Wednesday, 22 June 2011

இந்து மதம் -5

இறைவனை ஏன் அடையவேண்டும் ?

இந்த  கலியுகத்தில்  மனிதன் முதலில் எது நிரந்தர இன்பம் எது நிலையில்லாத இன்பம் என்று அறிய இன்னும் முயற்சிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும் .இன்று  அவன் எதெல்லாம் நிரந்தரம் என்று நினைக்கிறானோ அதெல்லாம் அவன் கண் முன்னே  அழிந்து  போனாலும் மீண்டும் மீண்டும் அதையே அடைய துடிக்கிறான்.சிறு வயதில் ஒரு பொம்மை மீது ஆசை வைக்கிறான் பின் வளர்ந்த பிறகு அந்த பொம்மையின் மீது  உள்ள ஆசை போய்விடுகிறது. பின் குறிப்பிட்ட வயதிற்க்கு பின் எதிர் பாலினத்தின் மீது அவன் ஆசை போகிறது . அதுவும் மணம் முடித்த பின் கசக்கிறது . பின் பணத்தை தேடி அலைகிறான் அது கிட்டியவுடன் நின்மதியாக  இருக்கிறான் என்றால் இல்லை , இருக்கும் பணத்தை மேலும் எப்படி அதிகமாக்குவது அதை எப்படி பாதுகாப்பது என்று சிந்தித்து தன் வாழ் நாளை அதிலே வினாக்குகிறான் சரி அப்படி அவன் சேர்க்கும் பணம் கடேசி வரை அவன் கூட நிரந்தரமாக இருக்குமா என்றால் அதுவும்  சந்தேகம் தான்.
       
                         பின் எதுத்தான் நிரந்தரம் என்று சிந்தித்து பார்க்கும் முன் அவன் ஆயுளும்  முடித்து விடுகிறது. இன்று நாம் வாழும் இந்த பூமியே நிரந்தரமில்லாதது அப்படி இருக்க இந்த பூமியில் இருக்கும் நாம் மற்றும் நாம் அடையும் பொருட்கள் எப்படி நிரந்தரமாய் இருக்க முடியும் . அப்படி நிரந்தரமில்லாத இந்த பொருட்கள்  மற்றும் அசைகளால் எப்படி நிரந்தரமான இன்பத்தை அடையமுடியும்?. இறைவனின் ஒரு அம்சமாய்  அவனிடம் இருந்து பிரிந்த நாம் அவன் தோற்றவித்த இந்த மாய உலகத்தையே நாம் நிரந்தரம் என்று மீண்டும் மீண்டும் அதையே அடைய விரும்புகிறோம் . சாகும் தருவாயில் கூட நாம் நம்மை படைத்த  இறைவனை நினைப்பதில்லை மாறாக அவன் உருவாக்கிய   மாய தோற்றங்களே நிரந்தரம் என்று அதையே நினைத்து  உயிரை விடுகிறோம்  . அதுவே நம்  மறு பிறவிக்கு காரணமாய் அமைத்து விடுகிறது. அப்படி என்றால் எது நிரந்தர இன்பம் என்றால்... இறைவனிடம் இருந்து பிரிந்த நாம் மீண்டும் அவனை  அடைதலே நிலையான இன்பம் . அவனை அடைந்த பிறகு நமக்கு மறு பிறப்பில்லை. மறுபடியும் பிறப்பதால்  தானே நாம் ஒரு உடலை அடைய வேண்டியதிருக்கிறது , பிறகு ஒரு சொந்தம் கிடைக்கிறது ஒரு சமயம் அந்த சொந்தம் நம்மை பிரியும் பொது நாம் துக்க படுகிறோம் , பிறகு பொருளை சேர்க்க மாடாய் உழைக்கிறோம் , அந்த பொருளையும் நாம் சாகும் பொழுது  எடுத்து செல்ல முடியவில்லை , நாம் கொண்ட உடலும் நோய் வாய் படுகிறது இதனால்  மேலும் துன்பமடைகிறோம் . இதெல்லாம் ஏன் என்றால் நாம் நம் பற்றுதலை இறைவனின் மீது வைக்காமல் இறைவன் படைத்த இந்த நிரந்தர மில்லாத பொருட்களின் மீது வைப்பதினால்  வந்த வினை.
                       ஆனால் இறைவனின் விருப்பமோ அவனிடம் இருந்து பிரிந்த அவனுடைய அம்சமாகிய நாம் அவனை   அடைவதிலே..... நம்முடைய நிலையான இன்பமும் அவனே . அவனை அடைந்த பிறகு நமக்கு பிறவி இல்லை , உடல் இல்லை  , சொந்தம் தேவையில்லை பொருட்கள் தேவையில்லை , பசி இல்லை , பிணி இல்லை. ஒரு தங்கத்தில் இருந்து வடிவமைக்க பட்ட கம்மல், தோடு , வளயல் , மூக்குத்தியை உருக்கினால் மீண்டும் அதே  தங்கமாய் மாறும். அதுபோல் நாம் இறைவனை அடைவதினால் அவனோடு கலந்து அவனில் ஒரு அங்கமாகிறோம்.அவன் என்றும் இன்பமயமாய்  இருப்பவன் அவனோடு நாம் கலப்பதினால் நாமும் நிலையான இன்பம் கொண்டிருப்போம்.


தொடரும் ....

 

No comments:

Post a Comment