Tuesday 9 August, 2011

இந்து மதம் -9

       
இறைவன் எப்படிபட்டவன் ...!

  
              இஸ்லாம் மதம் மற்றும் கிறிஸ்துவமதம் இறுதி தீர்ப்பு நாளில் இறைவன் தீர்ப்பளித்து  ஒரு சிலரை  சொர்கத்திற்கும் ஒரு சிலரை நரகத்திற்கும் அனுப்புவார்  என்று அவர்களின் பைபிள் மற்றும் குரான் கூறுகிறது. ஆனால் நம் இந்து மதம் என்ன கூறுகிறது என்று ஒப்பிட்டு பார்ப்போம்.

         அதாவது இறைவன் (அல்லா / கர்த்தர் ) மனிதர்களை படைத்து அவர்கள் வாழும் காலத்தில் செய்த நன்மைகளையும் தீமைகளையும் வைத்து ஒருசாராரை சொர்கத்திற்கும் ஒருசாராரை நரகத்திற்கும் அனுப்புகிறார் ..ஆனால் இந்துமதமோ ஒருவனுக்கு நிரந்தர சொர்கமோ அல்லது நிரந்தர நரகமோ கிடையாது  என்கிறது..அப்ப எதுதான் நமக்கு நிரந்தர இன்பம் என்று பார்க்கும் பொழுது மனிதனாக பிறந்த ஒருவனுக்கு நிரந்தர இன்பம் என்பது இறைவனை அடைவதே என்கிறது இந்து மதம்..ஆனால் அது ஒரே பிறவியில் சாத்தியமா என்றால் சாதாரண மனிதர்களால் முடியாது ..ஒருவன் தான் செய்யும் பாவங்களால் பல்வேறு பிறவிகள் எடுக்க நேர்கிறது ..ஒருவன் இறுதியாக இறைவனை  அடைந்த  பிறகு மட்டுமே  அவனுடைய பிறவி முற்று பெறுகிறது .ஒருவனை படைத்தால்  மட்டும் போதாது அவனை திருத்தி மீண்டும் தன்னில் சேர்த்துகொள்ளும் கடமையும்  அந்த இறைவனுக்கு உண்டு என்கிறது  ஹிந்து மதம் .

 இறைவன் ஒருவனை நிரந்தரமாக நரகில் தள்ளுவதற்கு இஸ்லாமியர்கள்  மற்றும் கிறிஸ்துவர்கள் சொல்லும் காரணம் அவன் கடைசி வரை திருந்தவில்லை ( இதில் திருந்தவில்லை என்பது அவர்கள் மதத்தில் இணையவில்லை என்பதும்  ஒரு காரணம் ). ஆனால் அதிலும் ஒரு கேள்வி எழுகிறது   அவன் (மனிதன்) திருந்தவே மாட்டான்  என்று அவனை நரகில் தள்ளுவதற்கு பதில் அவனை படைத்திருக்காமல் இருந்துருக்க வேண்டியதுதானே ? அவன் இறுதி வரை திருந்த மாட்டான் என்று எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை அவனை படைக்கும்  முன்பே தெரியாதா ? பிறகு ஏன் அவனை படைக்கவேண்டும் ..!..அவனை ஏன் நிரந்தர நரகில் தள்ளவேண்டும் ? இறைவன் அவ்வளவுகொடூரமானவனா என்ன ?
     
     கெட்டவனுக்கு நரகில் துன்பப்பட மேலும் மேலும் அவனுக்கு உடம்பும் சதையும் கொடுக்கும் அல்லா/கர்த்தர்  அவன் திருந்துவதற்கு மீண்டும்  ஒரு சந்தர்ப்பம் ஏன் கொடுப்பது  இல்லை ?  பிறகு  ஏன் அவனை கருணையுள்ளவன் என்று கூறவேண்டும் ?
  
    ஒருவனை நரகில் தள்ளுவதற்கு தன் ஒட்டுமொத்த சக்திய கொண்டு அவனை  உயிர் பெற செய்யும் அல்லா/கர்த்தர் அதே சக்தியை கொண்டு அவன் வாழும்போது " நீ  திருந்துவாயாக " என்று கூறி ஒரே நொடியில் அவனை நல்லவனாக மாற்ற வேண்டயது தானே ? 
ஏன் செய்வது  இல்லை ?...இவ்வாறு பல கேள்விகள் எழுகிறது .

  எப்படி ஒரு பிள்ளையை பெற்றவனுக்கு அவனை நல்ல ஆளாக்கும் கடமையும்  ஒரு தந்தைக்கு உள்ளதோ  ...! அதைபோல் படைத்த உயிர்களை நல்வழிபடுத்தி மீண்டும் தன்னில் சேர்த்துகொள்ளும் கடமையும் உள்ளது அந்த  இறைவனுக்கு ..! மகன்  திருந்த வில்லை என்று அவனை வாழவும் விடாமல் சாகவும் விடாமல்  எந்தவொரு தந்தையும் தன் மகனை சித்திரவதை செய்வதில்லை அதே போல்தான் இறைவனும் என்கிறது இந்து மதம் .

 எனவே  ஒரு ஆத்மாவின் இறுதிநிலை என்பது நிரந்தர சொர்கமும் இல்லை நிரந்தர நரகமும் இல்லை , முக்தியே அதன் இறுதிநிலை என்கிறது ..மனிதனாக பிறந்த  ஒருவன் முக்தி அடைவதே மெய்யான இன்பம் என்கிறது  , முக்தி என்றால் இறைவனை அடைதல் , ஒருவன் இறைவனை அடைந்த  பிறகு அவனுக்கு பிறவியில்லை , உடல் இல்லை , பசி இல்லை , நோயில்லை . இறைவனால் படைக்க பட்ட எல்லா உயிரும் ஒரு நாள் இறைவனை கண்டிப்பாக அடையும் என்கிறது ..! அதுவும் அவன் முயற்சியை கொண்டே ..!
           
     ஆனால் இஸ்லாம்/ கிறிஸ்துவ  மதம்   ஒருவனின் இறுதிநிலை சொர்கமே  அல்லது நரகமே என்கிறது ..  அதாவது ஒரு மனிதனுக்கு சொர்கத்தில் நிரந்தர ஆறும் , குராயாத உணவும் , ஆசைக்கு ஒரு துணையும்  கிடைக்கும் என்கிறது ..மீண்டும் அது ஒரு போக வாழ்க்கைக்கே முக்கியத்துவம் தருகிறது ...! ஆனால் இறைவனை அடைந்தவனுக்கு ஆறும் தேவை இல்லை , பசிக்கு உணவும் தேவை இல்லை , இச்சைக்கு துணையும் தேவை இல்லை ...!

ஒரு சின்ன கதை ..!  ஒரு ஞானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார் அப்போது அந்த ஆற்று நீர் ஒரு  தேளை இழுத்து சென்றதை பார்த்து அதை காப்பாற்றும்  பொருட்டு அதை தன் கையில் பிடித்தார் அந்த தேள் உடனே அவரை கொட்டியது அதை பார்த்த அந்த ஞானியின் சீடர் குருவே அந்த தேளை காப்பாற்ற நினைத்த உங்களையே அது கொட்டிவிட்டது பிறகு அதை ஏன் உங்கள் கையில் பிடிக்கிறீர்கள் அதை விட்டு விடுங்கள் என்று கூறினார் அந்த  சீடர் ..உடனே குரு கூறினார் சீடனே தேளின் குணம் கொட்டுவது அது தன் கர்மத்தை சரியாக செய்கிறது ..மனிதராகிய நம் குணம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த  தேளை காப்பாற்றுவது ..!அதை தான் நான் செய்கிறேன் என்றார் ...! இறைவனால் ஞானம் பெற்ற ஞானிக்கே இந்த குணம் என்றால் இறைவனின் குணம் எப்படி இருக்கும் ?  அவன் ஞானிகேல்லாம் ஞானி ...! அவன் அறியாத சூட்சமமா என்ன ...!

தொடரும் ...
                                                    

64 comments:

  1. @ஷங்கர்,

    நண்பரே....!!! எனக்கு இங்கே ஒரு கேள்வி எழுகிறது. சொர்க்கமோ....நரகமோ....இந்து மதத்தில் இல்லை என்றால். சக மனிதனால் அநீதி இழைக்கப்பட்ட மனிதனுக்கு எவ்வாறு நீதி வழங்குவார் உங்கள் கடவுள் ???

    ReplyDelete
    Replies
    1. அதற்கு தண்டனை அளிக்கவே
      சனீஸ்வர பகவானிடம்
      பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
      பாவ கணக்கை தீர்ப்பவர் அவர்

      Delete
  2. அரபாத் அவர்களே ,
    உங்களுக்கு ஒரு பல மொழியை கூறி நீங்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் தருகிறேன் அது என்ன பழமொழி என்றால் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " இதற்கு விளக்கம் என்னவென்றால் ஒருவன் இந்த உலகில் துன்பமடைவதும் இன்பமடைவதும் அவனுடைய செயலாலே வேறு யாராலும் அல்ல . ஒருவன் இன்று படும் துன்பங்களுக்கு முற்பிறவியில் அவன் செய்த வினையின் பலனாக கூட இருக்கலாம்.
    அப்படி இருக்க எனக்கு இவன் துன்பம் இழைத்து விட்டான் எனக்கு நீங்கள் நீதி தரவேண்டும் என்று கூறி இறைவனிடம் போய் எப்படி கேட்க முடியும் ? முற்பிறவியில் பலபேருக்கு அநீதி இழைத்த நீ இன்று எனக்கு நீதி வேண்டும் என்று என்னிடம் எப்படி உன்னால் கேட்க முடிகிறது என்று இறைவன் கேட்டால் என்ன பதில் நாம் கூற முடியும் ?
    நண்பரே இறைவன் ஒன்றும் சாதாரண மனித நீதிபதியல்ல..நீங்கள் செய்த குற்றங்களை தன் விரல் நுனியில் வைத்துள்ளான் ..அப்படியிருக்க எனக்கு இது நீதி /அநீதி என்று எப்படி வாதாட முடியும் ?
    இன்று மக்கள் நீதி மன்றங்களில் நீதி கேட்டு நிற்பது எதற்காக தமக்கு துன்பம் இழைத்தவன் துன்பமடைய வேண்டும் என்பதற்காக அதில் நமக்கு ஒரு ஆத்ம த்ருப்தி ..ஆனால் நம்முடைய தீய செயலினால் எத்தனையோ பேர் பாதிக்கபடுகிறார்கள் படபோகிறார்கள் அப்படியிருக்க நமக்கு அந்த த்ருப்தி எத்தனை நாளுக்கு ?
    பல திருட்டு வழக்கில் கைதாக இருக்கும் ஒருவன் தன்னிடம் திருடிய ஒருவனுக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்று எப்படி சந்தோஷபட்டு கொள்ள முடியும் ? தானும் ஒரு நாள் அக பட போறோம் என்று தெரிந்தும் ...!
    இறைவனிடத்தில் நீதி என்பது தவறே செய்யாதவன் கேட்க கூடியது...! பல பாவ செயலை செய்த நாம் எப்படி கேட்க முடியும் நண்பரே ? நீதி கேட்டு நிற்கும் நம்மை பற்றி இறைவன் அறியாதவனா என்ன ?
    நடப்பவையெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவனுக்கு நீதியும் தேவை இல்லை ஞாயமும் தேவை இல்லை ...! நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா எது நமக்கு நீதி எது நமக்கு அநீதி என்று ?

    by,
    Shankar

    ReplyDelete
  3. @shankar,

    ///*** " தீதும் நன்றும் பிறர் தர வாரா " இதற்கு விளக்கம் என்னவென்றால் ஒருவன் இந்த உலகில் துன்பமடைவதும் இன்பமடைவதும் அவனுடைய செயலாலே வேறு யாராலும் அல்ல . ஒருவன் இன்று படும் துன்பங்களுக்கு முற்பிறவியில் அவன் செய்த வினையின் பலனாக கூட இருக்கலாம்.***///

    முற்பிறவியில் செய்த கர்ம வினைக்கு தான் இன்று ஒருவன் துன்பமோ இன்பமோ அடைகிறான் என்பது முற்றிலும் அறிவுக்கு ஒவ்வாத கோட்பாடு. ஒருவன் போன பிறவியில் செய்த நன்மைகளுக்கு இந்த பிறவியில் இன்பம் அனுபவிக்கிறான் என்றால் அவன் போன பிறவியில் என்ன நன்மை செய்தான் என்பதை அவனுக்கு தெரியப்படுத்தினால் தானே அவன் மீண்டும் மீண்டும் அதே போல நல்ல கர்ம வினைகள் செய்வான் ???

    அல்லது ஒருவன் போன பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் துன்பம் அனுபவிக்கிறான் என்றால் அவன் போன பிறவியில் என்ன பாவம் செய்தான் என்பதை அவனுக்கு தெரியப்படுத்துவதுதானே முறை ??? அப்படி தெரியப்படுத்தினால் தானே மீண்டும் அந்த பாவத்தை அவன் செய்ய மாட்டான் ??? சாதாரண மனித சட்டமே என்ன சொல்கிறது ??? ஒரு மனிதன் சுய நினைவை இழந்துவிட்டால் அவனை நீதிமன்றம் தண்டிக்காது. ஏனென்றால் அவன் என்ன செய்தான் என்பது அவனுக்கே தெரியாது. சாதாரண மனிதனுக்கே சுய நினைவு இல்லாத சக மனிதனை தண்டிக்க மனம் வராத போது. இறைவனுக்கு மட்டும் போன பிறவியின் நினைவு சற்றும் இல்லாத மனிதனுக்கு துன்பம் கொடுக்க எப்படி மனம் வரும் ??? சிந்தியுங்கள் நண்பரே.....!!!

    ReplyDelete
  4. @ஷங்கர்,

    ///***நண்பரே இறைவன் ஒன்றும் சாதாரண மனித நீதிபதியல்ல..நீங்கள் செய்த குற்றங்களை தன் விரல் நுனியில் வைத்துள்ளான் ..அப்படியிருக்க எனக்கு இது நீதி /அநீதி என்று எப்படி வாதாட முடியும் ?***///

    நாம் செய்த கர்ம வினைகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் இறைவனிடம் தானே நாம் நீதி கேட்க முடியும் ??? வேறு யாரிடம் போய் கேட்பது ??? அப்படி இறைவனிடம் நீதி கேட்க கூடாதென்றால் நம் கர்மவினைகளை இறைவன் தன் விரல் நுனியில் ஏன் வைத்திருக்க வேண்டும் ???

    ReplyDelete
  5. @ஷங்கர்,

    ///***ஆனால் அதிலும் ஒரு கேள்வி எழுகிறது அவன் (மனிதன்) திருந்தவே மாட்டான் என்று அவனை நரகில் தள்ளுவதற்கு பதில் அவனை படைத்திருக்காமல் இருந்துருக்க வேண்டியதுதானே ? அவன் இறுதி வரை திருந்த மாட்டான் என்று எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை அவனை படைக்கும் முன்பே தெரியாதா ? பிறகு ஏன் அவனை படைக்கவேண்டும் ..!..அவனை ஏன் நிரந்தர நரகில் தள்ளவேண்டும் ? இறைவன் அவ்வளவுகொடூரமானவனா என்ன ?***///

    நண்பரே...!!! இஸ்லாத்தை பொறுத்த வரையில் இந்த உலகம் என்பது ஒரு சோதனைக்களம். இந்த சோதனையில் வெற்றி பெற்றவனுக்கு சொர்க்கமும் தோல்வியுற்றவனுக்கு நரகமும் இறுதித்தீர்ப்பு நாளில் வழங்கப்படும். இந்த சோதனையில் வெற்றி பெற வேண்டுமானால் உருவம் அறியப்படாத ஒரே இறைவனை ஏற்று அவன் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். இதற்க்கு மாறாக நடப்பவன் இறுதித்தீர்ப்புநாளில் கண்டிப்பாக தோல்வியடைவான். மனிதன் இந்த சோதனையில் வெற்றி பெறுவதற்காக தான் இறைவன் நமக்கு தூதர்களையும், வேதத்தையும் கொடுத்து அதை ஆராய்ந்து செயல்படுவதற்கு பகுத்தறிவையும் தந்துள்ளான். இந்த சோதனையில் ஒருவன் தோல்வியடைவது இறைவனின் குற்றமல்ல. மனிதனை வழிநடத்துவதர்க்காக வந்த தூதர்களையும், வேதத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காமல் புறக்கணிப்பது மனிதனின் குற்றமே.....!!!

    ReplyDelete
  6. @ஷங்கர்,

    ///***ஒரு சின்ன கதை ..! ஒரு ஞானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார் அப்போது அந்த ஆற்று நீர் ஒரு தேளை இழுத்து சென்றதை பார்த்து அதை காப்பாற்றும் பொருட்டு அதை தன் கையில் பிடித்தார் அந்த தேள் உடனே அவரை கொட்டியது அதை பார்த்த அந்த ஞானியின் சீடர் குருவே அந்த தேளை காப்பாற்ற நினைத்த உங்களையே அது கொட்டிவிட்டது பிறகு அதை ஏன் உங்கள் கையில் பிடிக்கிறீர்கள் அதை விட்டு விடுங்கள் என்று கூறினார் அந்த சீடர் ..உடனே குரு கூறினார் சீடனே தேளின் குணம் கொட்டுவது அது தன் கர்மத்தை சரியாக செய்கிறது ..மனிதராகிய நம் குணம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த தேளை காப்பாற்றுவது ..!அதை தான் நான் செய்கிறேன் என்றார் ...! இறைவனால் ஞானம் பெற்ற ஞானிக்கே இந்த குணம் என்றால் இறைவனின் குணம் எப்படி இருக்கும் ? அவன் ஞானிகேல்லாம் ஞானி ...! அவன் அறியாத சூட்சமமா என்ன ...!***///

    நண்பரே....!!! கற்பனை கதை சொல்வதில் இந்துக்களுக்கு நிகர் இந்துக்கள் தான் என்பதை நிரூபிக்கிறீர்கள். இப்படி கற்பனை கதைகள் சொல்லி சொல்லித்தான் இந்து மதமே உருவானது என்று கூட சொல்லலாம். ஆனால் இஸ்லாத்தில் கற்பனைக்கதைகளுக்கு இடமே இல்லை. கற்பனைக்கதைகளை இஸ்லாத்துடன் சேர்ப்பது பெரும் குற்றம். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் இஸ்லாத்தில் போதுமான விளக்கம் உள்ளது.

    சரி இப்போது நீங்கள் கூறிய கதையில் எனக்கொரு சிறிய சந்தேகம். நீங்கள் கூறும் அந்த ஞானி உண்மையாகவே ஞானியாக இருந்தால் அந்த தேள் தன்னை கொட்டியது போல இன்னொரு மனிதனை கொட்டிவிடக்கூடாது என்று எண்ணி அதை அடித்து கொன்றிருப்பார். அல்லது ஆற்று நீர் அதை இழுத்து செல்லட்டும் என்று ஒன்றும் செய்யாமல் இருந்திருப்பார். ஒரு சாதாரண மனிதன் கூட அந்த சமயத்தில் செய்யும் சரியான கர்மம் இதுதான்.இது தான் சாதாரண மனிதன் கூட செய்வது. இது தான் நடைமுறைக்கும் ஒத்து வரும். நீங்கள் கூறிய கதை கண்டிப்பாக நடைமுறைக்கு ஒத்துவராது. இப்படி பட்ட கற்பனைக்கதைகளை இன்னும் எத்தனை நாட்கள் தான் நம்பிக்கொண்டிருப்பீர்களோ ? சற்று சிந்தியுங்கள் நண்பரே.....!!!

    இதற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா ??? இந்த உலகில் மனிதனை தவிர மற்ற அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது. அந்த தேளை கொல்லும் உரிமை கூட மனிதனுக்கு உண்டு. மற்ற உயிரினங்களை மனிதன் தன் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஆட்டையோ மாட்டையோ அடித்து உணவாக கூட உண்ணலாம், அல்லது தனக்கு எந்த வகையில் பயன்படுமோ அந்த வகையில் அதனை பயன் படுத்தலாம். இது தான் அறிவுக்கு ஏற்ற கோட்பாடும் கூட. மாறாக தேளின் உயிரை பாதுகாப்பது என்பதெல்லாம் கற்பனை கதைகளுக்கு தான் உதவும். அவை கேட்பதற்கு மட்டும் தான் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மனிதனுக்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது.வாதம் செய்வதை விட்டு....உங்கள் வாழ்வில் ...உங்களுக்கு முன் உங்கள் மூதாதையர்கள் வாழ்வில் ....நிகழ்ந்த ..சாதாரண மற்றும் அசாதாரண நிகழ்வுகளை. எண்ணிப் பாருங்கள்... சிந்தனை செய்யுங்கள்..

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. \\\
    நண்பரே...!!! இஸ்லாத்தை பொறுத்த வரையில் இந்த உலகம் என்பது ஒரு சோதனைக்களம். இந்த சோதனையில் வெற்றி பெற்றவனுக்கு சொர்க்கமும் தோல்வியுற்றவனுக்கு நரகமும் இறுதித்தீர்ப்பு நாளில் வழங்கப்படும். இந்த சோதனையில் வெற்றி பெற வேண்டுமானால் உருவம் அறியப்படாத ஒரே இறைவனை ஏற்று அவன் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். இதற்க்கு மாறாக நடப்பவன் இறுதித்தீர்ப்புநாளில் கண்டிப்பாக தோல்வியடைவான். மனிதன் இந்த சோதனையில் வெற்றி பெறுவதற்காக தான் இறைவன் நமக்கு தூதர்களையும், வேதத்தையும் கொடுத்து அதை ஆராய்ந்து செயல்படுவதற்கு பகுத்தறிவையும் தந்துள்ளான். இந்த சோதனையில் ஒருவன் தோல்வியடைவது இறைவனின் குற்றமல்ல. மனிதனை வழிநடத்துவதர்க்காக வந்த தூதர்களையும், வேதத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காமல் புறக்கணிப்பது மனிதனின் குற்றமே.....!!!\\\\

    நண்பரே ,
    அந்த சோதனை களத்தில் அவன் தோற்பான் என்று அவனை படைக்கும் முன்னே உங்கள் அல்லாவுக்கு தெரியாதா ? அவன் கடைசி வரை தன் பகுத்தறிவை பயன்படுத்த போவதில்லை என்று முன்னரே தரியாதா ? பிறகு ஏன் அவனை படைக்க வேண்டும் நண்பரே ? சோதனையில் ஒருவன் தோல்வியடைவது இறைவனின் குற்றமல்ல ஆனால் அவன் தோற்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து அவனை நிரந்தர நரகில் போடுவதுதான் தவறு என்கிறேன் ....!
    ஒருவர் கால் ஊனமுல்லவர் என்றும் அவனால் சரியாக ஓட முடியாது என்று தெரிந்தும் அவனை வலுகட்டாயமாக ஓட்ட பந்தயத்தில் ஓடவிட்டு அவன் தோற்றுப்போனதால் அவனை தண்டிப்பது யாருடைய குற்றம் ? ஓட முடியாத அவனுடைய குற்றமா ? அல்லது கால் ஊனம் என தெரிந்தும் அவனை ஓட்ட பந்தயத்தில் பங்கு பெற செய்தவனுடைய குற்றமா ?

    ReplyDelete
  9. \\\
    நாம் செய்த கர்ம வினைகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் இறைவனிடம் தானே நாம் நீதி கேட்க முடியும் ??? வேறு யாரிடம் போய் கேட்பது ??? அப்படி இறைவனிடம் நீதி கேட்க கூடாதென்றால் நம் கர்மவினைகளை இறைவன் தன் விரல் நுனியில் ஏன் வைத்திருக்க வேண்டும் ???\\\

    பலபேருக்கு அநீதி இழைத்தவன் எப்படி இறைவனிடம் நீதி கேட்டு நிற்க முடியும் என்பது எனது கேள்வி ...!

    ReplyDelete
  10. \\\சரி இப்போது நீங்கள் கூறிய கதையில் எனக்கொரு சிறிய சந்தேகம். நீங்கள் கூறும் அந்த ஞானி உண்மையாகவே ஞானியாக இருந்தால் அந்த தேள் தன்னை கொட்டியது போல இன்னொரு மனிதனை கொட்டிவிடக்கூடாது என்று எண்ணி அதை அடித்து கொன்றிருப்பார்.\\\\

    அரபாத் அவர்களே ..!

    நீங்கள் இப்படி கூறுவது எனக்கு வேடிக்கையாய் இருக்கிறது ...எந்த ஒரு விலங்கும் வழிய சென்று ஒரு மனிதனை தாக்குவதில்லை ..மனிதனால் தனக்கு ஆபத்து நேரபோகிறது என்றால் மட்டுமே அது மனிதனை தாக்கும் ...

    \\நண்பரே....!!! கற்பனை கதை சொல்வதில் இந்துக்களுக்கு நிகர் இந்துக்கள் தான் என்பதை நிரூபிக்கிறீர்கள்\\\

    இஸ்லாமியர்கள் என்றால் சிந்திப்பது இல்லை என்று நீங்கள் இந்த பின்னூடத்தை விட்டு நிரூபிக்கிறீர்கள்..!

    ReplyDelete
  11. \\\இதற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா ??? இந்த உலகில் மனிதனை தவிர மற்ற அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது. அந்த தேளை கொல்லும் உரிமை கூட மனிதனுக்கு உண்டு. மற்ற உயிரினங்களை மனிதன் தன் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஆட்டையோ மாட்டையோ அடித்து உணவாக கூட உண்ணலாம், அல்லது தனக்கு எந்த வகையில் பயன்படுமோ அந்த வகையில் அதனை பயன் படுத்தலாம். இது தான் அறிவுக்கு ஏற்ற கோட்பாடும் கூட. மாறாக தேளின் உயிரை பாதுகாப்பது என்பதெல்லாம் கற்பனை கதைகளுக்கு தான் உதவும். அவை கேட்பதற்கு மட்டும் தான் நன்றாக இருக்கும்.\\\

    நண்பரே ,
    இந்த கதை நான் எதற்காக கூறினேன் என்பது உங்கள் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது...!

    ஹிந்து மதம் கூறுவது என்னவென்றால் இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை சார்ந்தே இருக்கின்றது என்கிறது ..அதாவது புலி மானை சார்ந்து இருக்கிறது மான் புல்லை சார்ந்து இருக்கிறது , புல் மண்ணை சார்ந்து இருக்கிறது ....இப்படியே மனிதனும் இவை எல்லாவற்றயும் சார்ந்துத்தான் இருக்கின்றான் ...அவனுக்கு மட்டும் படைக்க பட்டவை அல்ல இந்த உலகம் ..மனிதனுக்கு ஆறறிவு படைத்தது இவற்றையெல்லாம் அழிப்பதற்க்கு மட்டும் அல்ல பேணி காப்பதற்கும் உண்டு ..அவசியம் இல்லாமல் எந்த ஒரு உயிரையும் அழிப்பதற்க்கு அவனக்கு உரிமையும் இல்லை என்கிறது..அப்படி செய்வது பாவ காரியம்...தெரியாமல் செய்வது வேறு ஆனால் தெரிந்தே செய்த தவறுக்கு அவன் கண்டிப்பாக அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்..இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமே ..நண்பரே அவர் ஒவ்வொரு உயிர்களின் புறத்தோற்றத்தை பார்ப்பதில்லை அந்த உயிர்களின் அகதோற்றமான ஆன்மாவை பார்க்கிறார்...மற்ற உயிர்களின் மீது நீங்கள் இறக்கம் கொண்டால் இறைவன் உங்கள் மீது இறக்கம் காட்டுவான் என்கிறது இந்து மதம் ...!

    நண்பரே உயிர்களை படைத்தது நாம் அடித்து சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல அவைகளிடம் இருந்து நாம் கற்று கொள்வதற்கும் ஏராளம் இருக்கிறது .... உதாரணமாக நாயிடம் இருந்து நன்றியை கற்றுகொள் , மாடிடம் உழைப்பை கற்றுகொள் , புலியிடம் இருந்து வீரத்தை கற்றுகொள் , யானையிடம் இருந்து பலத்தை கற்றுகொள் என்கிறது இந்து மதம்...

    ReplyDelete
  12. \\\முற்பிறவியில் செய்த கர்ம வினைக்கு தான் இன்று ஒருவன் துன்பமோ இன்பமோ அடைகிறான் என்பது முற்றிலும் அறிவுக்கு ஒவ்வாத கோட்பாடு. ஒருவன் போன பிறவியில் செய்த நன்மைகளுக்கு இந்த பிறவியில் இன்பம் அனுபவிக்கிறான் என்றால் அவன் போன பிறவியில் என்ன நன்மை செய்தான் என்பதை அவனுக்கு தெரியப்படுத்தினால் தானே அவன் மீண்டும் மீண்டும் அதே போல நல்ல கர்ம வினைகள் செய்வான் ???\\\\

    நண்பரே ,
    பல தவறுகளை செய்து ஜெயிலில் தண்டனை பெற்று திருந்தி புதிய வாழ்க்கைக்கு திரும்புகிரவனை பார்த்து பொதுவாக எல்லோரும் கூறுவது " பழசையெல்லாம் மறந்துவிடு புதிய மனிதனாக வாழ் " என்பார்கள் எதற்க்காக ? நாம் இத்தனை பாவ காரியம் செய்துவிட்டோமே என்று தினம் தினம் புழுங்கி அழுதானானால் அவன் திருந்தியத்தின் பயன் தான் என்ன ?

    இப்போது தான் அனுபவிக்கும் இந்த துயரத்திற்கு நாம் முற்பிறவியில் செய்த இந்த செயலால்த்தான் என்று அவனுக்கு தெரிந்தால் என்னவாகும் அய்யோ நான் இவ்வளவு மோசக்காரனா என்று குற்ற உணர்வோடு வாழவேண்டியது இருக்கும் இந்த பிறவியில் நமக்கு கிடைத்த தாய் , தந்தை மற்றும் உற்றார் உறவினர்களை அந்நியர்களாக பார்க்க தோன்றும் . அதனால் இந்த பிறவியின் நோக்கமே வினாக போகும் .

    அல்லது இப்பிறவியில் அவன் இவ்வளவு சந்தோசமாய் இருப்பதற்கு காரணம் முற்பிறவியில் அவன் செய்த பல தர்ம காரியங்களே என்று அவனுக்கு தெரிந்தால் என்னவாகும் ...அட..ட.! நான் இவ்வளவு நல்லவனா என்று தனக்கு தானே பெருமை பேசிக்கொண்டு திரிவான் . கண்ணில் காண்பவரையெல்லாம் பார்த்து நான் எவ்ளவு நல்லவன் தெரியுமா என்று ஆணவத்தோடு திரிவான்.இதற்குதான் இறைவன் பூர்வ ஜென்ம ஞாபகத்தை நமக்கு தருவதில்லை ....!

    ReplyDelete
  13. \\\அல்லது ஒருவன் போன பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் துன்பம் அனுபவிக்கிறான் என்றால் அவன் போன பிறவியில் என்ன பாவம் செய்தான் என்பதை அவனுக்கு தெரியப்படுத்துவதுதானே முறை ??? அப்படி தெரியப்படுத்தினால் தானே மீண்டும் அந்த பாவத்தை அவன் செய்ய மாட்டான் ??? சாதாரண மனித சட்டமே என்ன சொல்கிறது ??? ஒரு மனிதன் சுய நினைவை இழந்துவிட்டால் அவனை நீதிமன்றம் தண்டிக்காது. ஏனென்றால் அவன் என்ன செய்தான் என்பது அவனுக்கே தெரியாது.\\\

    ஒருவன் செய்யும் செயலுக்கான நல்லதோ கெட்டதோ அதை அனுபவிப்பது ஆன்மாத்தான் என்கிறது இந்து மதம் ...அதை ஒரு உடம்பின் மூலம் அனுபவிக்கிறது ...உடம்பில்லாமல் அந்த ஆத்மா எதையும் அனுபவிக்க முடியாது .

    \\ஒரு மனிதன் சுய நினைவை இழந்துவிட்டால் அவனை நீதிமன்றம் தண்டிக்காது. ஏனென்றால் அவன் என்ன செய்தான் என்பது அவனுக்கே தெரியாது.\\\\\
    நீங்கள் கூறுவது சரித்தான் சுயநினைவில்லாத ஒருவனும் பிணமும் ஒன்றுதான் எதற்காக? இரண்டுக்குமே எவ்வித உணர்ச்சியும் இருக்காது ...ஒரு பிணத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதுக்கு ஒன்னும் தெரியாது ..எதனால்..? அங்கே அதை உணரக்கூடிய ஆத்மா இல்லை.... அந்த உடம்பில் ஆத்மா இல்லை என்றால் என்ன தண்டனை கொடுத்தாலும் பலன் இல்லை ..! இதில் இருந்து என்ன தெரிகிறது தண்டனையை அனுபவிப்பது ஒரு உடம்பின் மூலமாக ஆத்மா தான் என்று.

    எடுத்துகாட்டாக போன ஜென்மத்தில் ஒருவன் விபச்சாரம் செய்ததினால் பல இன்னல்களை அடைந்து விட்டான் என்றால் மறுபிறப்பில் அவனுக்கு ஏனோ விபச்சாரம் என்றால் வெறுப்பாய் தோனுகிறது...எதற்காக இப்படி ? அந்த ஆத்மா அந்த தீய செயலுக்கான பலனை அனுபவித்துவிட்டதால் அவனுக்கு அது வெறுப்பை தருகிறது ...! இவ்வாறே அவன் தவறான செயலில் ஈடு படாமல் இருக்க முடிகிறது.

    எனவே முதலில் ஒருவன் நான் இந்த உடலா அல்லது ஆத்மாவா என்று உணர வேண்டும்...பிறகே அந்த ஆத்மாவின் பல நிலைகளை அவன் அறிய முடியும் .

    ReplyDelete
  14. @shankar,

    ///***அந்த சோதனை களத்தில் அவன் தோற்பான் என்று அவனை படைக்கும் முன்னே உங்கள் அல்லாவுக்கு தெரியாதா ? அவன் கடைசி வரை தன் பகுத்தறிவை பயன்படுத்த போவதில்லை என்று முன்னரே தரியாதா ? பிறகு ஏன் அவனை படைக்க வேண்டும் நண்பரே ? சோதனையில் ஒருவன் தோல்வியடைவது இறைவனின் குற்றமல்ல ஆனால் அவன் தோற்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து அவனை நிரந்தர நரகில் போடுவதுதான் தவறு என்கிறேன் ....***///

    நண்பரே...!!!

    இறைவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. மரத்திலிருந்து ஒரே ஒரு இலை உதிர்ந்தால் கூட அது இறைவனுக்கு தெரியாமல் விழுவதில்லை. இது இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களும் இறைவனின் வல்லமையை இப்படித்தான் சொல்கிறது. அப்பேற்பட்ட வல்லமையுடையவனுக்கு மனிதன் உலகில் எப்படி செயல்படுவான் என்பது தெரியாமல் போகுமா என்ன ? கண்டிப்பாக தெரியும்.தெரிந்துகொண்டே தான் நம்மை சோதிக்கிறான். உதாரணத்திற்கு ஒரு வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களும் இருப்பார்கள் படிக்காத மாணவர்களும் இருப்பார்கள். எந்த மாணவன் நன்றாக படிப்பான் எந்த மாணவன் படிக்கமாட்டான் என்பது ஆசிரியருக்கு நன்றாகவே தெரியும். எனினும் தேர்வு என்று வரும்போது எல்லோருக்குமே தான் தேர்வு வைப்பார். தேர்வு முடிந்ததும் நன்றாக படிக்காத மாணவனை பெயில் ஆக்கிவிடுவார். இங்கே நன்றாக படிப்பவனுக்கு மட்டும் தேர்வு வைக்கவேண்டியதுதானே என்று நீங்கள் ஆசிரியரிடம் போய் வாதிடுவீர்களா ??? எந்த ஆசிரியரும் மாணவன் படிக்கவில்லை என்று அவனை சித்தரவதை செய்வதில்லை என்று நீங்கள் வாதிடுவீர்களானால், இங்கே நான் உங்களுக்கு காட்டிய உதாரணம் இறைவன் தெரிந்துகொண்டே சோதிக்கிறான் என்பதற்கு மட்டும் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    ReplyDelete
  15. @shankar,

    எல்லோரையுமே இறைவன் நல்லவர்களாக படைத்திருக்க வேண்டியதுதானே...?? என்று இன்னொரு கேள்வியை முன்வைப்பீர்கள்.
    இறைவன் யாரையுமே கெட்டவர்களாக படைக்கவில்லை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. எல்லோரும் குழந்தையிலேயே தீமை செய்பவர்கள் இல்லை. மனிதர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுத்தறிவைக்கொண்டு அவர்களாகவே தான் அந்த பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எல்லோருக்கும் நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்துவிடும். அந்த பக்குவத்தையே இறைவன் தான் கொடுக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள். எதற்காக கொடுக்கிறான் ??? எல்லா மனிதர்களும் நல்லவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே அந்த பக்குவத்தை எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கிறான் ??? அவ்வாறு இறைவன் கொடுத்த அந்த பக்குவத்தை அடைந்தும் ஒருவன் தீமை செய்தால் அது எப்படி இறைவனின் குற்றமாகும் ???

    அல்லது நீங்கள் சொல்வதைப்போல எல்லா மனிதர்களையும் இறைவன் நல்லவர்களாக படைத்தால் அதற்க்கு பெயர் மனித படைப்பு அல்ல. ஆடு மாடுகளை போன்ற ஒரு மிருக படைப்பாகும். ஏனென்றால் அவைகளுக்கு தான் பொய் சொல்ல தெரியாது, புறம் பேச தெரியாது, பாவங்கள் செய்ய தெரியாது. அவைகளுக்கு நல்லவை அல்லது கெட்டவை என்கிற choice ம் கிடையாது. ஆனால் மனிதனுக்கு அந்த choice உண்டு. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பகுத்தறிவையும் கொடுத்துள்ளான். அவ்வாறு இரண்டு choice ஐ மனிதனுக்கு கொடுத்து பகுத்தறிவையும் கொடுத்து அவன் இரண்டில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்று இறைவன் சோதித்துப்பார்க்கிறான். அந்த சோதனையில் வெற்றியடைந்தால் இறைவன் நமக்கு மறுமை நாளில் சொர்க்கத்தை பரிசளிப்பான். தோல்வியடைந்தால் பகுத்தறிவையும் கொடுத்து, தூதர்களையும் வேதங்களையும் கொடுத்து அறிவுரை கூறியும் அதனை புறக்கனித்ததர்க்காக இறைவன் நம்மை தண்டிக்கிறான்.

    ReplyDelete
  16. @shankar,

    ///***ஒருவர் கால் ஊனமுல்லவர் என்றும் அவனால் சரியாக ஓட முடியாது என்று தெரிந்தும் அவனை வலுகட்டாயமாக ஓட்ட பந்தயத்தில் ஓடவிட்டு அவன் தோற்றுப்போனதால் அவனை தண்டிப்பது யாருடைய குற்றம் ? ஓட முடியாத அவனுடைய குற்றமா ? அல்லது கால் ஊனம் என தெரிந்தும் அவனை ஓட்ட பந்தயத்தில் பங்கு பெற செய்தவனுடைய குற்றமா ?***///

    ஊனம் என்கிற உதாரணத்தை வைத்து எதை குறிப்பிடுகிறீர்கள் நண்பரே...??? தீமை செய்பவர்களையா ??? நல்லவர்களுக்கும் சரி கெட்டவர்களுக்கும் சரி. இந்த உலகத்தில் இறைவன் நமக்கு வைக்கும் சோதனைக்கு பகுத்தறிவு ஒன்று இருந்தால் போதும் நண்பரே....!!! அந்த பகுத்தறிவில் குறைபாடு இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பகுத்தறிவில் குறைபாடு உள்ள எந்த ஒரு மனிதனையும் தண்டிப்பதாக இஸ்லாத்தில் சொல்லப்படவே இல்லை.

    ReplyDelete
  17. @shankar,

    ///***பலபேருக்கு அநீதி இழைத்தவன் எப்படி இறைவனிடம் நீதி கேட்டு நிற்க முடியும் என்பது எனது கேள்வி ...!***///

    ஏன் கேட்கக்கூடாது ? ஒரு மனிதன் முற்பிறவியில் மற்றவர்களுக்கு செய்த அநீதியும் இந்த பிறவியில் அந்த மனிதனுக்கே இழைக்கப்பட்ட அநீதியும் ஒன்றாக இருக்குமா ? முற்பிறவியில் நான் ஒருவனை கொலை செய்துவிட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பிறவியில் அவன், ( அதாவது போன பிறவியில் என்னால் கொலையுண்டவன் ) என்னிடம் இருக்கும் பணத்தை திருடிசெல்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டும் வேறு வேறு குற்றம். இரு வேறு குற்றங்களும் ஒன்றோடு ஒன்று எப்படி சமமாகும் ??? அவன் செய்த திருட்டை விட நான் செய்த கொலை மிகப்பெரிய குற்றம். இதற்கு எப்படி நீங்கள் சொல்லும் கோட்பாடு பொருந்தும் ???

    ReplyDelete
  18. @shankar,

    ///***நீங்கள் இப்படி கூறுவது எனக்கு வேடிக்கையாய் இருக்கிறது ...எந்த ஒரு விலங்கும் வழிய சென்று ஒரு மனிதனை தாக்குவதில்லை ..மனிதனால் தனக்கு ஆபத்து நேரபோகிறது என்றால் மட்டுமே அது மனிதனை தாக்கும் ...***///

    நண்பரே....!!! இப்போது நீங்கள் சொல்வது தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. என்னமோ எல்லா மனிதர்களும் தேளை தேடி தேடி பொய் என்னை கொட்டு....என்னை கொட்டு...என்று சொல்வதை போல சொல்கிறீர்கள். தற்செயலாக நடப்பவை தான் அது. ஆனால் அந்த ஞானி (???) தேளை காப்பாற்றும் நோக்கத்துடன் அதை கரையில் எடுத்து போட்டால் அந்தக்கரையோரமாக நடந்து வரும் வேறு ஒரு மனிதன் தற்செயலாக அந்த தேளை மிதித்தால் கூட அது கொட்டிவிடும். இந்த அறிவு கூட உங்கள் கதையில் வரும் அந்த ஞானிக்கு (?) இல்லை என்பதை தான் நான் கூறினேன். இதனால் தான் சொல்கிறேன் நீங்கள் கூறும் இந்த கற்பனை கதையெல்லாம் கேட்பதற்குத்தான் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  19. @shankar,

    ///***இஸ்லாமியர்கள் என்றால் சிந்திப்பது இல்லை என்று நீங்கள் இந்த பின்னூடத்தை விட்டு நிரூபிக்கிறீர்கள்..!***///

    ஆம் நண்பரே உங்களைப்போல கற்பனைக்கதைகளில் எங்கள் சிந்தனைகளை செலுத்துவதில்லை. இஸ்லாத்தில் இருக்கும் உண்மையான விஷயங்களில் மட்டுமே எங்களது சிந்தனைகளை செலுத்துவோம். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் இட்ட பின்னூட்டத்தையே கொஞ்சம் மாற்றி கீழே கொடுக்கிறேன்.

    ///***இஸ்லாமியர்கள் என்றால் (கற்பனையாக எதையும்) சிந்திப்பது இல்லை என்று நீங்கள் இந்த பின்னூடத்தை விட்டு நிரூபிக்கிறீர்கள்..!***///

    ReplyDelete
  20. @shankar,

    ///***ஹிந்து மதம் கூறுவது என்னவென்றால் இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை சார்ந்தே இருக்கின்றது என்கிறது ..அதாவது புலி மானை சார்ந்து இருக்கிறது மான் புல்லை சார்ந்து இருக்கிறது , புல் மண்ணை சார்ந்து இருக்கிறது ....இப்படியே மனிதனும் இவை எல்லாவற்றயும் சார்ந்துத்தான் இருக்கின்றான்.***///

    நான் சொன்னதையே கொஞ்சம் மாற்றி சொல்கிறீர்கள். எனினும் இருவரின் கருத்தும் ஒன்று தான்.

    ///***...அவனுக்கு மட்டும் படைக்க பட்டவை அல்ல***///

    இங்கே தான் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். புலி மானையோ அல்லது மான் போன்ற ஏதேனும் ஒரு மிருகத்தையோ மட்டுமே சார்ந்திருக்கிறது. அதற்கும் புல்லுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே போல் மான் புல் மற்றும் இதர செடிகொடிகளை மட்டுமே சார்ந்திருக்கிறது. மற்ற உயிரினத்திற்கும் அதற்கும் சம்மந்தமில்லை. புற்களும் செடி கொடிகளும் மண்ணை மட்டுமே சார்ந்திருக்கிறது. மற்ற படைப்பினங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால் மனிதன் மட்டுமே இவை அனைத்தையும் சார்ந்தவையாக உள்ளான். ஆகையால் அவற்றின் மீது மனிதன் ஆதிக்கம் கொண்டவனாக இருக்கிறான். மனிதனின் ஆதிக்கம் எல்லா படைப்பினங்களின் மீதும் உள்ளது. அப்படியானால் அனைத்து படைப்பினங்களும் யாருக்கு சொந்தம் ???

    ReplyDelete
  21. @shankar,

    ///***இந்த கதை நான் எதற்காக கூறினேன் என்பது உங்கள் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது...! ***///

    நீங்கள் எதற்காக அந்த கதையை சொன்னீர்கள் என்று எனக்கு தெரியும் நண்பரே...!!! எனினும் அந்தக்கதையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுவது எனது கடமை. இல்லையென்றால் பிற்காலத்தில் அந்த கற்பனைக்கதையை கடவுளின் பெயரால் எல்லா இந்துக்களுக்கும் சொல்லி சொல்லி அதையே வேதம் போல ஆக்கிவிடுவீர்கள். கடவுளுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டதால் பிற்காலத்தில் வரும் உங்கள் சந்ததியினர் அதை சற்றும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காமல் கேள்வி கேட்க பயந்து அதை ஏற்றுக்கொள்வார்கள். இதற்காக தான் நான் சொன்னேன் இப்படி கற்பனை கதைகள் சொல்லி சொல்லி தான் இந்து மதமே வந்தது என்று. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இஸ்லாமும் அதை தான் சொல்கிறது. அதனால் தான் நாங்கள் கற்பனைக்கதைகள் சொல்வதில்லை. இஸ்லாத்தில் உள்ளவற்றை மட்டுமே எடுத்து கூறுகிறோம்.

    ReplyDelete
  22. @shankar,

    ///***இந்த உலகம் ..மனிதனுக்கு ஆறறிவு படைத்தது இவற்றையெல்லாம் அழிப்பதற்க்கு மட்டும் அல்ல பேணி காப்பதற்கும் உண்டு ..அவசியம் இல்லாமல் எந்த ஒரு உயிரையும் அழிப்பதற்க்கு அவனக்கு உரிமையும் இல்லை என்கிறது..அப்படி செய்வது பாவ காரியம்...தெரியாமல் செய்வது வேறு ஆனால் தெரிந்தே செய்த தவறுக்கு அவன் கண்டிப்பாக அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்..இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமே ..நண்பரே அவர் ஒவ்வொரு உயிர்களின் புறத்தோற்றத்தை பார்ப்பதில்லை அந்த உயிர்களின் அகதோற்றமான ஆன்மாவை பார்க்கிறார்...மற்ற உயிர்களின் மீது நீங்கள் இறக்கம் கொண்டால் இறைவன் உங்கள் மீது இறக்கம் காட்டுவான் என்கிறது இந்து மதம் ...!***///

    மனிதன் அழிப்பதற்காக மட்டும் தான் எல்லா உயிரினங்களும் படைக்கப்பட்டன என்று நான் சொன்னேனா ??? என்ன சொல்கிறேன் என்பதை புரிந்துகொண்டு பின்னூட்டமிடுங்கள் நண்பரே....!!! நீங்கள் மேலே கூறிய இந்த கருத்தை இந்து மதம் மட்டும் சொல்லவில்லை எல்லா மதங்களுமே இதை தான் சொல்கிறது.

    ReplyDelete
  23. @shankar,

    ///***நண்பரே உயிர்களை படைத்தது நாம் அடித்து சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல அவைகளிடம் இருந்து நாம் கற்று கொள்வதற்கும் ஏராளம் இருக்கிறது .... உதாரணமாக நாயிடம் இருந்து நன்றியை கற்றுகொள் , மாடிடம் உழைப்பை கற்றுகொள் , புலியிடம் இருந்து வீரத்தை கற்றுகொள் , யானையிடம் இருந்து பலத்தை கற்றுகொள் என்கிறது இந்து மதம்...***//

    மற்ற உயிரினங்களை நாம் அடித்து சாப்பிடுவதற்காக மட்டும் தான் இறைவன் படைத்தான் என்று நான் சொல்லவே இல்லை. அடித்து சாப்பிடுவதற்கும் உரிமை உண்டு என்று தான் சொல்கிறேன். அதை கூட உங்களின் கதையில் வரும் தேளின் உயிரை பாதுகாப்பதை விட அதை அடித்து கொல்வதே சிறந்த கர்மம் என்பதை உணர்த்துவதற்காக தான் சொன்னேன். இந்த கருத்தை நீங்கள் புரிந்துகொண்டால் சரி.

    ReplyDelete
  24. @shankar,


    ///***நண்பரே ,
    பல தவறுகளை செய்து ஜெயிலில் தண்டனை பெற்று திருந்தி புதிய வாழ்க்கைக்கு திரும்புகிரவனை பார்த்து பொதுவாக எல்லோரும் கூறுவது " பழசையெல்லாம் மறந்துவிடு புதிய மனிதனாக வாழ் " என்பார்கள் எதற்க்காக ? நாம் இத்தனை பாவ காரியம் செய்துவிட்டோமே என்று தினம் தினம் புழுங்கி அழுதானானால் அவன் திருந்தியத்தின் பயன் தான் என்ன ?***///

    நண்பரே....!!! நாம் இப்போது விவாதிப்பது குற்றம் செய்தவன் அனுபவிக்கும் தண்டனையைப்பற்றியும். அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு கிடைக்கும் நீதியை பற்றியும் தான். குற்றவாளியின் தண்டனைக்கு பிறகு வாழும் வாழ்க்கை பற்றி அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  25. @shankar,

    ///***இப்போது தான் அனுபவிக்கும் இந்த துயரத்திற்கு நாம் முற்பிறவியில் செய்த இந்த செயலால்த்தான் என்று அவனுக்கு தெரிந்தால் என்னவாகும் அய்யோ நான் இவ்வளவு மோசக்காரனா என்று குற்ற உணர்வோடு வாழவேண்டியது இருக்கும் ***///

    நண்பரே...!!! ஒருவன் தான் செய்தது குற்றம் என்பதை உணர்வதற்காகதான் தண்டனையே வழங்கப்படுகிறது. அது நினைவிற்கு வந்தால் குற்ற உணர்வு ஏற்படும் என்பது என்ன வாதம் ??? இது பொருந்தாத வாதம் நண்பரே....!!!

    ///***இந்த பிறவியில் நமக்கு கிடைத்த தாய் , தந்தை மற்றும் உற்றார் உறவினர்களை அந்நியர்களாக பார்க்க தோன்றும் .***///

    நீங்களாக ஒன்றை கற்பனை செய்து சொல்லாதீர்கள். இந்து மதம் இந்த கேள்விக்கு என்ன விளக்கம் கூறுகிறது என்பதை சொல்லுங்கள். அப்படி பெற்றோர்களை அந்நியர்களாக பார்க்க தோன்றினால் கூட அதுவும் அவனுக்கு ஒரு தண்டனை தான்.

    ReplyDelete
  26. @shankar,

    ///***அதனால் இந்த பிறவியின் நோக்கமே வினாக போகும் .***///

    மறு பிறவியின் நோக்கம் என்னவென்று கேட்டால் கடவுளை அடைவது என்பீர்கள். சரி கடவுளை அடையும் நோக்கில் மனிதன் எடுக்கும் பிறவிகளில் அவன் செய்யும் குற்றங்கள் எவ்வாறு தண்டிக்கப்படும் என்று கேட்டால் இறைவனின் நோக்கம் நம்மை தண்டிப்பது அல்ல மாறாக நமது பாவங்களை கழுவுவது தான் என்பீர்கள். (அப்படியென்றால் மனிதன் செய்யும் குற்றங்களுக்கு கடவுள் உடந்தையாக இருக்கிறாரா ??) சரி அவரது நோக்கம் தண்டிப்பது இல்லையென்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்குவார் உங்கள் கடவுள் ?? என்று கேட்டாலும் போன பிறவியில் பாவம் செய்தவன் இந்த பிறவியில் எவ்வாறு இறைவனிடம் நீதி கேட்க முடியும் ?? என்கிறீர்கள். இந்த வாதம் சரியானது தான் என்பதை நிரூபிக்க மேலே நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

    இடை இடையே உங்களது கருத்துக்கு நீங்களே முரண்பட்டுக்கொண்டு போன பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் துன்பம் அனுபவிப்பான் என்றும் சொல்கிறீர்கள். சரி போன பிறவியில் செய்த குற்றத்திற்கு இந்த பிறவியில் துன்பம் அனுபவிப்பது எந்த வகையில் ஞாயம் என்கிற கேள்விக்கு சரியான விடையும் இல்லை. ஆக மொத்தத்தில் மறு பிறவி என்கிற இந்து மத கோட்பாடே இங்கே ஆட்டம் காணுகிறது. சிந்தியுங்கள் நண்பரே.....!!! சிந்தியுங்கள்.....!!!

    ReplyDelete
  27. @shankar,

    ///***அல்லது இப்பிறவியில் அவன் இவ்வளவு சந்தோசமாய் இருப்பதற்கு காரணம் முற்பிறவியில் அவன் செய்த பல தர்ம காரியங்களே என்று அவனுக்கு தெரிந்தால் என்னவாகும் ...அட..ட.! நான் இவ்வளவு நல்லவனா என்று தனக்கு தானே பெருமை பேசிக்கொண்டு திரிவான் . கண்ணில் காண்பவரையெல்லாம் பார்த்து நான் எவ்ளவு நல்லவன் தெரியுமா என்று ஆணவத்தோடு திரிவான்.இதற்குதான் இறைவன் பூர்வ ஜென்ம ஞாபகத்தை நமக்கு தருவதில்லை ....!***///

    முற்பிறவியில் செய்த நன்மைகள் தெரிந்தால் மட்டும் தான் பெருமை பட்டுக்கொள்வார்களா ??? இன்று உலகில் பெரும்பாலும் பாவம் செய்பவர்கள் பணத்தோடும் சொத்து சுகங்களோடும் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பவர்கள்தான் அதிகம் நண்பரே....!!! போன பிறவியில் செய்த நன்மைகள் நினைவுக்கு வரக்கூடாது என்றால் அவன் செய்த நன்மைகளின் பலன் தான் என்ன ??? இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். சிந்தியுங்கள் நண்பரே....!!! மீண்டும் சொல்கிறேன் மறுபிறவி என்னும் கோட்பாடு அறிவுக்கு ஏற்ற கோட்பாடு அல்ல.

    ReplyDelete
  28. @shankar,

    ///***ஒருவன் செய்யும் செயலுக்கான நல்லதோ கெட்டதோ அதை அனுபவிப்பது ஆன்மாத்தான் என்கிறது இந்து மதம் ...அதை ஒரு உடம்பின் மூலம் அனுபவிக்கிறது ...உடம்பில்லாமல் அந்த ஆத்மா எதையும் அனுபவிக்க முடியாது .***///

    இந்த பின்னூட்டத்தை படித்ததும் உஜிலா தளத்தில் நீங்கள் பின்னூட்டமிட்ட கீதையின் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது. அதாவது கிருஷ்ணபரமாத்மா சொல்கிறார் ஆன்மாவை தண்ணீரால் கழுவவும் முடியாது கத்தியால் கிழிக்கவும் முடியாது என்று.

    சிந்திக்கும் ஆற்றலுடையவர்களுக்கு இந்த ஒரே ஒரு வசனம் போதும் கீதை என்பது இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு. ஏனென்றால் கடவுளால் முடியாதது என்று எதுவுமே இல்லை. ஆன்மாவை படைக்க முடிந்த கடவுளுக்கு அதை தண்ணீரால் கழுவவும் கத்தியால் கிழிக்கவும் முடியாதா என்ன ??? எப்போது கிருஷ்ணபரமாத்மாவே தன் வாயால் ஒன்றை செய்ய முடியாது என்று கூரிவிட்டாரோ அப்போதே அவர் கடவுளுக்கான தகுதியை இழந்துவிடுகிறார். ஏனென்றால் கடவுளின் அகராதியில் முடியாது என்கிற சொல்லே கிடையாது. முடியாது என்கிற வார்த்தை ஒருவனின் இயலாமையை குறிக்கும் வார்த்தை. இயலாமை என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு கடவுளுக்கு இல்லை. நீங்கள் கடவுள் என்று நம்பும் கிருஷ்ணபரமாத்மாவே தன்னால் ஆன்மாவை ஒன்றும் செய்ய இயலாது என்னும்போது அவர் எப்படி கடவுளின் அந்தஸ்தை பெறுவார் ??? இதற்கு பதில் கூறுங்கள் எனக்கு.

    ReplyDelete
  29. \\\\ மனிதன் உலகில் எப்படி செயல்படுவான் என்பது தெரியாமல் போகுமா என்ன ? கண்டிப்பாக தெரியும்.தெரிந்துகொண்டே தான் நம்மை சோதிக்கிறான்\\\\

    நண்பரே ,

    அங்கே உங்கள் அல்லா சொதிப்பதொடு நிறைக்க வில்லையே அவன் தோற்றுவிட்டான் என்று நிரந்தர நரகில் போடுகிறாரே அது ஏன் ? சரி சோதித்து அவன் திருந்த வில்லை என்றால் தன் சக்தியை கொண்டாவது அவனை திருத்த முயற்சிக்க வேண்டியது தானே அப்படியும் செய்வதில்லையே .உங்கள் அல்லா தன் சக்தியை கொண்டு அவன் சித்ரவதை செய்ய பல முறை சதையும் தோலும் தருகிறாரே அவனை திருத்த தன் சக்தியை உபயோக படுத்துவதில்லையே அது ஏன் ? உடனே அதற்குதான் நபியை அனுப்புகிறார் என்று கூறாதிர்கள்...நபி கூறி திருந்தாவிட்டால் என்ன செய்ய வேண்டும் உங்கள் அல்லா ஏதாவது தன் சக்தியை கொண்டு அவன் மனதை மாற்ற வேண்டும் அப்படியும் செய்வதில்லை ...மாறாக அவனை நரகில் சித்ரவதை செய்ய மட்டும் தன் ஒட்டுமொத்த சக்தியை உபயோக படுத்துகிறார் .

    ஒரு மனிதன் திருந்த வில்லை என்று நரகில் போட்டால் அங்கே தோற்றது மனிதன் அல்ல உங்கள் அல்லா தான் தோற்றது என்று அர்த்தம் ..அதாவது ஒரு சாதாரண மனிதனை கூட உங்கள் அல்லாவால் திருத்த முடியவில்லை என்று அர்த்தம்...ஒருவனை படைத்தால் மட்டும் போதாது , அவனை சோதித்தால் மாட்டும் போதாது அவன் எப்படி பட்டவனாய் இருந்தாலும் திருத்தி மீண்டும் தன்னில் சேர்த்து கொள்ள வேண்டும் . அவன் தான் இறைவன் .அதைவிடுத்து திருந்தவில்லை என்று நரகில் போட்டால் அது இறைவனின் இயலாமையை தான் குறிக்கும். இறைவனால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு ஒருவனை திருத்த முடியவில்லை என்றால் அவரை எப்படி இறைவன் என்று கூறமுடியும் ? சற்று சிந்தியுங்கள் நண்பரே ...!

    \\ஒரு வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களும் இருப்பார்கள் படிக்காத மாணவர்களும் இருப்பார்கள். எந்த மாணவன் நன்றாக படிப்பான் எந்த மாணவன் படிக்கமாட்டான் என்பது ஆசிரியருக்கு நன்றாகவே தெரியும். எனினும் தேர்வு என்று வரும்போது எல்லோருக்குமே தான் தேர்வு வைப்பார். தேர்வு முடிந்ததும் நன்றாக படிக்காத மாணவனை பெயில் ஆக்கிவிடுவார்.\\\\

    அப்படி பெயிலாகிய மாணவனை என்ன செய்வார் அந்த ஆசிரியர் உயிரோடு கொளுத்தி விடுவாரா ? இல்லை தானே மறுபடியும் பாஸ் ஆவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பார் தானே ...ஏன் என்றால் தேர்வு என்பது பல முறை வரும் அதில் எதவாது ஒரு தேர்வில் நன்றாக படித்து பாசகிவிட முடியும் . இதைதான் ஒரு நல்ல ஆசிரியர் செய்வார் அதுத்தான் இன்றைய நடைமுரையுளும் உள்ளது இதைத்தான் தான் இந்துமதம் மறுபிறவி என்கிறது ...ஆனால் உங்கள் இஸ்லாம் கொள்கையை வைத்து பார்த்தால் நான் முதலில் கூறியபடி அந்த மாணவனை ஆசிரியர் உயிரோடு கொளுத்தி விடுவார் என்கிறது. உயிரோடு கொளுத்திவிட்டால் கூட பரவாஇல்லை அவனை சாகவும் விடாமல் மீண்டும் சித்ரவதை செய்வார் என்கிறது இஸ்லாம் . அப்படி பட்ட ஆசிரியரை மனித இனத்தில் கூட சேர்த்துக்கொள்ள முடியாது ஏன் மிருக இனத்தில் கூட சேர்த்து கொள்ள முடியாது ஆனால் இஸ்லாம் அவனுக்கு இறைவன் பட்டம் கொடுக்கிறது . என்ன மடத்தனம் இது....சிந்தியுங்கள் நண்பரே ....!

    ReplyDelete
  30. \\\சிந்திக்கும் ஆற்றலுடையவர்களுக்கு இந்த ஒரே ஒரு வசனம் போதும் கீதை என்பது இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு. ஏனென்றால் கடவுளால் முடியாதது என்று எதுவுமே இல்லை. ஆன்மாவை படைக்க முடிந்த கடவுளுக்கு அதை தண்ணீரால் கழுவவும் கத்தியால் கிழிக்கவும் முடியாதா என்ன ???\\\\

    நண்பரே ,

    இதே கேள்வியை தான் நான் உங்களிடம் கேட்கிறேன் ஒருவனை படைக்க தெறித்த இறைவனுக்கு அவனை திருத்த முடியாதா என்ன ? பிறகு ஏன் அவன் திருந்த வில்லை என்று நரகில் போடவேண்டும் ? இறைவனால் அவனை திருத்த முடியாதா என்ன ? அப்ப உங்கள் குரானும் ஒரு கட்டு கதைத்தானே ? சிந்திக்கும் ஆற்றலுடையவர்களுக்கு இந்த ஒரே கூற்று போதும் குரான் என்பது ஒரு கட்டுக்கதை என்று நானும் கூறமுடியும் நண்பரே ...!

    \\\கடவுள் என்று நம்பும் கிருஷ்ணபரமாத்மாவே தன்னால் ஆன்மாவை ஒன்றும் செய்ய இயலாது என்னும்போது அவர் எப்படி கடவுளின் அந்தஸ்தை பெறுவார் ??? இதற்கு பதில் கூறுங்கள் எனக்கு.\\\\

    கிருஷ்ணபரமாத்மா யாரால் ஆத்மாவை ஒன்றும் செய்ய முடியாது என்று யாரிடம் கூறுகிறார் என்று பகவத் கீதையை படித்து விட்டு பிறகு என்னிடம் கேளுங்கள் அதற்க்கு நான் விளக்கம் தருகிறேன் .

    ReplyDelete
  31. \\\ஆனால் அந்த ஞானி (???) தேளை காப்பாற்றும் நோக்கத்துடன் அதை கரையில் எடுத்து போட்டால் அந்தக்கரையோரமாக நடந்து வரும் வேறு ஒரு மனிதன் தற்செயலாக அந்த தேளை மிதித்தால் கூட அது கொட்டிவிடும். இந்த அறிவு கூட உங்கள் கதையில் வரும் அந்த ஞானிக்கு (?) இல்லை என்பதை தான் நான் கூறினேன்\\\\\

    நண்பரே ,

    இதே கேள்வியை தான் நான் ஏற்கனவே உங்களிடம் கேட்டேன் அதாவது தவறு செய்வான் என்று தெரிந்தே உங்கள் அல்லா ஏன் ஒருவனை படைக்க
    வேண்டும் என்று ? சரி விசயத்துக்கு வருவோம் ..!
    தேள் யாரயும் வழிய சென்று கொட்டாது என்று தெரிந்து காப்பாற்றிய அந்த ஞானிக்கு அறிவில்லை என்று கூறுகிறீர்களே...பல அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்லாமிய தீவிரவாதியை உருவாக்கிய உங்கள் அல்லாவை என்னவென்று அழைப்பது ? அவனை படைக்கும் முன்பே தெரியாதா இவன் பலபேரை கொடூரமாய் கொல்வான் என்று பிறகு ஏன் அவனை படைத்தார் ?
    ஒரு தேளை காப்பாற்றிவிட்ட ஞானியை முட்டாள் என்று கூறும் நீங்கள் பல தீவிரவாதியை தெரிந்தே படைத்த அல்லாவை மட்டும் ஏன் ஏக இறைவன் என்று கூறுகிறீர்கள் ?

    ReplyDelete
  32. நண்பரே ,

    தேளை காப்பாற்றிய அந்த ஞானி முட்டாள் என்றால் தேளை படைத்த இறைவனை முட்டாளுக்கும் முட்டாள் என்பீர்களா ?

    ReplyDelete
  33. \\\\
    நீங்கள் எதற்காக அந்த கதையை சொன்னீர்கள் என்று எனக்கு தெரியும் நண்பரே...!!! எனினும் அந்தக்கதையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டுவது எனது கடமை. இல்லையென்றால் பிற்காலத்தில் அந்த கற்பனைக்கதையை கடவுளின் பெயரால் எல்லா இந்துக்களுக்கும் சொல்லி சொல்லி அதையே வேதம் போல ஆக்கிவிடுவீர்கள். கடவுளுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டதால் பிற்காலத்தில் வரும் உங்கள் சந்ததியினர் அதை சற்றும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காமல் கேள்வி கேட்க பயந்து அதை ஏற்றுக்கொள்வார்கள். இதற்காக தான் நான் சொன்னேன் இப்படி கற்பனை கதைகள் சொல்லி சொல்லி தான் இந்து மதமே வந்தது என்று. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இஸ்லாமும் அதை தான் சொல்கிறது. அதனால் தான் நாங்கள் கற்பனைக்கதைகள் சொல்வதில்லை. இஸ்லாத்தில் உள்ளவற்றை மட்டுமே எடுத்து கூறுகிறோம்.\\\\

    நண்பரே ,
    இந்துக்கள் ஒரு கதையோ அல்லது நிஜமோ அது உண்மையோ பொய்யா என்பதை விட அந்த கதையின் கருத்து என்ன என்பதைத்தான் ஆராய்கிறார்கள் ..அது நல்ல கருத்து என்றால் ஏற்று கொள்கிறார்கள் தேவை இல்லை என்றால் அதை ஏற்று கொலாமலும் இருக்கிறார்கள்.
    அப்படி பல கதைகளை பின்பற்றிவந்த நாங்கள் இன்று எந்த நாட்டையும் அச்சுறுத்தவில்லை தீவிரவாதம் என்ற பெயரில்...இந்துமதம் தனிமனிதன் சிந்தனைக்கோ அல்லது கற்பனைக்கோ ஏன் பல கலைகளுக்கும் சுதந்திரம் தந்துள்ளது .
    ஆனால் இஸ்லாமோ இயல் ,இசை, நாடகம் இவை ஒன்றை கூட ஆதரிக்க வில்லை .நபி என்ன செய்தாரோ அதையே செய்யவேண்டும் ..நபி எதை சாப்பிட்டாரோ அதையே சாப்பிடவேண்டும் ..நபி எந்த ஆடை உடுத்தினாரோ அதையே உடுத்தவேண்டும் ...இப்படி உங்களுடைய பகுத்தறிவை எல்லாம் நபி என்ற ஒரு தனிமனிதரிடம் அடகுவைத்துவிட்டு எங்களை பகுத்தறிவை உபயோக படுத்துங்கள் என்று கூறுவது நகைப்புகூரியது....
    இஸ்லாம் கற்பனை கதைகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்றும் நல்லவை மட்டும் சொல்கிறது என்றால் இஸ்லாமிய தீவிரவாதம் எப்படி உருவாகிறது ?.அவர்களுடைய பகுத்தறிவு எங்கே போனது ?
    மதத்துக்காக தன் தாய்நாட்டையே கூட்டி கொடுப்பது யார் சில இஸ்லாமியர்கள் தானே ? இந்துக்கள் இல்லையே ..!
    ஒரே ஒரு video காட்டி மூளை சலவை செய்து தீவிரவாதியாய் மாறி சொந்த தாய்நாட்டையே கொள்ள துணிபவர்கள் யார் ? சில இஸ்லாமியர்கள் தானே ? இந்துக்கள் இல்லையே ..!
    மதம் மாறினாலும் அவனும் மனிதனே என்று பார்பவர்கள் யார் இந்துக்கள் தானே ? இஸ்லாமியர்கள் இல்லையே ..!

    நண்பரே கற்பனை( ? ) கதையை பின்பற்றி வரும் இந்துக்கள் எல்லோரும் கொடூரமானவர்கள் இல்லை , உண்மை ( ? ) கதையை பின்பற்றி வருகிறோம் என்றும் கூறும் இஸ்லாமியர்கள் அனைவரும் மகான்கள் இல்லை .

    \\\இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இஸ்லாமும் அதை தான் சொல்கிறது.\\\\

    முதலில் உங்கள் மதத்தில் உருவாகும் தீவரவாதத்தை ஒழியுங்கள் பிறகு மற்ற மதங்களில் உள்ள கற்பனை கதைகளை ஒழிக்கலாம்.

    ReplyDelete
  34. \\\எப்போது கிருஷ்ணபரமாத்மாவே தன் வாயால் ஒன்றை செய்ய முடியாது என்று கூரிவிட்டாரோ அப்போதே அவர் கடவுளுக்கான தகுதியை இழந்துவிடுகிறார். ஏனென்றால் கடவுளின் அகராதியில் முடியாது என்கிற சொல்லே கிடையாது. முடியாது என்கிற வார்த்தை ஒருவனின் இயலாமையை குறிக்கும் வார்த்தை. இயலாமை என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு கடவுளுக்கு இல்லை.\\\

    நண்பரே ,

    திருந்தவே இல்லை என்று ஒருவனை நரகில் போட்டால் அதுவும் அல்லாவின் இயலாமையைத்தான் குறிக்கும் ...! ஏன் என்றால் தான் படைத்த மனிதனையே தன்னால் திருத்த முடியவில்லை பிறகு அல்லாவை மட்டும் ஏன் இறைவன் என்று கூறுகிறீர்களோ ?

    இதற்க்கு என்ன பதில் தருவீர்கள் " முடியும் ஆனா முடியாது " என்பீர்களா ?

    ReplyDelete
  35. \\\ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எல்லோருக்கும் நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்துவிடும். அந்த பக்குவத்தையே இறைவன் தான் கொடுக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள். எதற்காக கொடுக்கிறான் ??? எல்லா மனிதர்களும் நல்லவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே அந்த பக்குவத்தை எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கிறான் ??? அவ்வாறு இறைவன் கொடுத்த அந்த பக்குவத்தை அடைந்தும் ஒருவன் தீமை செய்தால் அது எப்படி இறைவனின் குற்றமாகும் ???\\\\

    நண்பரே ,
    நான் சொன்னது எனக்கே ரிவிட்டா ...? இதே பதிலை தான் நான் உஜிலாதேவி வலைத்தளத்தில் பகவத் கீதையின் வசனத்தை கொண்டு உங்களுக்கு விளக்கினேன் ...அதற்க்கு நீங்கள் என்ன கூறினீர்கள் ...இல்லை இல்லை அவ்வாறு தேர்ந்தெடுக்கும் ( சுதந்திரம் ) தகுதி எங்களுக்கு தேவை இல்லை ...நண்பரே நான் சுதந்திரம் என்று கூறியது இதைத்தான் அதாவது நீங்கள் கூறிய " நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து தேர்ந்தெடுக்கும் பக்குவம் "

    நான் இட்ட அந்த பின்னூட்டம் இதோ ..http://ujiladevi.blogspot.com/2011/05/blog-post_02.html?commentPage=2

    \\\கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எதை செய்தால் நன்மை எதை செய்தால் தீமை என்று அழகாக விவரித்து கூறிவட்டு இனி நீ எதை செய்ய வேண்டும் என்று நீயே முடிவேடுத்துகோல் என்று அர்ஜுனனுக்கு சுதந்திரம் கொடுக்கிறார் ...நண்பரே சிந்தித்து செயல் படும் திறமையை இறைவன் மனிதனுக்கு மட்டும் கொடுத்திருக்கிறார் தான் கூறுவதை அப்படியே செய்ய சொன்னால் மனிதனுக்கு அந்த அறிவை இறைவன் கொடுத்ததன் பயன் தான் என்ன ? உலகில் மனிதன் நல்லவற்றை மட்டும் தான் செய்யவேண்டும் என்பது இறைவனின் ஆசையே ...அனால் எதற்காக கெட்டவையும் படைத்தான் மனிதன் நல்லது எது கேட்டது எது என்று சிந்த்தித்து செயல் படைதானே ...!
    அவ்வாறு சிந்தித்து செயல்படும் சுதந்தரத்தை தான் இறைவன் நமக்கு தந்துருகிறான்...

    இறைவன் ஒருகையில் விசத்தையும் ஒருகையில் அமிர்தத்தையும் தந்து இதை குடித்தால் உனக்கு நன்மை இதை குடித்தால் உனக்கு தீமை என்று தான் குறுகிரானே தவிர நீ இதைதான் குடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்துவதில்லை ...அப்படி கட்டாய படுத்தினால் அங்கே இறைவன் விசத்தை ஏன் கையில் வைக்க வேண்டும் அல்லது மனிதனுக்கு ஏன் சிந்தித்து செயல்படும் ஆற்றலை தரவேண்டும் .அவன் விசத்தை பருகினால் அது கெட்டது என்று தெரிந்தும் சிலர் விஷத்தையே பருகுகிறார்கள் ...இதனால் நஷ்ட்டம் யாருக்கு ...நமக்குதானே ..! இறைவன் எது நல்லது எது கெட்டது என்று கூறுவதோடு நிற்கின்றார் மனிதனுக்கு அதை சிந்த்தித்து செயல் படும் சுதந்தரத்தை தருகின்றார் \\\

    கீதையின் வசனம் இதோ ..

    ///"இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்..."///

    இதில் எது சரி எது தவறு என்று கூறிய பிறகும் அர்ஜுனன் தவறு செய்தால் அது எப்படி இறைவனின் குற்றமாகும் ? ..இப்ப இந்த வசனத்தை கட்டு கதை என்று கூற முடியுமா ? அப்படி நீங்கள் கூறினால் நீங்கள் இட்ட இந்த பின்னூடமும் தவறாகும் ..

    இதோ நீங்கள் இட்ட பின்னூட்டம்

    \\\ " எல்லோருக்கும் நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து தேர்ந்தெடுக்கும் பக்குவம் வந்துவிடும். அந்த பக்குவத்தையே இறைவன் தான் கொடுக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள். எதற்காக கொடுக்கிறான் ??? எல்லா மனிதர்களும் நல்லவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே அந்த பக்குவத்தை எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கிறான் ??? அவ்வாறு இறைவன் கொடுத்த அந்த பக்குவத்தை அடைந்தும் ஒருவன் தீமை செய்தால் அது எப்படி இறைவனின் குற்றமாகும் " \\\\

    ReplyDelete
  36. @shankar,

    ///***நீங்கள் கூறுவது சரித்தான் சுயநினைவில்லாத ஒருவனும் பிணமும் ஒன்றுதான் எதற்காக? இரண்டுக்குமே எவ்வித உணர்ச்சியும் இருக்காது ...ஒரு பிணத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதுக்கு ஒன்னும் தெரியாது ..எதனால்..? அங்கே அதை உணரக்கூடிய ஆத்மா இல்லை.... அந்த உடம்பில் ஆத்மா இல்லை என்றால் என்ன தண்டனை கொடுத்தாலும் பலன் இல்லை ..! இதில் இருந்து என்ன தெரிகிறது தண்டனையை அனுபவிப்பது ஒரு உடம்பின் மூலமாக ஆத்மா தான் என்று.***///

    நான் மட்டும் என்ன இல்லை என்றா சொன்னேன் ??? உடம்புடன் கூடிய ஆத்மாவிற்கு தான் இறைவன் மறுமை நாளில் தண்டனை வழங்குவான்.

    ReplyDelete
  37. @shankar,

    ///***அங்கே உங்கள் அல்லா சொதிப்பதொடு நிறைக்க வில்லையே அவன் தோற்றுவிட்டான் என்று நிரந்தர நரகில் போடுகிறாரே அது ஏன் ?***///

    நண்பரே....!!! நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாத்தில் எல்லா தீய மனிதர்களுக்கும் நிரந்தர நரகம் என்று சொல்லப்படவே இல்லை. நிரந்தர நரகம் என்பது இறைவனுக்கு இணைவைத்தவர்களுக்கும், வட்டி வாங்குபவர்களுக்கும் மட்டும் தான். மற்ற குற்றங்களுக்கு சில காலம் நரகில் தண்டனையை அனுபவித்துவிட்டு அவர்களும் சொர்க்கத்திர்க்கே செல்வார்கள். இந்த இரண்டு குற்றங்களும் இஸ்லாத்தில் வண்மையாக கண்டிக்கப்பட்டவை.

    ReplyDelete
  38. நண்பரே இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன். தற்கொலை செய்துகொள்பவர்களுக்கும் நிரந்தர நரகம் தான். ஆக இறைவனுக்கு இணைவைத்தல், வட்டி, தற்கொலை. இந்த மூன்று குற்றங்களுக்கு மட்டுமே நிரந்தர நரகம் என்று இஸ்லாம் சொல்கிறது.

    ReplyDelete
  39. @shankar,

    ///*** சரி சோதித்து அவன் திருந்த வில்லை என்றால் தன் சக்தியை கொண்டாவது அவனை திருத்த முயற்சிக்க வேண்டியது தானே அப்படியும் செய்வதில்லையே .உங்கள் அல்லா தன் சக்தியை கொண்டு அவன் சித்ரவதை செய்ய பல முறை சதையும் தோலும் தருகிறாரே அவனை திருத்த தன் சக்தியை உபயோக படுத்துவதில்லையே அது ஏன் ? உடனே அதற்குதான் நபியை அனுப்புகிறார் என்று கூறாதிர்கள்...நபி கூறி திருந்தாவிட்டால் என்ன செய்ய வேண்டும் உங்கள் அல்லா ஏதாவது தன் சக்தியை கொண்டு அவன் மனதை மாற்ற வேண்டும் அப்படியும் செய்வதில்லை ...மாறாக அவனை நரகில் சித்ரவதை செய்ய மட்டும் தன் ஒட்டுமொத்த சக்தியை உபயோக படுத்துகிறார் .***///

    தவறு செய்யும் மனிதனை திருத்துவது என்பது இறைவனுக்கு பெரிய விஷயம் இல்லை. அவன் சக்தியை கொண்டு திருத்த நினைத்தால் செய்துவிடுவான். ஆனால் செய்ய மாட்டான். ஏன் ?? ஏனென்றால் இறைவன் நமக்கு எது சரி எது தவறு என்பதை உணரும் அறிவைக்கொடுத்துள்ளான். எல்லா மனிதர்களையும் இறைவன் தன் சக்தியைக்கொண்டு திருத்தினால் அந்த பகுத்தறிவை இறைவன் நமக்கு கொடுத்ததன் பயன் தான் என்ன ???? இது தான் என் கேள்வி. இதற்கு பதிலளியுங்கள்.

    ReplyDelete
  40. @shankar,

    ///***ஒரு மனிதன் திருந்த வில்லை என்று நரகில் போட்டால் அங்கே தோற்றது மனிதன் அல்ல உங்கள் அல்லா தான் தோற்றது என்று அர்த்தம் ..அதாவது ஒரு சாதாரண மனிதனை கூட உங்கள் அல்லாவால் திருத்த முடியவில்லை என்று அர்த்தம்...ஒருவனை படைத்தால் மட்டும் போதாது , அவனை சோதித்தால் மாட்டும் போதாது அவன் எப்படி பட்டவனாய் இருந்தாலும் திருத்தி மீண்டும் தன்னில் சேர்த்து கொள்ள வேண்டும் . அவன் தான் இறைவன் .அதைவிடுத்து திருந்தவில்லை என்று நரகில் போட்டால் அது இறைவனின் இயலாமையை தான் குறிக்கும். இறைவனால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு ஒருவனை திருத்த முடியவில்லை என்றால் அவரை எப்படி இறைவன் என்று கூறமுடியும் ? சற்று சிந்தியுங்கள் நண்பரே***///

    நண்பரே...!!!
    இங்கே சிந்திக்க வேண்டியது நானல்ல நீங்கள் தான். நீங்கள் சொல்கிறீர்கள் கெட்டவர்களை எல்லாம் அல்லாஹ் திருத்தவேண்டியதுதானே ? என்று. ஆனால் நானென்ன சொல்கிறேன் தெரியுமா இப்படி ஒருவனை பகுத்தறிவோடு படைத்துவிட்டு அவன் தவறு செய்யாமல் திருத்துவதைவிட அவனை படைக்கும்போதே நல்லவனாகப்படைத்துவிடலாம். (இது தான் நீங்கள் முன்னர் கேட்ட கேள்வியும்) அதாவது நீங்கள் சொல்வது தலையை சுற்றி மூக்கை தொடுவதற்கு சமம். நான் சொல்வது நேரடியாக மூக்கை தொடுவதற்கு சமம். சரி படைக்கும் போதே ஏன் இறைவன் எல்லோரையும்நல்லவர்களாக படைத்திருக்கக்கூடாது ??? இந்த கேள்விக்கும் மேலே நான் பதில் சொல்லிவிட்டேன். வேண்டுமென்றால் மீண்டுமொருமுறை சொல்கிறேன். அப்படி படைக்கும்போதே எல்லோரையும் நல்லவர்களாகவே படைத்திருந்தால் மனிதனுக்கு பகுத்தறிவு என்கிற ஒன்று அவசியமில்லை. மனிதனும் ஆடுமாடுகளைப்போன்ற ஒரு சாதாரண படைப்பாகவே இருந்திருப்பான். அவைகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசமே இந்த பகுத்தறிவு தான். இப்போது புரிகிறதா ??? இல்லை இன்னும் விளக்கம் வேண்டுமென்றாலும் கேளுங்கள் தருகிறேன்.

    ReplyDelete
  41. @shankar,

    ///***அப்படி பெயிலாகிய மாணவனை என்ன செய்வார் அந்த ஆசிரியர் உயிரோடு கொளுத்தி விடுவாரா ? இல்லை தானே மறுபடியும் பாஸ் ஆவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பார் தானே ...ஏன் என்றால் தேர்வு என்பது பல முறை வரும் அதில் எதவாது ஒரு தேர்வில் நன்றாக படித்து பாசகிவிட முடியும் . இதைதான் ஒரு நல்ல ஆசிரியர் செய்வார் அதுத்தான் இன்றைய நடைமுரையுளும் உள்ளது இதைத்தான் தான் இந்துமதம் மறுபிறவி என்கிறது ...ஆனால் உங்கள் இஸ்லாம் கொள்கையை வைத்து பார்த்தால் நான் முதலில் கூறியபடி அந்த மாணவனை ஆசிரியர் உயிரோடு கொளுத்தி விடுவார் என்கிறது. உயிரோடு கொளுத்திவிட்டால் கூட பரவாஇல்லை அவனை சாகவும் விடாமல் மீண்டும் சித்ரவதை செய்வார் என்கிறது இஸ்லாம் . அப்படி பட்ட ஆசிரியரை மனித இனத்தில் கூட சேர்த்துக்கொள்ள முடியாது ஏன் மிருக இனத்தில் கூட சேர்த்து கொள்ள முடியாது ஆனால் இஸ்லாம் அவனுக்கு இறைவன் பட்டம் கொடுக்கிறது . என்ன மடத்தனம் இது....சிந்தியுங்கள் நண்பரே ....!***///

    நீங்கள் இப்படிக்கேட்பீர்கள் என்று எனக்கு முன்னரே தெரியும். அதனால் தான் அந்த உதாரணத்திற்கு பிறகு நான் ஒரு வரியை சேர்த்து எழுதியிருந்தேன். அதாவது அந்த உதாரணம் இறைவன் தெரிந்தே சோதிக்கிறான் என்பதற்காக மட்டும் தான் என்று.

    சரி உங்களின் கேள்விக்கு வருகிறேன். அந்த ஆசிரியர் படிக்காத மாணவன் பாஸ் ஆவதற்கு அதிகப்படியாக எத்தனை சந்தர்ப்பம் குடுப்பார் ?? இன்றைக்கு கல்லூரித்தேர்வை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அதிகப்படியாக ஒரு பெயில் ஆன மாணவன் மூன்று வருடங்களுக்கு திரும்பத்திரும்ப எழுதுவதற்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அதற்குப்பின்னர் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடும். அதன் பின்னரும் அவன் பெயில் என்றால் பெயில் தான். இதுவே அவனுக்கு ஒரு மிகப்பெரிய தண்டனைதான். நீங்கள் சொல்லும் மறுபிறவியை போல எல்லா மாணவர்களும் பாஸ் ஆகும் வரை மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பதில்லை. ஆகவே மறுபிறவிக்கு நீங்கள் எடுத்துவைக்கும் இந்த உதாரணமும் ஆட்டம் கண்டுவிட்டது.

    ReplyDelete
  42. @shankra,

    ///***ஆனால் உங்கள் இஸ்லாம் கொள்கையை வைத்து பார்த்தால் நான் முதலில் கூறியபடி அந்த மாணவனை ஆசிரியர் உயிரோடு கொளுத்தி விடுவார் என்கிறது. உயிரோடு கொளுத்திவிட்டால் கூட பரவாஇல்லை அவனை சாகவும் விடாமல் மீண்டும் சித்ரவதை செய்வார் என்கிறது இஸ்லாம் . அப்படி பட்ட ஆசிரியரை மனித இனத்தில் கூட சேர்த்துக்கொள்ள முடியாது ஏன் மிருக இனத்தில் கூட சேர்த்து கொள்ள முடியாது ஆனால் இஸ்லாம் அவனுக்கு இறைவன் பட்டம் கொடுக்கிறது . என்ன மடத்தனம் இது....சிந்தியுங்கள் நண்பரே ....!***///

    தவறு செய்பவனை தண்டிப்பவன் தான் நீதியாளன். தண்டிக்காமல் அவனுக்கும் வாய்ப்புகள் கொடுத்து தன்னோடு இணைத்துக்கொள்பவன் அநீதியாளன். அதாவது பாவிகளுக்கு உங்கள் கடவுள் துணை போகிறார். அநியாயம் செய்யத்தூண்டுகிறார். நீ இந்தப்பிறவியில் பாவம் செய்தால் அடுத்தப்பிறவியில் உன் பாவங்களை கழுவி விடுவேன் என்று சொன்னால் பாவிகளின் உடந்தை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது ??? அப்படிப்பட்டவரை கடவுள் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆகவே நீங்கள் செய்வது தான் மடத்தனம் என்பது இங்கே உறுதியாகிறது.

    ReplyDelete
  43. @shankar,

    ///*** அந்த மாணவனை ஆசிரியர் உயிரோடு கொளுத்தி விடுவார் என்கிறது. உயிரோடு கொளுத்திவிட்டால் கூட பரவாஇல்லை அவனை சாகவும் விடாமல் மீண்டும் சித்ரவதை செய்வார் என்கிறது இஸ்லாம் .***///

    உதாரணங்களை திரித்துக்கூறாதீர்கள் நண்பரே....!!! உதாரணங்கள் என்பது நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வை எடுத்துச்சொல்லி அதே போல தான் நான் சொல்வது என்று ஒரு புரிதலுக்காக எடுத்துக்காட்டுவது. ஆனால் நீங்களோ நடைமுறையில் இல்லாத ஒன்றை உதாரணம் என்கிற பெயரில் உங்கள் இஷ்டத்திற்கு திரித்துக்கூறுகிரீர்கள்.

    ReplyDelete
  44. @shankar,

    ///***இதே கேள்வியை தான் நான் உங்களிடம் கேட்கிறேன் ஒருவனை படைக்க தெறித்த இறைவனுக்கு அவனை திருத்த முடியாதா என்ன ? பிறகு ஏன் அவன் திருந்த வில்லை என்று நரகில் போடவேண்டும் ?***///

    இந்தக்கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்துவிட்டேன். இனி நீங்கள் தான் நான் கூறிய பதில் சரியா தவறா என்பதை உங்கள் பகுத்தறிவைக்கொண்டு சிந்திக்கவேண்டும்.

    ///***இறைவனால் அவனை திருத்த முடியாதா என்ன ? அப்ப உங்கள் குரானும் ஒரு கட்டு கதைத்தானே ? சிந்திக்கும் ஆற்றலுடையவர்களுக்கு இந்த ஒரே கூற்று போதும் குரான் என்பது ஒரு கட்டுக்கதை என்று நானும் கூறமுடியும் நண்பரே ...!***///

    அப்படியா....??? சரி, குர்ஆனில் அல்லாஹ் தன்னால் செய்ய முடியாது என்று சொன்ன ஒரே ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள். இப்போதே உங்கள் தளத்திலேயே குரான் என்பது இறை வேதம் அல்ல என்று ஒப்புதல் பின்னூட்டமிடுகிறேன். பின்னூட்டம் மட்டுமல்ல உண்மையாகவே அது இறை வேதம் அல்ல என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  45. @shankar,

    ///***கிருஷ்ணபரமாத்மா யாரால் ஆத்மாவை ஒன்றும் செய்ய முடியாது என்று யாரிடம் கூறுகிறார் என்று பகவத் கீதையை படித்து விட்டு பிறகு என்னிடம் கேளுங்கள் அதற்க்கு நான் விளக்கம் தருகிறேன் .***///

    நண்பரே...!!! உஜிலா தளத்தில் மறுபிறவி பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது இந்த வசனத்தை நீங்கள் தான் முன்வைத்தீர்கள். எதற்காக முன்வைத்தீர்கள் என்று நினைவிருக்கிறதா ?? அதாவது இந்து மதத்தில் ஏன் சொர்க்கமோ நரகமோ கிடையாது என்பதை விளக்குவதற்காக நீங்கள் இதை குறிப்பிட்டீர்கள். அதாவது உடலை தண்டிப்பதில் பயன் இல்லை. ஆன்மாவை தண்டிக்கவும் முடியாது அதனால் தான் மறுபிறவி என்பதை விளக்குவதற்காக நீங்கள் சொன்னீர்கள். இதை வைத்துத்தான் நான் சொல்கிறேன் கடவுளால் ஆன்மாவை தண்டிக்க முடியாதென்றால் அவர் கடவுளுக்கான சக்தியை இழந்துவிட்டார் என்று. இப்போது நான் கூறிய இந்தக்கருத்து தவறென்றால் நீங்கள் உஜிலாவில் எங்களுக்கு கொடுத்த விளக்கமும் தவறு. அதனால் அந்தக்கேல்விக்கும் சேர்த்து ஒரு நல்ல பதிலை தரவும்.

    ReplyDelete
  46. \\\நண்பரே...!!! உஜிலா தளத்தில் மறுபிறவி பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது இந்த வசனத்தை நீங்கள் தான் முன்வைத்தீர்கள். எதற்காக முன்வைத்தீர்கள் என்று நினைவிருக்கிறதா ?? அதாவது இந்து மதத்தில் ஏன் சொர்க்கமோ நரகமோ கிடையாது என்பதை விளக்குவதற்காக நீங்கள் இதை குறிப்பிட்டீர்கள். அதாவது உடலை தண்டிப்பதில் பயன் இல்லை. ஆன்மாவை தண்டிக்கவும் முடியாது அதனால் தான் மறுபிறவி என்பதை விளக்குவதற்காக நீங்கள் சொன்னீர்கள். இதை வைத்துத்தான் நான் சொல்கிறேன் கடவுளால் ஆன்மாவை தண்டிக்க முடியாதென்றால் அவர் கடவுளுக்கான சக்தியை இழந்துவிட்டார் என்று. இப்போது நான் கூறிய இந்தக்கருத்து தவறென்றால் நீங்கள் உஜிலாவில் எங்களுக்கு கொடுத்த விளக்கமும் தவறு. அதனால் அந்தக்கேல்விக்கும் சேர்த்து ஒரு நல்ல பதிலை தரவும். \\\\

    நண்பரே ,

    இதற்குத்தான் நான் கூறினேன் ஆன்மாவை பற்றிய இந்து மதத்தின் விளக்கம் என்ன என்பதை முதலில் அறியுங்கள் பிறகு பகவத் கீதையில் ஏன் எதற்காக அவ்வாறு கிருஷ்ண பகவான் கூறினார் என்று ஆராயுங்கள்

    ReplyDelete
  47. அரபாத் அவர்களே ,

    உங்களிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன் அதற்க்கு முன் விவேகானந்தர் சிகாகோவில் ஒரு ஆன்மிக சொற்பொழிவில் கூறிய கதையை உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன் ...

    ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது ..அது பிறந்தது மற்றும் வளர்ந்ததெல்லாம் அந்த கிணற்றில் தான் . அதற்க்கு அந்த கிணற்றை விட்டால் எதுவும் தெரியாது ..ஆனால் அந்த கிணற்றை பற்றிய எல்லா விசயமும் அதற்க்கு அத்துபிடி ...ஒருநாள் அந்த கிணற்றில் இன்னொரு தவளை தெரியாமல் தவறி விழுந்தது அந்த தவளை கடலில் வாழ்ந்தது .
    அந்த தவளையிடம் கிணற்றில் வாழ்ந்த தவளை கேட்டது நீ யார் ? எங்கே இருந்து வருகிறாய் என்று ? அதற்க்கு கடல் தவளை கூறியது நான் கடலில் இருந்து வருகிறேன் என்று...அதை கேட்ட கிணற்று தவளை கடலா அது எப்படி இருக்கும் என்று ..அதற்க்கு கடல் தவளை கூறியது கடல் மிக நீழமாக இருக்கும் என்று ...அதை கேட்ட கிணற்று தவளை ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு தாவி குதித்து இந்த நீளம் இருக்குமா என்று ?

    இதற்க்கு கடல் தவளை நண்பா கடலை எப்படி இந்த கிணற்றோடு ஒப்பிட முடியும் என்று ...!!!

    உடனே கிணற்றுதவளை உனது கடல் இந்த ஆழம் இருக்கமா என்று அந்த கிணற்று தண்ணிரில் முங்கி கேட்டது ...!!

    எதனால் அந்த கிணற்று தவளை இப்படி கேட்கிறது ? காரணம் அதற்க்கு தெரிந்தது எல்லாம் அந்த கிணற்றை பற்றி மட்டும் எனவே அந்த தவளையின் சிந்தனை இந்த கிணற்றை விட்டு மேலும் சிந்தக்க முடியவில்லை ..!!! அந்த கிணற்று தவளயின் சந்தேகத்தை போக்க வேண்டுமானால் அந்த தவளைக்கு முதலில் கடலை காட்டியாக வேண்டும் . நான் எதற்காக இந்த கதையை கூறினேன் என்றால் ..

    இதே கிணற்று தவளையின் கேள்வி போலத்தான் இருக்கிறது உங்களுடைய இந்து மதத்தை பற்றின கேள்வியும் ..!!!

    நான் கீழே கொடுக்கும் இந்த கேள்வியை நீங்கள் உங்கள் சுய அறிவை கொண்டு ஆராயுங்கள் ..இந்து மதத்தை பற்றின அடிப்படை விசயத்தை நீங்கள் அறிந்த பிறகே மற்றவைகளை பற்றி நீங்கள் அறியமுடியும் ..! என்னாலும் விளக்க முடியும் ..! உங்களுக்கு இந்துமதத்தின் அடிப்படை விசயங்களை பற்றிய விவரம் தெரியவந்தால் தான் நாம் மேலும் அதைப்பற்றி விவாதிக்க முடியும் ..!

    இந்து மதம் எப்படி வந்தது ? அது எப்ப தோன்றியது ?

    அதன் வேதங்கள் என்ன என்ன ?

    பகவத் கீதை எதற்க்காக யாரால் யாருக்கு உபதேசிக்க பட்டது ?

    ஆன்மாவை பற்றிய இந்துமதத்தின் விளக்கங்கள் என்ன ?

    மறுஜென்மம் ஏன் ? முக்தி என்றால் என்ன ஏன் ஒருவன் முக்தி அடைய வேண்டும் ?

    உருவ வழிப்பாடு ஏன் ?

    இறைவனை அடைய பல வழிகள் உண்டு என ஏன் இந்துமதம் கூறுகிறது ?
    அனைத்து மதமும் தங்கள் மதத்தில் இணைந்தால் மட்டும் சொர்க்கம் என்று கூறுகையில் இந்து மதம் மட்டும் அனைத்து மதமும் இறைவனை அடையும் ஒரே பாதை என்று ஏன் கூறுகிறது ?

    இப்படி கூறுவதினால் நான் விவாதத்தத்தில் இருந்து பின் வாங்கிறேன் என்று மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டாம் ...இந்து மதத்தை பற்றிய அடிப்படை விசயத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தால் தான் நாம் அதை பற்றி விவாதிக்க முடியும்.! எனவே தயவு செய்து நான் கேட்ட கேள்வியை ஆராயவும் ...!

    ReplyDelete
  48. @shankar,

    ///***இதற்குத்தான் நான் கூறினேன் ஆன்மாவை பற்றிய இந்து மதத்தின் விளக்கம் என்ன என்பதை முதலில் அறியுங்கள் பிறகு பகவத் கீதையில் ஏன் எதற்காக அவ்வாறு கிருஷ்ண பகவான் கூறினார் என்று ஆராயுங்கள் ***///

    ஒரு மதத்தையோ அல்லது அதன் வேதத்தையோ விமர்சிப்பதற்கு அந்த மதத்தை பற்றி முழுவதும் தெரிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அந்த மதத்தில் இருக்கும் தவறுகளை ஓரளவுக்கு தெரிந்திருந்தாலே போதுமானது. இதற்கு தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் !!! என்பார்களே....!!! அது போல தான் அந்த மதத்தில் ஒரே ஒரு தவறு இருந்தால் கூட போதும் அது இறைவனால் அருளப்பட்டது அல்ல என்பதை நிரூபிக்க. ஏனென்றால் இறைவன் தவறு செய்யவும் மாட்டான். அவன் அனுமதித்த மார்க்கத்தில் தவறுகளே இல்லாதவாறு என்றென்றைக்கும் காப்பான். இதை நீங்கள் புரிந்துகொண்டால் தவறுகளே இல்லாத ஒரு மார்க்கம் எது என்று தேடுங்கள். உங்களின் தேடலில் உண்மை இருந்தால் நீங்கள் நிச்சயம் வெற்றியடைவீர்கள்.

    ReplyDelete
  49. @shankar,

    ///***இந்து மதம் எப்படி வந்தது ? அது எப்ப தோன்றியது ?

    அதன் வேதங்கள் என்ன என்ன ?

    பகவத் கீதை எதற்க்காக யாரால் யாருக்கு உபதேசிக்க பட்டது ?

    ஆன்மாவை பற்றிய இந்துமதத்தின் விளக்கங்கள் என்ன ?

    மறுஜென்மம் ஏன் ? முக்தி என்றால் என்ன ஏன் ஒருவன் முக்தி அடைய வேண்டும் ?

    உருவ வழிப்பாடு ஏன் ?

    இறைவனை அடைய பல வழிகள் உண்டு என ஏன் இந்துமதம் கூறுகிறது ?
    அனைத்து மதமும் தங்கள் மதத்தில் இணைந்தால் மட்டும் சொர்க்கம் என்று கூறுகையில் இந்து மதம் மட்டும் அனைத்து மதமும் இறைவனை அடையும் ஒரே பாதை என்று ஏன் கூறுகிறது ?

    இப்படி கூறுவதினால் நான் விவாதத்தத்தில் இருந்து பின் வாங்கிறேன் என்று மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டாம் ...இந்து மதத்தை பற்றிய அடிப்படை விசயத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தால் தான் நாம் அதை பற்றி விவாதிக்க முடியும்.! எனவே தயவு செய்து நான் கேட்ட கேள்வியை ஆராயவும் ...! ***///

    நண்பரே...!!!

    நான் இப்போது விவாதிப்பது எனக்கு தெரிந்த இந்து மதத்தை பற்றியவைகளை வைத்து தான். இந்து மதத்தில் நான் தெரிந்து கொள்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அனால் இவையெல்லாம் தெரிந்துகொள்....தெரிந்துகொள்....என்றால் எதற்காக நாம் விவாதிக்கிறோம் ? இவற்றையெல்லாம் நீங்கள் எனக்கு சொல்லித்தர வேண்டும். நீங்களே எனக்கு சொல்லித்தாருங்கள். அதில் எனக்கு எழும் சந்தேகங்களையும் தீர்த்து வையுங்கள். அதே போல இஸ்லாம் பற்றி நான் உங்களுக்கு தெரியாதவற்றை சொல்லி தருகிறேன். உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன். இது தான் நாம் செய்யும் அழகிய முறையிலான விவாதம்.

    ReplyDelete
  50. ///***இந்து மதம் எப்படி வந்தது ? அது எப்ப தோன்றியது ?

    அதன் வேதங்கள் என்ன என்ன ?

    பகவத் கீதை எதற்க்காக யாரால் யாருக்கு உபதேசிக்க பட்டது ?

    ஆன்மாவை பற்றிய இந்துமதத்தின் விளக்கங்கள் என்ன ?

    மறுஜென்மம் ஏன் ? முக்தி என்றால் என்ன ஏன் ஒருவன் முக்தி அடைய வேண்டும் ?

    உருவ வழிப்பாடு ஏன் ?

    இறைவனை அடைய பல வழிகள் உண்டு என ஏன் இந்துமதம் கூறுகிறது ?
    அனைத்து மதமும் தங்கள் மதத்தில் இணைந்தால் மட்டும் சொர்க்கம் என்று கூறுகையில் இந்து மதம் மட்டும் அனைத்து மதமும் இறைவனை அடையும் ஒரே பாதை என்று ஏன் கூறுகிறது ?***///

    நண்பரே....!!!

    நீங்கள் மேலே கேட்ட இந்த அனைத்து கேள்விகளுக்கும் உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  51. @shankar,

    ///***உங்களிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன் அதற்க்கு முன் விவேகானந்தர் சிகாகோவில் ஒரு ஆன்மிக சொற்பொழிவில் கூறிய கதையை உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன் ...

    ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது ..அது பிறந்தது மற்றும் வளர்ந்ததெல்லாம் அந்த கிணற்றில் தான் . அதற்க்கு அந்த கிணற்றை விட்டால் எதுவும் தெரியாது ..ஆனால் அந்த கிணற்றை பற்றிய எல்லா விசயமும் அதற்க்கு அத்துபிடி ...ஒருநாள் அந்த கிணற்றில் இன்னொரு தவளை தெரியாமல் தவறி விழுந்தது அந்த தவளை கடலில் வாழ்ந்தது .
    அந்த தவளையிடம் கிணற்றில் வாழ்ந்த தவளை கேட்டது நீ யார் ? எங்கே இருந்து வருகிறாய் என்று ? அதற்க்கு கடல் தவளை கூறியது நான் கடலில் இருந்து வருகிறேன் என்று...அதை கேட்ட கிணற்று தவளை கடலா அது எப்படி இருக்கும் என்று ..அதற்க்கு கடல் தவளை கூறியது கடல் மிக நீழமாக இருக்கும் என்று ...அதை கேட்ட கிணற்று தவளை ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு தாவி குதித்து இந்த நீளம் இருக்குமா என்று ?

    இதற்க்கு கடல் தவளை நண்பா கடலை எப்படி இந்த கிணற்றோடு ஒப்பிட முடியும் என்று ...!!!

    உடனே கிணற்றுதவளை உனது கடல் இந்த ஆழம் இருக்கமா என்று அந்த கிணற்று தண்ணிரில் முங்கி கேட்டது ...!!

    எதனால் அந்த கிணற்று தவளை இப்படி கேட்கிறது ? காரணம் அதற்க்கு தெரிந்தது எல்லாம் அந்த கிணற்றை பற்றி மட்டும் எனவே அந்த தவளையின் சிந்தனை இந்த கிணற்றை விட்டு மேலும் சிந்தக்க முடியவில்லை ..!!! அந்த கிணற்று தவளயின் சந்தேகத்தை போக்க வேண்டுமானால் அந்த தவளைக்கு முதலில் கடலை காட்டியாக வேண்டும் . நான் எதற்காக இந்த கதையை கூறினேன் என்றால் ..

    இதே கிணற்று தவளையின் கேள்வி போலத்தான் இருக்கிறது உங்களுடைய இந்து மதத்தை பற்றின கேள்வியும் ..!!!***///

    நண்பரே.....!!!

    உங்கள் கதைகளெல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். ஒரு மதத்தை பற்றி விளக்கம் கொடுப்பதற்கு எவனோ ஒரு மனிதன் சொன்ன கற்பனை கதைகள் மட்டுமே உதவுகின்றது என்றால் அந்த மதத்தில் மனிதன் பின்பற்றும் அளவிற்கு விஷயம் ஒன்றும் இல்லை என்று தானே அர்த்தம் ??? அந்த மதத்தில் போதுமான விளக்கங்கள் இருந்தால் கற்பனைக்கதைகளுக்கு விவாதத்தில் என்ன வேலை ??? இதனால் தான் நான் சொல்கிறேன் இந்து மதமே கற்பனைக்கதைகளை சார்ந்து தான் இருக்கின்றது என்று.

    ReplyDelete
  52. \\ஒரு மதத்தையோ அல்லது அதன் வேதத்தையோ விமர்சிப்பதற்கு அந்த மதத்தை பற்றி முழுவதும் தெரிந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அந்த மதத்தில் இருக்கும் தவறுகளை ஓரளவுக்கு தெரிந்திருந்தாலே போதுமானது. இதற்கு தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் !!! என்பார்களே....!!!\\\\

    அரபாத் ,

    ஆனால் அந்த ஒரு அரிசியாவது பதம் பார்க்க வேண்டும் அல்லவா , அதை கூட நீங்கள் செய்வதில்லை என்பதுதான் எனது வாதம் ...!!! நீங்கள் செய்வதெல்லாம் பீ.ஜே தளத்தில் சென்று பார்க்கவேண்டுயது அதை படித்து இங்கே கேள்வி கேட்க வேண்டியது இப்படித்தான் உங்கள் விவாதம் இருக்கிறது...அதில் கொடுப்பதுத்தான் சரி என்று இங்கே வந்து வாதாடுகிறீர்கள் ...உண்மையில் அந்த வேத்தத்தின் பொருளத்தான் என்ன என்று சிறிதும் ஆராய்வதில்லை...அதற்க்கான எடுத்துகாட்டு கூட என்னிடம் இருக்கிறது ,,,அதாவது உஜிலாதேவி தளத்தில் நீங்கள் பகவத் கீதையின் வசனத்தை காட்டி விளக்கம் கேட்டீர்கள்...அப்படி ஒருவசனமே இல்லை என்று நான் நிருபித்து காட்டியபிறகு உங்களிடம் எந்த ஒரு பதிலும் இல்லை...இதில் இருந்து என்ன தெரிகிறது மற்ற மதங்களை பற்றிய அறிவு உங்களுக்கு துளியும் இல்லை என்று ...


    நீங்கள் இட்ட பின்னூட்டம் இதோ ..

    \\\நண்பரே நான் ஏற்கனவே பகவத் கீதையின் வசனத்தை பின்னூட்டமிட்டு அதன் விளக்கத்தையும் உங்களிடம் கேட்டேன். ஆனால் உங்களிடமிருந்து தான் எந்த பதிலும் வரவில்லை. ஒரு வேளை நீங்கள் மறந்திருந்தால் இதோ நான் குறிப்பிட்ட அந்த வசனம்.

    ///பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

    கீதையின் இந்த வசனத்தை ஹிந்துக்கள் பின்பற்றுகிறார்களா ?///

    இந்த வசனம் சிலை வணக்கத்தை பொய்யானது என்பதைப்போல் இருக்கிறது. இதற்கான உங்கள் விளக்கம் என்ன ???\\\\\

    அதற்க்கு நான் தந்த பதில்,


    \\\பகவத் கீதையின் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் என்று கூறும் நீங்கள் அது என்ன ஸ்லோகம் அதற்க்கு என்ன விளக்கம் என்று தெரியுமா ? தெரியாமல் கூறுவது உங்கள் அறியாமையை காட்டுகிறது ...அடுத்தவர் கூறுவதை அப்படியே காப்பி செய்யும் நீங்கள் எங்கள் பகுத்தறிவை பற்றி பேசுவது நகைப்புகூரியது ...

    இதோ அந்த ஸ்லோகம் (பகவத் கீதை 7 : 20 ) ...

    காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்³யந்தேऽந்யதே³வதா:|
    தம் தம் நியமமாஸ்தா²ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ||7-20||

    தை: தை: காமை: = அந்த அந்த விருப்பங்களால்
    ஹ்ருதஜ்ஞாநா: = கவரப்பட்ட அறிவினையுடையோர்
    ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா: = தத்தம் இயற்கையால் கட்டுண்டு
    தம் தம் நியமம் ஆஸ்தா²ய = வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய்
    அந்ய தே³வதா: ப்ரபத்³யந்தே = அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்

    விளக்கம் : வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்...

    சுருக்கம் : அதாவது இன்று மக்கள் பற்றுதலை ( ஆசையை ) இறைவனின் மீது வைக்காமல் இறைவன் படைத்த பொன் மற்றும் பொருட்களின் மீது வைத்து அதற்கான தேவதைகளை வழிபட்டு அதனை பெறுகின்றனர்...இந்த பற்றுதலை என்று அவர்கள் என்மீது ( பரமாத்மா ) வைத்து அந்த பொன் மற்றும் பொருட்களின் ஆசைகளை விடுகின்றனரோ அன்றே அவர்கள் என்னை அடைகிறார்கள்...இது தான் அந்த ஸ்லோகத்தின் விளக்கம் ..

    இதில் எங்கே இருக்கிறது நீங்கள் கூறிய வசனம் ...ஒருவேளை உங்கள் குரானில் இருக்கிறதோ என்னவோ !!!!!!\\\\\\

    இதற்க்கு எந்த பதிலும் வரவில்லை உங்களிடம் இருந்து ...அப்படி ஒரு வசனம் பகவத் கீதையில் இருக்கிறதா என்று முதலில் ஆராய்ந்தீர்களா ? இல்லைதானே....!!! பிறகு உங்களிடம் நான் விவாதித்து என்ன பயன் ....!!!! அந்த கிணற்று தவளைக்கும் உங்களுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை ...!!!!

    ReplyDelete
  53. \\\எவனோ ஒரு மனிதன் சொன்ன கற்பனை கதைகள் மட்டுமே உதவுகின்றது என்றால் அந்த மதத்தில் மனிதன் பின்பற்றும் அளவிற்கு விஷயம் ஒன்றும் இல்லை என்று தானே அர்த்தம் ???\\\\

    அரபாத் ,

    வார்த்தையில் கொஞ்சம் மரியாதை இருக்கட்டும் நண்பரே ...அந்த கதையை கூறியது விவேகானந்தர் ...!!!! நான் இதுநாள் வரைக்கும் உங்கள் நபியை இப்படி அழைத்ததில்லை ...!!!!

    ReplyDelete
  54. நான் உள்ளே வரலாமா ? :)

    ReplyDelete
  55. தமிழன் அவர்களே ,

    \\\நான் உள்ளே வரலாமா\\\\

    கண்டிப்பாக ...!!! உங்களின் வருகைக்கு மிக்க நன்றி ...!!!

    ReplyDelete
  56. @ஷங்கர்,

    ///***வார்த்தையில் கொஞ்சம் மரியாதை இருக்கட்டும் நண்பரே ...அந்த கதையை கூறியது விவேகானந்தர் ...!!!! நான் இதுநாள் வரைக்கும் உங்கள் நபியை இப்படி அழைத்ததில்லை***///

    நான் கூறிய வார்த்தைகள் உங்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தால் மன்னிக்கவும் நண்பரே....!!!

    ReplyDelete
  57. @ இலவச விளம்பரதாரர்,

    ///***நான் உள்ளே வரலாமா ?***///

    உங்களைப்போன்றவர்களுக்கேல்லாம் நேரடி விவாதம் தான் சரியான களம். நேரடி விவாதத்திற்கு தயாரா இலவச விளம்பரதாரரே.....???

    ReplyDelete
  58. @shankar,

    ///***ஆனால் அந்த ஒரு அரிசியாவது பதம் பார்க்க வேண்டும் அல்லவா , அதை கூட நீங்கள் செய்வதில்லை என்பதுதான் எனது வாதம் ...!!! நீங்கள் செய்வதெல்லாம் பீ.ஜே தளத்தில் சென்று பார்க்கவேண்டுயது அதை படித்து இங்கே கேள்வி கேட்க வேண்டியது இப்படித்தான் உங்கள் விவாதம் இருக்கிறது...அதில் கொடுப்பதுத்தான் சரி என்று இங்கே வந்து வாதாடுகிறீர்கள்***///

    ஆம் நண்பரே நான் பி ஜெ தளத்தில் இருந்து தான் எடுக்கிறேன். அது மட்டுமல்ல டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பேச்சிலிருந்தும் இன்னும் சில இஸ்லாமிய தளங்களில் இருந்தும் தான் எல்லா விளக்கங்களையும் எடுத்து கூறுகிறேன். இல்லை என்று மறுக்கவில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது ??? அவர்களெல்லாம் இந்து மதத்திலிருக்கும் ஒரு அரிசியை மட்டுமல்ல ஒவ்வொரு அரிசிகளையும் பதம் பார்த்தவர்கள். உங்களின் அனைத்து வேதங்களையும் கரைத்து குடித்தவர்கள். உங்களுக்கே தெரியாத உங்கள் மதம் சார்ந்த விளக்கங்களை கூட அவர்கள் கொடுப்பார்கள். அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா ??? பி ஜெ தளத்திலிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுங்களேன்.....!!!

    அவர்களோடு ஒப்பிடுகையில் நான் அவர்களின் சாதாரண ஆரம்ப நிலை மாணவன். அவ்வளவுதான். என்னுடைய கேள்விகளுக்கே உங்களால் பதில் தர முடியவில்லையே....... நீங்களெல்லாம் அவர்களுடன் நேரடி விவாதம் செய்தால் என்ன ஆவீர்கள் ??? நினைத்து பாருங்கள் சகோதரரே....!!!

    என்னுடைய விவாதங்களில் சில தவறுகள் இருக்கலாம் இல்லை என்று சொல்லவில்லை. ஏனென்றால் மாற்று மதத்தினரிடம் விவாதம் செய்வதில் நான் இப்போது தான் ஆரம்ப நிலையில் இருக்கிறேன். என்னுடைய முதல் விவாதமே உங்களுடன் தான். அதனால் கூட என் விவாதங்களில் சில பிழைகள் இருந்திருக்கலாம். நான் விவாதம் செய்வது உங்களை மதம் மாற்றுவதற்காக அல்ல. உங்கள் மதத்தினை பற்றி நான் தெரிந்துகொள்ள. எங்கள் மார்க்கத்தை பற்றி உங்களிடம் உள்ள தவறான எண்ணங்களை போக்குவதற்காக. விவாதம் செய்வதில் என்னுடைய திறமையை வளர்த்துக்கொள்வதர்க்காக. அவ்வளவுதான்.

    ReplyDelete
  59. \\\ஆம் நண்பரே நான் பி ஜெ தளத்தில் இருந்து தான் எடுக்கிறேன். அது மட்டுமல்ல டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பேச்சிலிருந்தும் இன்னும் சில இஸ்லாமிய தளங்களில் இருந்தும் தான் எல்லா விளக்கங்களையும் எடுத்து கூறுகிறேன். இல்லை என்று மறுக்கவில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது ??? அவர்களெல்லாம் இந்து மதத்திலிருக்கும் ஒரு அரிசியை மட்டுமல்ல ஒவ்வொரு அரிசிகளையும் பதம் பார்த்தவர்கள். உங்களின் அனைத்து வேதங்களையும் கரைத்து குடித்தவர்கள். உங்களுக்கே தெரியாத உங்கள் மதம் சார்ந்த விளக்கங்களை கூட அவர்கள் கொடுப்பார்கள். அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா ??? பி ஜெ தளத்திலிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுங்களேன்.....!!!\\\\

    அரபாத்,
    அழகா நிருபித்துவிட்டீர்கள் நீங்கள் ஒரு செம்பரி ஆட்டுகூட்டம் என்று , ஏன் என்றால் அதுத்தான் தன் முன்னே செல்லும் ஆட்டை நோக்கியே தானும் செல்லும் , முன்னே செல்லும் ஆடு கிணற்றில் விழுந்தால் அதும் கிணற்றில் விழும் . ஜாகிர் நாயக் அல்லது பி.ஜே சாப்பிட்டு விட்டார் என்பதனால் நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்களா ?. உங்கள் சுய அறிவை பயன் படுத்தவே மாடீர்களா ?. அவர்கள் எது கூறினாலும் சரியே என்று மீண்டும் என்னிடம் வாதிக்காதிர்கள் .

    அவர்கள் எதையும் கூறுவார்கள் உங்களுக்கு எங்கே போனது புத்தி ? அவர்கள் பகவத் கீதையில் நபியை பற்றி கூறியுள்ளது என்பார்கள் நீங்களும் அப்படியே மண்டையை ஆட்டி அமாம் அப்படித்தான் என்று கூறுவீர்கள் . அப்படி பகவத் கீதையில் கொடுத்துள்ளதா என்று சிறிதும் சிந்திப்பதில்லை நீங்கள் . மற்ற மதத்தினரின் பகுத்தறிவை பற்றி நீங்கள் பேசுவது அறிவீனம்.

    ReplyDelete
  60. \\\அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா ??? பி ஜெ தளத்திலிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுங்களேன்.....!!! \\\\\

    அரபாத் ,

    நான் கூறிய பகவத் கீதையின் இரண்டே இரண்டு வசனங்களுக்கு உங்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை ஆனால் எங்கள் பகவத் கீதை ஒரு கட்டு கதை என்று மட்டும் தான் பிடித்த முயலுக்கு மூணு காலு என்று வாதிப்பது சுத்த முட்டாள் தனம்.

    ReplyDelete
  61. \\\\என்னுடைய கேள்விகளுக்கே உங்களால் பதில் தர முடியவில்லையே......\\\\

    அரபாத் ,

    ஒரு சிறிய திருத்தம் எங்கள் பதிலை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. ஏன் என்றால் இரு காதையும் (அறிவையும் ) கை ( இஸ்லாம் மதமே சிறந்த மதம் குரானே உண்மையான வேதம்) இரண்டால் பொத்திக்கொண்டு பதில் கூற வில்லை என்று கூறுவது மூடத்தனம்.

    ReplyDelete
  62. @ ஷங்கர்,

    ///***ஒரு சிறிய திருத்தம் எங்கள் பதிலை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. ஏன் என்றால் இரு காதையும் (அறிவையும் ) கை ( இஸ்லாம் மதமே சிறந்த மதம் குரானே உண்மையான வேதம்) இரண்டால் பொத்திக்கொண்டு பதில் கூற வில்லை என்று கூறுவது மூடத்தனம்.***///

    பவிஷ்ய புராணம், மறு பிறவி போன்ற தலைப்புகளில் வாதிடுகையில் எனக்கு இன்னும் நீங்கள் சரியான பதிலை தரவே இல்லையே நண்பரே......!!! இது தான் நீங்கள் பதில் கூறும் அழகா ???

    ReplyDelete