பரமாத்மாவின் வடிவம் என்ன ? (1)
நமது இந்துமதத்தில் இறைவனின் வடிவம் ஆன்ம( ஜோதி / ஒளி ) வடிவம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்பதையும் அது எப்படி என்பதையும் நாம் இந்த பதில் காண்போம்.
பல சித்தர்களும் , ரிஷிகளும் ,ஞானிகளும் , வள்ளலார் மற்றும் அய்யா வைகுண்டர் போன்றவர்கள் இறைவன் ஜோதி வடிவானவன் என்று கூறியுள்ளார்கள்.சரி முதலில் இறைவனுக்கு வடிவம் உண்டா என்பதை முதலில் பார்போம் . எந்த ஒரு பொருளையும் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் உருவாக்கும் கருவி , உருவாக்கும் நபர் , மூல பொருள் என்ற மூன்றும் முக்கியம். இவைகளில் ஒரு பொருளை உருவாக்க மூல பொருள் இல்லை என்றால் எந்த ஒரு பொருளும் உருபெற முடியாது , எதையும் உருவாக்கவும் முடியாது. அப்படி இருக்கையில் நமெக்கெல்லாம் உருவம் கொடுக்கும் இறைவனும் அங்கே ஒரு உருவாக்கும் நபராக இருந்தால் தானே நாம் மற்றும் இந்த அண்டங்கள் வடிவம் பெறுவது சாத்தியம். நமது வேதங்களின் படி நமக்குள் இருக்கும் ஆன்மா என்பது பரமாத்மாவில் இருந்து தோன்றிய ஒரு சிறிய தீ பொறி போன்றது. இந்த அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் பரமாத்மாவை மூல பொருளாய் கொண்டு தோன்றியவை. எப்படி மண்ணில் இருந்து பல மண்பாண்டங்கள் உருவாகிறதோ அதே போல்தான் நம்முடைய தோற்றங்களும். சரி அங்கே மண் என்ற மூல பொருள் இல்லை என்றால் மண்பாண்டங்கள் தோன்றுவது எப்படி . அதேபோல் மூல பரம்பொருள் ஒரு வடிவமும் இல்லாமல் இருந்தால் நாம் வடிவம் பெறுவது எப்படி ???? . நம் முன்னோர்கள் இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதாக கூறுகின்றனர் அவை ரூபம் , அருபம் , அருரூபம் .
ரூபம் என்றால் இறைவன் தற்காலிகமாக ஒரு வடிவத்தை பெறுவது , எடுத்துகாட்டாக இந்த பூமியில் தர்மத்தை காக்க இறைவன் எத்தனையோ அவத்தாரம் அவ்வபோது எடுத்துள்ளார் அல்லவா ??? அதைத்தான் இறைவனின் ரூபம் நிலை என்கிறோம் . ஆனால் இந்த நிலை நிரந்தரம் அல்ல . பிறகு அருபம் , அருபம் என்றால் எந்த ஒரு வடிவமும் இல்லாமல் இருப்பது இது இறைவன் எந்த ஒரு தொழிலையும் செய்யாமல் இருக்கும் நிலை .இது இந்த உலகம் , அண்டம் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து ஒடுங்கி இருக்கும் நிலை. ஆனால் இறைவன் எந்த ஒரு தொழிலையும் செய்யாமல் இருப்பதை விரும்பவில்லை . இதற்க்கு காரணம் நாம் பிரம்ம சூத்திரத்தில் காணலாம். பகவத் கீதையில் கூட கிருஷ்ண பரமாத்மா இதை பற்றி கூறியுள்ளார். எனவே இந்த நிலையும் தற்காலிக நிலையே ஆகும். சரி அப்ப இறைவன் எந்த நிலையில் தான் இருக்கிறார் என்றால் உருவமும் அல்லாமால் , அருபமும் அல்லாமல் இரண்டும் கலந்தே உள்ள நிலையில்த்தான் படைத்தல் காத்தல் ,அழித்தல் என தன் தொழிலை செய்து கொண்டிருக்கிறார் என்கின்றது நம் வேதங்கள். சரி இனி அந்த அருரூபம் நிலை எப்படி பட்டது என்று பாப்போம். அதை எப்படி கண்டு பிடிப்பது ??? ஒன்று நாம் நம் சொந்த முயற்சி மூலம் கண்டு அறியலாம் அல்லது அதனை கண்டு அறிந்தவர் என்ன கூறியுள்ளார்கள் என்பதை கேட்டு அறிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒன்று சொல் புத்தி இருக்க வேண்டும் அல்லது சுய புத்தி இருக்கவேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நமக்கு இரண்டுமே இல்லை என்பதுத்தான் உண்மை. சரி இனி நம் முன்னோர்கள் பரமாத்மாவின் வடிவம் என்ன என்பதை பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்று ஆராய்வோமா ?.ஏன் என்றால் நம் முன்னோர்களான ஞானிகள் , ரிஷிகள் , மற்றும் சித்தர்கள் இறைவனை கண்டு அறிந்திருகின்றார்கள். அவர்கள் மட்டும் என்வாறு கண்கொண்டு பிடித்தார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் வரும் ?. அவர்கள் ஒன்றும் நம்மை போல் முக்கை சுத்தி தலையை தொடுபவர்கள் அல்லர். நாம் நம் முன்னோர்கள் இறைவனை பற்றி என்ன கூறியுலார்கள் என்று ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் இறைவன் ஒளி (ஜோதி) வடிவானவன் என்று கூறுகிறார்கள். அது எப்படி என்பதையும் காண்போம்.
நாம் நமது வேதங்களை புரட்டி பார்த்தால் நாம் என்பது நமது உடல் அல்ல ஆன்மா என்றே கூறகிறது. ஆன்மா என்றால் என்ன ? எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உயிர் என்று சொல்லலாம், சரி ஒருவன் நடமாடும் மனிதன் அல்லது பிணம் என்று எதை வைத்து கூறுகிறோம்..உடலை வைத்தா ? அல்லது உயிரை வைத்தா ? . உயிரை வைத்துதானே ..!!! உடலில் உயிர் இருந்தால் அவன் மனிதன்... இல்லை என்றால் அது பிணம் அல்லவா. சரி அந்த ஆன்மாவின் தோற்றம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் ஆன்மாவின் பிறப்பிடம் பரமாத்மா என்கிறார். ஒவ்வொரு ஆன்மாவும் பரமாத்மாவின் அம்சம் என்கிறார். எத்தனையோ ஆன்மா என்னில் இருந்து பிரிந்தாலும் நான் எனது இயல்பில் இருந்து சிறிதளவும் குறைவதில்லை என்கிறார். அப்ப நமக்குள் இருக்கும் ஆன்மா என்பது அந்த பரமாத்மாவின் அம்சம் என்பது தெளிவாகிறது அல்லவா இங்கு. சரி அந்த ஆன்மாவின் நிலையை பற்றி கிருஷ்ண பரமாத்மா என்ன கூறுகிறார் என்றால் அதை நீரால் கழுவ முடியாது, கத்தியால் கிழிக்க முடியாது , தீயால் எரிக்க முடியாது என்கிறார் . அப்படியென்றால் அது என்ன வடிவமாக இருக்கும் என்று குழம்புவது தெரிகிறது !!! ...வருவோம் ஒவ்வொன்றாக அலசி ஆராய்வோம். நமக்கு ஒருவிஷயம் மட்டும் தெளிவாகிறது அது .. நம்முடைய ஆத்மா என்பது பரமாத்மாவின் அம்சம் என்று. அப்ப நம்முடைய ஆத்மாவை அறிந்தால் நாம் பரமாத்மாவை அறிய முடியும்தானே . பொதுவாக நம் வீட்டில் நம் அம்மா சாதம் வெந்துவிட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பார் ? அனைவருக்கும் தெரிந்ததுதான் ஒரு சோற்றை பதம் பார்த்தாலே போதும்தானே . இதைத்தானே நம் முன்னோர்கள் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறியுள்ளார்கள் . அதன் படி நாம் நமது ஆத்மாவை அறிந்துகொண்டாலே அந்த பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியும். இனி நாம் நம் ஆத்மாவின் வடிவம் என்ன என்பதையும் அதை எப்படி அறிவது என்பதயும் அடுத்த பதிவில் ஆராய்வோம் !!!! காத்திருங்கள் !!!!!!
( தொடரும் )