Thursday 30 June, 2011

இந்து மதம் -7

                                                            

மறு ஜென்மம் !!!!!!!...

       இந்து மதமும் மற்றும் பௌத்த மதம் உலகில் மற்ற அந்நிய மத கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முக்கியமான கொள்கைகளில் இதுவும் ஒன்று அதுதான் மறுஜென்மம்....
         இஸ்லாம் மதமும் கிருஸ்துவ மதமும் மறுஜென்மம் என்பது மனிதனுக்கு கிடையாது அவன் இறந்த பிறகு ஒன்று சொர்கத்திற்கு செல்வான் அல்லது நரகத்திற்கு செல்வான் என்கிறது...அனால் இந்து மதமோ ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆத்மா அவன் செய்த கர்ம வினைகளுகேர்ப்ப வேறொரு உடலை அடைகிறது  அதுவே மறு ஜென்மம் என்கிறது....வேறொரு உடல் என்பது மிருகங்களுடைய அல்லது பறவைகளுடைய மற்றும் பூச்சிகளுடைய அல்லது மனித உடல் என்பனவாகும்...

ஏன் மறுஜென்மம் ? 

               
                        பிறவிகளிலே மிகவும் உயர்ந்த பிறவி மனித பிறவி ஆகும் . ஏன் என்றால் மனித பிறவியில் இருக்கும் ஒரு உயிரால் மட்டுமே பகுத்தறிவோடு சிந்தித்து செயல் படமுடியும். எது தர்மம் எது அதர்ம செயல் என்று பிரித்து பார்த்து செயல் படும் மனோபாவம் மனித பிறவிக்கு மட்டுமே உண்டு .அனால் மனிதனோ இந்த அரிதான பிறவியை கொண்டு இறைவன் வகுத்த அர நெறியில் வாழ்கையை நடத்தாமல் தனக்கு எது சரியென்று படுகிறதோ தான் வகுத்த அந்த  வழியிலே செல்கிறான். சரி அவன் வகுத்த வழி தர்ம வழியாய் இருந்தால் பரவாஇல்லை , என்று அது அதர்மத்தை நிலைநாட்டுகிறதோ அன்று முதல் அவன் தீய செயலை  செய்ய தொடங்குகிறான். அவன் செய்த தீய செயல்களே அவனுடைய மறுபிறவிக்கு காரணமாய் அமைந்து விடுகிறது. ஒரு ஆத்மா என்று முக்தி அடைகிறதோ அதன் பிறகே அதற்க்கு மறு  பிறவியில்லை . அனால் முக்தி அடைவது என்பது ஒரு ஆத்மா மனித பிறவியில் இருக்கும் பொதுத்தான் சாத்தியம் என்கிறது இந்து மதம் .
              இன்றும் நாம் காணலாம் மனிதன் மட்டும் பழைய நிலைகளில் இருந்து மாறுபட்டு கொண்டிருக்கிறான் ஏன் நம்மோடு தோன்றிய ஆடு மாடு மற்றும் விலங்குகள் , பறவைகள் மறுபடாமல் இருக்கின்றன. மனிதனுக்கு மூளை இருப்பது போல் விலங்குகளுக்கும் மூளை இருக்கின்றன அனால் அதெல்லாம் சிந்திப்பது இல்லை மனிதனாகிய நாம் தான் சிந்தித்து செயல் படுகிறோம் . அதனால் தான் ஒரு ஆத்மா  முக்தி அடைய மனித பிறவியே சிறந்த பிறவி என்கிறது இந்து மதம் .அனால் நமக்கு இறைவன் கொடுத்த இந்த அறிய வாய்ப்பை நாம் ஒழுங்காக பயன் படுத்துகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.....நாம் செய்யும் சில தீய செயல்களாலே நாம் முக்தி அடையாமல் மீண்டும் வேறொரு பிறவி எடுத்து விடுகிறோம்...ஏன் இந்த மறு பிறவி என்றால் செய்த வினைகளுக்கான தண்டனை என்பதை விட நம் பாவத்தை போக்குவதற்கான வழி என்றே சொல்கிறது இந்து மதம் ...எடுத்து காட்டாக ஒரே வகுப்பறையில் இரண்டு மாணவர் இருக்கிறார்கள் ஒருவன் நன்றாக படிப்பான் மற்றவன் உதாரிதனம்மாக திரிகிறான்...நன்றாக படித்த மாணவன் இறுதி ஆண்டுதேர்வில் வெற்றிபெற்று அடுத்த வகுப்புக்கு செல்கிறான் அந்நாள் உதாரிதனமாக திரிந்த மாணவனோ அதே தேர்வில் தோல்வியுற்று மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் படி ஆகிவிடுகிறது ...இது அந்த உதாரிதனம்மாக  திரிந்த மாணவனுக்கான தண்டனை அல்ல மேற்படிப்புக்காக அவனை தயார் ஆக்கி கொள்ள மீண்டும் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம்...இதுவே மறுபிறப்பின் ரகசியம் ...ஆன்மிகபாதையில் முன்னேருகிறவன் படி படியாய் முன்னேறி இறைவனை அடைகிறான் ....பாவம் செய்தவனோ அவன் கர்ம வினைகளுகேர்ப்ப பல பிறவி எடுத்து தாமதமாக இறைவனை அடைகிறான் ...எனவே பிறவி என்னும் பெருங்கடலை தாண்டி நாமும் என்றாவது இறைவனை அடையவது சாத்தியமே இது சத்தியமே....

தொடரும் ....

4 comments:

  1. @Shyam ,

    Thanks for your visiting to my site & also for your comment

    Regards,
    Shankar

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. முயற்சிக்குப்பின் துன்பம் எனின் அதை அனுபவித்துதான் ஆகவேண்டும்.கொன்றால் பாவம். தின்றால்தான் தீறும்.

    ReplyDelete