இறைவனுக்கும் நமக்கும் என்ன உறவு ?
இறைவனுக்கும் நமக்கும் இடையில் உள்ள உறவு என்னவென்று இந்து மதம் கூறுகிறது என்று பார்ப்போம்..
பொதுவாக இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையில் உள்ள உறவு என்பது படைத்தவன் மற்றும் படைக்க பட்ட உயிர் என்பதையும் தாண்டி இறைவனை தாயாகவும் , தந்தையாகவும் , காதலனாகவும் , நண்பனாகும் தனக்கான முதாளியாகவும் பார்க்கிறது இந்து மதம். இது சரியா என்றால் இது தான் சரி இதுதான் நமக்குண்டான சுதந்திரம். இறைவனும் மனிதர்களின் என்னங்களுகேர்ப்ப இசைந்து கொடுக்கிறான் என்கிறது இந்துமதம், அதற்கான ஆதாரமே நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் . அப்படி நாம் நினைப்பது தவறென்றால் தன்னை இப்படிதான் பார்க்கவேண்டும், தன்னிடம் இப்படிதான் பேசவேண்டும், பழகவேண்டும் என்று அகம்பாவம் பிடித்து திரியும் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வித்யாசம்தான் என்ன என்று சிந்திக்க சொல்கிறது இந்து மதம். " அடக்கமாய் இரு அடிமையாகிவிடாதே " என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறியிருக்கிறார் , அப்படி இருக்கையில் நாம் படைத்த உயிர்கள்
நமக்கு அடிமையாய் மட்டுமாய் இருக்க வேண்டும் என்று எப்படி இறைவன் நினைப்பார் என்று சிந்தித்தார்கள் நம் முன்னோர்கள் அதன் விழைவே இறைவனை தாயாகவும்,தந்தையாகவும் பார்த்திருக்கிறார்கள் . அவ்வாறே ஆண்டாள் இறைவனை தன் காதலனாக நினைத்து இறைவனை அடைந்தாள் , திருஞான சம்பந்தருக்கு அன்னை உமா தேவியாக வந்து பாலுட்டினார், அர்ஜுனனுக்கோ நண்பனாகவும் , பாரத போரில் ஒரு நல்ல வழிகாட்டியுமாய் இருந்தார். இதில் இருந்தே தெரிகிறது தூய பக்தர்களுக்காக இறைவன் என்றும் தன் நிலையிலிருந்து இசைந்து கொடுப்பான் என்று...
ஆனால் மற்ற மதங்களோ இறைவன் என்பவன் முதலாளி நாம் அனைவரும் அவன் படைத்த அடிமைகள் மட்டுமே அவனை நாம் எவ்வாறும் அவனை உறவு சொல்லி அழைக்க கூடாது அது பாவம் , மீறி அழைத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம் என்கிறது....ஒரு நிமிடம் சற்று சிந்திக்கவேண்டும் முதலாளி அடிமை என்பதே இந்த உலகில் இருக்க கூடாது என்று கூறும் இறைவனே நம்மை அடிமைபடுத்துவாரா ? அவன் என்ன சாதாரண தலைகனம் பிடித்த மனிதனா ? ...அவன் இறைவன்...
அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய தன்னலமில்லாத பக்தி மட்டுமே ..
அந்த பக்தியை எந்த வழியில் செலுத்தினால் என்ன ?
நமது தூய பக்திக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வராதவர் எப்படி
இறைவனாக இருக்க முடியும் என்கிறது இந்து மதம்....
தொடரும் .....
No comments:
Post a Comment