Friday, 3 June 2011

இந்து மதம் -2

              
பல கடவுள் ஏன் ?

ஹிந்து மதம் அதை பின்பற்றுவருக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளது. இந்த நேரத்தில் தான் இறைவனை தொழ வேண்டும் இப்படி தான் வழிபட வேண்டும் என்று பிறர் கருத்துகளை  நம் மீது தினிபதில்லை.அவரவர் என்னங்களுகேர்ப்ப  இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து. இவ்வாரே வந்ததுதான் சிவ , விஷ்ணு , மற்றும் சக்தி வழிபாடு ஆகும்.
                     
              பிற மதத்தவர் நம் மதத்தை பார்த்து கேட்கும் கேள்வி இது தான் " பல கடவுள் இந்து மதத்தில் ஏன் ?...உண்மையில் பல கடவுள் உண்டா என்றால் இல்லை ... பிறகு யார் இந்த சிவன் , விஷ்ணு , பிரம்மா, பார்வதி , லட்சுமி சரஸ்வதி . இவர்களெல்லாம் ஒரே பரமாத்மாவின் வெவ்வேறு அம்சங்களே. அந்த பரமாத்மா உயிர்களை படைக்கும் போது பிரம்மா என்றும் , படைத்த உயிர்களை காக்கும் போது விஷ்ணுவாகவும் , படைத்த உயிர்களை அழிக்கும் போது சிவனாகவும் பார்கின்றனர் நம் இந்து மதத்தவர்கள்.அந்த பரமாத்மாவின் அளவற்ற சக்தியே பராசக்தி , அவரின் அளவற்ற செல்வமே லக்ஷ்மி , அவரின் ஞானமே சரஸ்வதி இவ்வாறு ஒரே பரமாத்மாவின் பல நிலைகளே பல கடவுளாக இருக்கிறது ஹிந்து மதத்தில். இப்படி பல வடிவங்களில் யாரை வணங்கினாலும்   நாம் அந்த ஒரே பரமாத்மாவையே வழி படுகிறோம். இந்து மதத்தில்  இறைவனுக்கு ஏன் இந்த பல வடிவங்கள் என்று கேட்டால்  பொதுவாக நாம் பள்ளி பருவங்களில் கணக்கு பாடங்களில் பாத்திருப்போம் ஒரு பெரிய கணக்கை பல steps ஆக பிரித்து வகுத்து இறுதியில் ஒரே விடையாக தந்துருப்பர்கள் . ஏன் இப்படி பல steps என்று கேட்டால்  நாம் எழிதில் அந்த கணக்கை புரிந்து கொள்வதற்கு , இப்படி நாம் ஒரே பரமாத்மாவை பல வடிவங்களில்  ஏதாவது  ஒரு வடிவினை பற்றிக்கொண்டு இறைவனை சாதாரண மக்களும் எழிதில் புரிந்து கொள்வதற்கே என்பது   இந்து மதத்தின் கூற்று .எப்படி ஒரு கணக்கில் பல steps இருந்தாலும் இறுதில் ஒரே விடையே தருவது போல் நாம் இப்படி பல வடிவங்களில்  இறைவனை வழிபடுவதினால் இறுதியில் அடைய போவது அந்த ஒரே பரமாத்மாவைத்தான்......

தொடரும் .....                                  

2 comments:

  1. நல்ல விளக்கங்கள் நண்பா,
    நிறைய செல்வம் உள்ள நாட்டை எப்படி அழைப்பீர்கள்(Rich Country ) நிறைய கடவுள் எனில்? (Rich Culture ). வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத உன்னதமான கலாச்சாரம், பண்பாடு. இத்தனை கடவுள் இருந்தும் ஒற்றுமை உடன் வாழும் சமுகம் வேறெங்கும் இல்லை. ஒரு கடவுள் கொள்கை உள்ள மதங்கள் இடும் சண்டை, அவர்கள் கலாச்சாரம் சொல்லி தீராது. கல்லாய் பார்க்கும் எவருக்கும் இந்து கடவுள்கள் பலவாய் தான் தெரியும். அதற்கும் விதண்டவாதம் செய்வார்கள். கடவுளின் உன்னதம் இவர்கள் உணரமாட்டார்கள்.
    இன்னும் உங்கள் நிறைய பதிவை எதிர்பார்த்து காத்திருகிறேன். வாரம் ஒரு பதிவு பத்தாது நண்பா, சொல்ல வேண்டியவை நிறைய உளது. ஆகவே கொஞ்சம் அதிகபடுதுவீர்கள் என்று எதிர் பார்க்கிறான் ஆவலுடன்.
    பிரபு

    ReplyDelete
  2. விதண்டா வாதமும் மத வாதமும் அல்ல எனது நோக்கம்
    சிந்திக்க தூண்டுவது உண்மையை தேட உதவுவதற்கும்

    நிற வெறி உள்ள நாடுகள் இருக்கிறது
    கலாச்சாரம் என்பது வாழ்வு முறையாகும். நமது நாட்டில் ஜாதி வேற்றுமை மொழி வேற்றுமை இருக்கிறது.எத்தனை ஆணவ கொலைகள் எத்தனை கடவுள் என்பது அல்ல எந்த கடவுள் பிற மனிதனை நேசிக்க உதவுகிறாரோ அவரே தெய்வம்.

    ReplyDelete