இறைவன் நேரில் வருவானா ?
" பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே " இது இறைவனாகிய கண்ண பெருமான் கீதா உபதேசத்தில் அர்ஜுனனுக்கு கூறியது . அது என்னவென்றால் நல்லவர்களை காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் , தர்மங்களை நிலை நிறுத்துவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவ்வாறு இறைவன் இந்த பூமியில் பத்து அவதாரம் எடுத்தார் என்கிறது இந்து மதம். சில சமயம் நம்மை தர்ம நெறியில் வழிநடத்த பல மகான்களையும் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கிறார் அவசியம் இருந்தால் தானும் வருகிறார்.
ஆனால் மற்ற மதங்களோ இறைவன் எந்தவொரு அவதாரமும் எடுப்பதில்லை அவர் தன் தூதர்களை மட்டும்த்தான் அனுப்புவார் என்கிறது . அதாவது இறைவன் ஒரு அதிகார தோரணை கொண்டவன் போல் சித்தரிகின்றனர். ஆனால் இந்துமதமோ இறைவன் நம்மை அரைவனைப்பதில் தாய் என்றும் , நம்மை வழிநடத்துவதில் ஒரு தந்தை என்றும் தன் நாட்டு மக்களை காக்கும் மன்னனை போலவும் , வெற்றியிலும் தோல்வியிலும் பங்கேற்கும் ஒரு நல்ல நண்பனை போலவும் இறைவனை சித்தரிகின்றது.
நமக்கு ஒரு துன்பம் என்றால் ஓடி வருபவனே இறைவன்..!!! அதைவிடுத்து எந்த ஒரு சூழ்நிலையிலும் என் நிலையில் இருந்து நான் இறங்கி வரமாட்டேன் என்று கூறுபவன் இறைவன் இல்லை . ஆனால் அவன் நம்மை காக்க எந்த ரூபத்திலும் வருவான் நாம் தான் அவனை அறிவதில்லை ..!!!! அறிந்து கொள்ள முயல்வதும் இல்லை...!!!!!
மன்னன் என்பவன் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று சட்டம் உருவாக்கினால் மட்டும் போதாது அதன் படி வாழ்ந்து காட்டி மற்ற மக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும்.அதே போலத்தான் தர்ம நெறியில் நம்மை வாழ சொல்லும் இறைவனும் இந்த பூவுலகில் அவதரித்து அதன் படி வாழ்ந்தும் நமக்கெல்லாம் ஒரு உதாரணமாகவும் இருகின்றார் என்கிறது இந்து மதம்.
ஒரு முறை ஒரு மன்னன் அவருடைய மகன் மற்றும் அவருடைய அமைச்சர் ஆகியோர் ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது அந்த மன்னனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது அந்த சந்தேகத்தை தீர்க்கும்படி தன் அமைச்சரிடம் கேட்டார் ..அது என்ன சந்தேகம் என்றால் மக்களை காப்பாற்ற இறைவன் என் நேரில் வரவேண்டும் அவருக்குதான் சக்தி இருக்கிறதே எனவே எதாவது ஒரு தூதரை அனுப்ப வேண்டியதுத்தானே அவர் நேரில் வரவேண்டியதன் அவசியம் என்ன ? என்று கேட்டார் . அதற்க்கு அந்த அமைச்சர் என்ன விளக்கம் கொடுத்தும் அந்த மன்னன் புரிந்துகொள்ள முயலவில்லை ..பொறுமையை இழந்த அந்த அமைச்சர் திடிரென்று மன்னனின் மகனை ஆற்றில் தள்ளி விட்டார். இதை கண்ட மன்னன் உடனே ஆற்றில் குதித்து தன் மகனை காப்பாற்றினார்...மகனுடன் படகில் ஏறிய மன்னன் அமைச்சரை பார்த்து உமக்கு என்ன புத்தி பேதலித்து போனதா ?.. யாரங்கே ..!!! இந்த அமைச்சரை கைது செய்யுங்கள் என்றார். அதற்க்கு அந்த அமைச்சர் மன்னா !!! சற்று பொறுமையாய் இருங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு இப்ப ஒரு தீர்க்கமான பதில் கிடைத்து விட்டது என்றார்." என்ன உளறுகிறீர் ?" என்றார் மன்னன் ...அதற்க்கு அமைச்சர் மன்னரே உங்களுடைய மகன் நீரில் விழுந்த பொழுது நீங்கள் என் ஆற்றி விழுந்து உங்கள் மகனை காப்பாற்றினீர்கள்..அதற்கு மன்னன் " என்ன மடத்தனமாக பேசுகிறீர் ? என் மகனை நான் காப்பாற்றாமல் வேற யார் காப்பாற்றுவார் "...அதற்க்கு அமைச்சர் மன்னரே எந்த வேலை என்றாலும் அதை செய்ய காவலர்களை ஏவும் நீங்கள் உங்கள் மகன் தண்ணீரில் விழுந்த பொது மட்டும் ஏன் காவலர்களை ஏவாமல் நீங்கள் ஆற்றில் குதித்தீர்கள் என்றார்...அதற்க்கு மன்னன் அமைச்சரே விழுந்து என் மகன் அல்லவா அவன் தண்ணீரில் துடிப்பதை பார்த்து கொண்டு என்னால் இருக்க முடியவில்லை உடனே நானும் விழுந்தேன் என் மகனை காப்பாற்றினேன் இதில் என்ன தவறு என்றார் .
உடனே அமைச்சர் மன்னா இப்போது புரிகிறதா இறைவனும் அப்படிதான் அவன் படைத்த எல்லா உயிருக்கும் அவனேதாயும் , தந்தையும் ஆவான் . நமக்கு ஒரு துன்பம் என்றால் நம்மை காப்பாற்ற அவனும் இந்த பூவுலகில் அவதரிக்கின்றான் என்றார்.
தொடரும் ,