இறைவன் படைத்தானா ?
பொதுவாக எல்லா மதமும் கூறுகிறது இறைவன் எல்லாவற்றையும் படைத்தான் என்று .... அனால் உண்மையில் அப்படி படைக்கிறான் என்றால் எதை மூலமாக கொண்டு படைக்கிறான் ? எதற்காக நம்மை படைக்கிறான் ?
அதன் நோக்கம் என்ன ? ...இதற்க்கு நம் ஹிந்து மதம் என்ன விளக்கம் தருகிறது என்று பார்போம் ...
இறைவன் என்பவன் என்றும் ஆனந்த மயமானவன் ...அவன் இந்த அண்டங்கள் மற்றும் ஜீவராசிகளை படைத்ததன் நோக்கமே அவன் ஆனந்தமாய் இருப்பதற்கே ...அவன் தனித்து இருக்க விரும்பவில்லை அதன் விழைவே இந்த உலகம் மற்றும் உயிரினங்கள். கடற்கரயில் விளையாடும் குழந்தை மணலில் அழகான வீடு கெட்டும் பின் வீடு திரும்பும்பொழுது அதை இடித்து விடும் காரணம் கேட்டல் சும்மா விளையாட்டாக கெட்டினேன் பின் இடித்தேன் என்று பதில் வரும். அதே போல் தான் இந்த அண்டத்தின் படைப்பும் .அனால் மற்ற மதங்கள் கூறுவது போல் இறைவன் உலகை படைக்க ஆறு நாட்கள் எடுக்கவில்லை.அவர் நான் பலவாக ஆவேனாக என்ற சங்கல்பம் எடுத்ததன் மூலம் தோன்றியவையே இவை அனைத்தும். அவர் தன்னையே மூலமாக கொண்டு எல்லாவற்றையும் படைத்தார் என்கிறது இந்து வேதங்கள். அவன் தன்னையே மூலமாக கொண்டு படைத்ததினால் எல்லாவற்றிலும் அவனுடைய அம்சம் நிறைந்திருக்கிறது . இதுவே இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற தத்துவத்துக்கு ஆதாரம்.
எப்படி ஒரு குயவன் மன்பாண்டகள் செய்ய மண்ணை மூல பொருளாக கொள்கிறானோ அதை போல் இறைவன் தன்னை மூல பொருளாக கொண்டான்.இதனாலே அவனை நாம் ஆதிமூலம் என்கிறோம். மற்ற மதங்கள் இறைவன் மனிதனை சேவை செய்வதற்காக அல்லது வழிபடுவதற்காக படைதான் என்கிறது . ஆனால் இறைவனோ இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நாம் சேவை செய்வதனொலோ அல்லது வழிபடுவதிலோ அவன் மகிழ போவதில்லை அவனுடைய எதிர்பார்பெல்லாம் மனிதன் தன் இறுதி இலக்கான தன்னை அடைவதிலே மகிழ்கிறான். ஹிந்து மதமோ இதை இறைவனின் திரு விளையாடல்களே என்கிறது.
உதாரணமாக பரமபதம் விளையாட்டை எடுத்து கொள்வோம் அதில் coins- ஆக இருப்பவன் மனிதன் , அவன் தன் மனதை தாயமாக உருட்டி விடுகிறான் நல்ல எண்ணங்கள் மற்றும் அவன் செய்யும் தர்மங்களின் மூலமாக விரைவாக முன்னேறி இறைவனை அடைகிறான் அல்லது அவன் செய்யும் தீய வினைகளுக்கேற்ப மீண்டும் பின்னோக்கி செல்கிறான் இதுவே அந்த இறைவனின் விளையாட்டாகும். ஆனால் அனைவரும் ஒருநாள் பரமபதத்தை அடைவது சத்தியமே .
இறைவனை ஏன் அடையவேண்டும் ?
அடுத்த பதத்தில் .....
தொடரும் .....
Dear Bro,Excellant article.. keep it up. I will post my detail comment soon.
ReplyDeletePrabu
please see my blog, knsm-natarajan.blogspot.com
ReplyDeleteafter reading your writing i have written my present "thayumaanavan thayankuvathu eano
This comment has been removed by the author.
ReplyDelete@prabhu,
ReplyDeleteThanks for your comments