ஒரே வழி ....
" ஆறேன்றும் குளமென்றும் ஓடையேன்றாலும் அது நீர் போகும் பாதை தன்னை குறிக்கும் " என்ற அழகான பாடல் வரிகளுகேர்ப்ப இந்த உலகில் எத்தனயோ மதங்கள் இருந்தாலும் அது நம்மை கடவுளிடம் கொண்டும் செல்லும் ஒரே பாதைதான் என்பதை உணர்ந்தாலே என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்ற சண்டை ஓயும்.இன்று பல மதங்கள் ஹிந்து மதத்தை பார்த்து சொல்லும் ஒரே சொல் இது சாத்தனின் மதம்.உண்மையில் சாத்தான் என்றால் யார் ? அப்படி ஒருவர் உண்டா என்றால் கிடையாது ....வேதங்கள் , பைபிள் , குரானை நன்கு படித்து அறிந்தவர்களை கேட்டால் ஒரே பதில் வரும் அதாவது மனதில் எழும் தீய எண்ணங்களே சாத்தான்...... அப்படி சாத்தன் என்ற தனி நபர் இருந்தால் இறைவன் ஏன் அவனை படைக்க வேண்டும் ? அதன் நோக்கம் என்ன ? இறைவன் நினைத்தால் அந்த சாத்தானை ஒரே நொடியில் அழிக்க முடியும் தானே ? ஏன் இறைவன் அவனை ஒழிக்க வில்லை ? இதை ஒரு நொடி சிந்தித்தால் சாத்தான் என்பது எதுவென்று விளங்கி விடும்..
சாத்தான் என்பவன் வெளியில் இல்லை மக்களின் எண்ணங்களில் தான் இருக்கிறான் . அதை இறைவன் ஒழிக்க வேண்டியதில்லை நாம் தான் ஒழிக்க வேண்டும் .இப்படி மக்களை நல்வழிபடுத்தும் புனிதமான இந்து மதத்தை சாத்தானின் மதம் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை உதாசினை படுத்துவர்களின் எண்ணங்களில் தான் சாத்தான் இருக்கிறான் .
அனால் ஹிந்து மதம் கூறுவதோ " எந்த பாதை உன்னை தர்ம வழியில் அழைத்து செல்கிறதோ அது இறைவனை அடையும் பாதையே " .
அதை விடுத்து கூப்பாடு போட்டு அழைபதாலோ , ஐந்து வேளை தொலுவதினாலோ இறைவனை அடைய முடியாது என்பது சத்தியமே ...இன்று எங்கள் மதம்தான் உண்மையான மதம் என்று சொல்லும் மதத்தவர்கள் முதலில் தங்கள் முதுகை ஒரு முறை திரும்பி பார்க்கவேண்டும் நாம் நம்முடைய வேதத்தின் வழி நாம் நடக்கிறோமா என்று சிந்தித்தால் அடுத்த மதத்தை ஏளனம் செய்யும் தகுதி நமக்கு கிடையாது என்ற உண்மை தெரியவரும் . அதனால் தான் ஹிந்து மதத்தில் அடுத்த மதத்தின் நம்பிகையை பழித்ததாக எந்த வேதங்களிலும் காண முடியாது .எல்லாவற்றியும் தன்னில் ஐக்யமாக்குமே தவிர பிரித்து பார்ப்பதில்லை.ஹிந்து மதம் கூறுவது " முதலில் நீ திருந்து பின் அடுத்தவரை நீ திருத்து ".....இதுவே நம்மளுடைய சகிப்புத்தன்மைக்கு காரணம் . பிறர் மதத்தவர்கள் நம் மதத்தை பழிப்பது கசாப்பு கடைக்காரன் உயிர் பழி கூடாது என்று சொல்வது போல் ஆகும் "....
தொடரும் ....
Happy to see ur next article soon . Many Thanks for your consideration. Keep it up.
ReplyDeletePrabu