந்த பாவம் செய்தோம் என்று தெரியாமல் இருப்பதால் , எந்த தவறையும் செய்யாமல் இருக்க முயல்வோம். அது தான் இந்த கருத்து.
// சாதாரண மனித சட்டமே என்ன சொல்கிறது ??? ஒரு மனிதன் சுய நினைவை இழந்துவிட்டால் அவனை நீதிமன்றம் தண்டிக்காது. ஏனென்றால் அவன் என்ன செய்தான் என்பது அவனுக்கே தெரியாது. சாதாரண மனிதனுக்கே சுய நினைவு இல்லாத சக மனிதனை தண்டிக்க மனம் வராத போது. இறைவனுக்கு மட்டும் போன பிறவியின் நினைவு சற்றும் இல்லாத மனிதனுக்கு துன்பம் கொடுக்க எப்படி மனம் வரும் ??? சிந்தியுங்கள் நண்பரே.....!!!//
இது இறைவன் குடுக்கும் தண்டனை இல்லை , தவறு செய்தவன் தானாக அடையும் தண்டனை.
(cosmic rule) இந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தும். அதனால் தான் புராணக்கதைகளில் தேவர்கள் தவறு செய்தாலும் அதன் பலனை அனுபவிப்பார்கள் என்று இருக்கிறது.
இதில் சிந்திக்கவேண்டியது நாங்கள் இல்லை , நீங்கள் தான். கடவுள் பெயரால் கொலை , கொள்ளை , கற்பழிப்பு செய்தவன் சுவர்க்கத்துக்கு போவான் என்று நம்புவது மூடத்தனம்.